
கப்பல் மூழ்கிய பிறகு 11 உடல்களே கிடைத்திருந்தன. கப்பல் கடற்பரப்புக்குக் கொண்டுவரப்பட்டவுடன், அதனுள் இருந்த கடல்நீர் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு, அதனுள் இருந்த 19 உடல்களும் மீட்கப்பட்டன. அவற்றுள் சில மிக மோசமாகச் சிதைந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.
மீட்கப்பட்ட உடல்கள் மருத்துவப் பரிசோதனைக்காக ஹமத் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன், அவர்களது உடல்கள் தாயகம் திருப்பி அனுப்ப முயற்சிகள் செய்யப்படும் என்றும் அது இயலாவிட்டால் உள்ளூரிலேயே புதைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று நேபாள, இந்தியத் தூதரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment