
"அமெரிக்காவின் அனுமதியின்றி இஸ்ரேலால் எந்த ஒரு நாட்டையும் ஆக்ரமிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். பைடனின் அறிவிப்பு ஒரு அரசியல் தந்திரமே. இது போன்று முன்னரும் பல முறை நாம் இவர்களின் அறிவிப்புகளை நாம் கேட்டுள்ளோம். அணு ஆயுத விஷயத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அமெரிக்க ஒரு பக்கம் கூறிக் கொண்டே, மறுபக்கம் இது போன்ற தேவையற்ற அறிவிப்புகளை வெளியிடுவது வருந்தத்தக்கதாகும்" என லாரிஜானி மேலும் கூறினார்.இவ்விஷயத்தை ஈரான் மிக முக்கியத்துவம் கொடுத்தே காண்கிறது என்றும் ஒவ்வொரு சலனங்களையும் உற்றுநோக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதே நேரம், ஈரானை ஆக்ரமிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா பச்சை கொடி காட்டவில்லை என வெளியுறவு துறை அதிகாரி அயான் கெல்லி கூறினார்.
இஸ்ரேல் ஒரு சுதந்திரமான நாடு என்ற போதிலும் அது ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஏதும் மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாக எதுவும் தெரியவில்லை எனவும் அதற்கு துணை புரியும் விஷயம் குறித்து எதுவும் இதுவரை ஆலோசிக்கவில்லை எனவும் அவர் கூறினார். ஆனால் அதே நேரத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவிற்கு அலட்சியமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்
No comments:
Post a Comment