ரமல்லா: பலஸ்தீன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஹமாஸ் தலைவருமான இப்ராஹீம் அபூ ஸலீமை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. கஸ்ஸாவிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவரை இஸ்ரேல் இராணுவம் கடத்திச் சென்றிருந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பலஸ்தீனிலுள்ள மேற்கு கரையில் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த ஒரு பேரணியின் போது, 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட பலஸ்தீன் மக்கள் பிரதிநிதிகளை இஸ்ரேல் இராணுவம் கடத்திச் சென்றிருந்தது.
இவர்களில் சிலரைப் பல கட்டங்களில் இஸ்ரேல் விடுவித்திருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இப்ராஹீம் அபூ ஸலீம் இஸ்ரேலிய சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரை இஸ்ரேல் விடுவித்துள்ளது. முன்னர் இஸ்ரேல் கடத்திக் கொண்டு சென்ற பல பலஸ்தீனிய மக்கள் பிரதிநிதிகள் இன்னமும் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment