திண்டுக்கல்: டாம்கோ திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகள் மூலம் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு குழுக்கடன், தனிநபர் கடன் 4 சதவீத வட்டியில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட் டத்திற்கும் 80 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் இக்கடன் வழங்கப்படும். தனிநபர் கடனாக 25 ஆயிரம் ரூபாயும்,குழுக்கடனாக 5 லட்சம் ரூபாயும் கிடைக்கும். காய்கறி வியாபாரிகள், டெய்லர்கள், இட்லிக் கடை, பூக்கடை உட்பட சிறு வியாபாரிகள் தனிநபர் கடன் பெறலாம். பல்வேறு வகையான தொழில்களுக்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது.கடன் பெற விரும்புபவர்கள் கூட்டுறவு இணைப் பதிவாளரிடம் மட்டுமே விண்ணப்பங்களை வழங்க வேண்டும். இதற்காக கலெக்டர் தலைமையில் இணைப்பதிவாளர் மற்றும் கூட்டுறவு அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விண்ணப் பங்களை பரிசீலனை செய்து பயனாளிகளை தேர்வு செய்து சம்மந்தப் பட்ட கூட்டுறவு சங்கத் திற்கு தனது பரிந்துரையினை வழங்கும். பரிந் துரை செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும். அதேபோல் கடனை திரும்ப செலுத்தும் முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று சேர்ந்து விட்டதால், விரைவில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கடன் வழங்கப்படும்.
No comments:
Post a Comment