அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, July 20, 2009

மலேசியாவில் புதிய கட்சி உதயம் :இன்ட்ராப் தலைவர் துவக்கினார்


கோலாலம்பூர் : மலேசியாவில் இன்ட்ராப் தலைவர்களில் ஒருவரான உதயகுமார், மனித உரிமை கட்சியை துவக்கியுள்ளார்.



மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு சம உரிமை கோரியும், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை கண்டித்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோலாலம்பூரில் இந்தியர்கள் பலர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக உதயகுமார், கணபதி ராவ் உள்ளிட்ட 15 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில் உதயகுமார் 17 மாத சிறை தண்டனை முடிந்து கடந்த மே மாதம் விடுதலையானார். வக்கீலாக பணியாற்றி வந்த உதயகுமார் தற்போது, "மனித உரிமை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கியுள்ளார். இதற்கான விழாவில், இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர்.இக்கட்சியின் பொதுச் செயலராக உதயகுமார் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நிர்வாகிகள் பெயர் வெளியிடப்படவில்லை.



புதிய கட்சி துவக்கியது குறித்து உதயகுமார் குறிப்பிடுகையில், "மலேசிய ஆளும் கட்சி கூட்டணியும், எதிர்க்கட்சியும் இந்தியர்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை தீர்க்க முயற்சிக்கவில்லை. இந்தியர்களின் உரிமைக்காக போராடவே வக்கீல் தொழிலை துறந்து புதிய கட்சியை துவக்கியுள்ளேன். இன்ட்ராப் அமைப்பை, லண்டனில் உள்ள எனது சகோதரர் வேதமூர்த்தி வழிநடத்துவார்' என்றார்.அடுத்த பார்லிமென்ட் தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிடவும், சட்டசபை தேர்தலின் போது 38 தொகுதிகளில் போட்டியிடவும் மனித உரிமை கட்சி திட்டமிட்டுள்ளது.


No comments: