
மேலும் அவர் பேசுகையில் மலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க என்ன நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள், மேலும் இந்த வழக்கில் ஒரு சிலரை கைதுச்செய்ததோடு சரி மேற்க்கொண்டு எந்த முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை. அதற்கு காரணம் என்ன? என காட்டமாக கேட்டார். அதற்கு பதிலளித்த ரகுவன்ஷி உடனடியாக குற்றவாளிகளை கைதுச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதியளித்தார். தொடர்ந்து அபினவ் பாரத் என்ற ஹிந்து தீவிரவாத அமைப்பை கண்காணிப்பில் வைக்குமாறு உத்தரவிட்டார் அமைச்சர். இதனால் குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் மேலும் எவரையும் எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் கைதுச்செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மலேகான் குல் ஜமாஅத்தே தன்ஸீம் அமைப்பின் பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தியை சந்தித்து பிரபானி, ஜால்னா, பூர்னா ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளைப்பற்றிய விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார் கான்.
போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த காஜா யூனுஸ் வழக்கின் விபரத்தை காவல்துறை அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்ப்டுவர் என்று உறுதியளித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதற்கு மூத்த அனுபவமுடைய வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment