லிபரான் விசாரணைக் குழுவின் அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
1992ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்கை அமைக்கப்பட்ட லிபரன் விசாரணைக் குழு அண்மையில் தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிதம்பரம், தான் இந்த அறிக்கையின் நான்கு தொகுதிகளைப் படித்துவிட்டதாகவும், இந்த அறிக்கையை தாக்கல் செய்ய சட்டம் அனுமதித்துள்ள ஆறு மாதத்திற்குள் இந்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், இந்த அறிக்கையின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அப்போது தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment