அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக காணாமல் போன 6 ஆவணங்களை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. மேலும் 23 ஆவணங்களைத் தேடி வருகிறது.சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் 2000ம் ஆண்டில் காணாமல் போயின. மொத்தம் 29 ஆவணங்கள் காணாமல் போனயின.இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு அதிகாரி சுபாஸ்ஹான் சாத், டெல்லிககு அறிக்கை எடுத்துச் செல்லும்போது ரயில் விபத்தில் உயிரிழந்தார்.இதையடுத்து ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்தது. மேலும் சாத் மரணம் குறித்தும் விசாரிக்குமாறு கோரினார் முதல்வர் மாயாவதி.இதைத் தொடர்ந்து விசாரணையில் குதித்த சிபிஐ, 6 ஆவணங்கள், பழைய ஆவணங்கள் பாதுகாக்கும் இடத்தில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டுள்ளது. இவை தேவையில்லாதவை எனக் கருதப்பட்டு பழைய ஆவண காப்பகத்தில் போடப்பட்டிருந்தன.Thursday, July 23, 2009
அயோத்தி நிலம். ஆவணங்களை மீட்ட சிபிஐ
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக காணாமல் போன 6 ஆவணங்களை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. மேலும் 23 ஆவணங்களைத் தேடி வருகிறது.சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் 2000ம் ஆண்டில் காணாமல் போயின. மொத்தம் 29 ஆவணங்கள் காணாமல் போனயின.இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு அதிகாரி சுபாஸ்ஹான் சாத், டெல்லிககு அறிக்கை எடுத்துச் செல்லும்போது ரயில் விபத்தில் உயிரிழந்தார்.இதையடுத்து ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்தது. மேலும் சாத் மரணம் குறித்தும் விசாரிக்குமாறு கோரினார் முதல்வர் மாயாவதி.இதைத் தொடர்ந்து விசாரணையில் குதித்த சிபிஐ, 6 ஆவணங்கள், பழைய ஆவணங்கள் பாதுகாக்கும் இடத்தில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டுள்ளது. இவை தேவையில்லாதவை எனக் கருதப்பட்டு பழைய ஆவண காப்பகத்தில் போடப்பட்டிருந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment