சர ணடைவதற்காக வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்ல பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டினார்.
விடுதலைப் புலிகளுடனான சன்டையின்போது ராணுவப் படை தளபதியாக இருந்த சரத் பொன்சேகா போர் முடிந்த பின்னர் முப்படைகளின் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் ராஜபக்ஷ சகோதரர்களுடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த பொன்சேகா, ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுகிறார். "சண்டே லீடர்' பத்திரிகைக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் பொன்சேகா கூறியுள்ளதாவது:
முல் லைத் தீவு மாவட்டம், நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் சமாதானக் குழு தலைவர் சீவரத்தினம் பூலித்தேவன், அரசியல் குழுத் தலைவர் சிங்கம் நடேசன், ராணுவ கமாண்டர் ரமேஷ் ஆகியோர் சரணடைவதற்கு சில மணி நேரம் முன்னர், தாங்கள் முறையாக சரணடைய உதவுமாறு நார்வே உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் அவர்கள் மூவரும் வேண்டுகோள் விடுத்தனர்.
தொலைபேசி அழைப்புகளும், இ-மெயிலும் தொடர்ந்து வெள்ளம்போல வந்ததையடுத்து, மூவரும் சரணடைய இலங்கை அரசு ஒப்புக் கொண்டது. அச்சுறுத்தும் வகையில் இல்லாமல், வெள்ளைத் துணியுடன் 58-வது டிவிஷன் படைகளிடம் சரணடையுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
எனினும், மூன்று தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் சரணடையும்போது அவர்களை சுட்டுக் கொல்ல அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்ஷ உத்தரவிட்டார். அதன்படியே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று பொன்சேகா கூறியுள்ளார்.
ரா ணுவத் தளபதியாக பொன்சேகா இருந்தசமயத்தில், அவரது சொந்த ஊரான அம்பலன்கோடாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, "தனது தலைமையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் புதுமையான, மரபுசாராத முறையில் ராணுவம் போரிட்டதுடன், சரணடைய வந்த புலிகளைக் கூட ராணுவம் சுட்டுக் கொன்றது' என்று கூறினார்.
பொன்சேகா கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கே கூறியதாவது:
இது போன்றதொரு உத்தரவை கோத்தபய ராஜபக்ஷ பிறப்பிக்கவில்லை. புலிகளுக்கு எதிராக தான் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டதாக ஜூலை 10-ல் பொன்சேகா கூறியிருந்தார். தற்போதைய அவரது குற்றச்சாட்டு இதற்கு முரண்பாடாக உள்ளது.
பிரபாகரனின் பெற்றோர் தவிர 4 டாக்டர்கள், புலிகள் தலைவர்கள் தயா மாஸ்டர், சார்லஸ் மாஸ்டர் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தனர். அவர்கள் இன்னமும் உயிருடன் உள்ளனர். கெளரவமாகவும் நடத்தப்படுகின்றனர் என்றார்.
மூன்று பேர் சரணடைவது தொடர்பாக நார்வே மத்தியஸ்தர்கள் தன்னை அணுகவில்லை என அதிபரின் மற்றொரு சகோதரரும், அரசியல் ஆலோசகருமான பாசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

No comments:
Post a Comment