அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 16, 2009

சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க உதவும் சாதனம்


கலிபோர்னியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ரொட்ரிகோ டொமின்கேஸ், சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க விரும்பும் குடியேறிகளுக்கு வழிகாட்டும் இலத்திரனியல் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கடுமையாக பாதுகாக்கப்படும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கடக்கும் குடியேறிகள் பல ஆபத்துகளை கடந்து வர வேண்டியுள்ளது. மேலும் வழிகாட்டும் நபர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை அள்ளிக் கொடுக்க வேண்டிய நிலை. புதிய சாதனம், மொபைல் தொலைபேசிகளை தொடர்பு படுத்தும் GPS வலையமைப்பை பின்பற்றி இயங்கும். எந்தெந்த இடத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது, எந்தெந்த இடத்தில் சாதகமான வெப்பநிலை உள்ளது போன்ற தகவல்களை இந்த சாதனம் வழங்கும். சட்டவிரோதமாக குடியேறும் நோக்குடன் வரும் ஒருவர் நவீன சாதனத்தின் உதவியுடன் இலகுவாக எல்லை கடக்க முடியும். அமெரிக்க அரசின் மனிதாபிமானமற்ற குடியேற்றவாத சட்டத்தை எதிர்த்துப் போரிடும் நோக்குடன், இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க-மெக்சிக்கோ எல்லை கடப்பவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டாலும், ஐரோப்பாவிலும் இதற்கான தேவை இருக்கின்றது. எல்லை கடக்க வழிகாட்டும் சாதனத்திற்கான மென்பொருளை இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments: