அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 29, 2011

வெங்காய விலை கிலோ ரூ.10 ஆக குறைகிறது..

வெங்காய விலை பிப்ரவரி மாதம் கிலோ ரூ.10 ஆக குறையும் என்று வெங்காய வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் கூறினார். இதுபற்றி ஆசாத்பூர் வெங்காய வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திர ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது: டிசம்பர் மாத முதல் வாரத்தில் கிலோ ஸி20க்கு விற்ற பெரிய வெங்காய விலை கடைசி வார வாக்கில் கிலோ ரூ.80 ஆக உயர்ந்தது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழை காரணமாக விளைந்த வெங்காயங்கள் அழுகி விட்டன. அத்துடன் வெங்காய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய விலை நாடு முழுவதும் ஒரே சமயத்தில் கிலோ ஸி85 வரை விற்றது. வெங்காய விலையை கட்டுப்படுத்த புதிதாக உணவு அமைச்சராக பதவி கே.வி. தாமஸ் சில அதிரடி முடிவுகளை எடுத்தார். அதன்படி வெங்காய இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

அப்படி இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டு வந்த 4 சதவீத வரியையும் ரத்து செய்தது. இதன்காரணமாக டெல்லிக்கு பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த வெங்காயம் குஜராத் மாநிலம் கட்ச் அருகேயுள்ள துறைமுகத்திற்கு கப்பலில் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.

இதற்கிடையே மகாராஷ்டிராவின் நாசிக் கில் இருந்து டெல்லிக்கு லாரியின் மூலம் வெங்காய வரத்து கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் இறுதியில் கிலோ ரூ.85க்கு விற்ற வெங்காயம் ஜனவரி மாத 3வது வாரத்தில் கிலோ ரூ.40 ஆக குறைந்துள்ளது. அதாவது டிசம்பர் மாதம் விற்ற விலையை விட 52 சதவீதம் விலை குறைந்துள்ளது.

இந்த மாதம் நல்ல தரமான பெரிய வெங்காயத்தின் மொத்த விலை கிலோ ரூ.15 ஆக இருக்கிறது. அடுத்த மாத இறுதியில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.10 ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயத்தின் மொத்த விலை இப்போது குறைந்தாலும் அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய சில நாட்கள் ஆகலாம்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பெரிய வெங்காய மார்க்கெட்டுகளான லாசல்கான் மற்றும் பிம்பல்கான் ஆகிய மொத்த விலை மார்க்கெட்களில் வெங்காய விலை கணிசமாக குறைந்து விட்டது. இவ்வாறு டெல்லியில் உள்ள ஆசாத்பூர் வெங்காய மார்க்கெட்டின் பொதுச் செயலாளர் ராஜேந்திர ஷர்மா கூறினார்.

(dkn)

No comments: