நானாக எதுவும்
பழகவில்லை ..,
... என்னை ..,
பழக்கியிருக்கிறார்கள் ....
சிறுவயதில் ..,
கடைக்கு போக மறுத்த
போது.,
விளையாட்டாய்
அம்மா தந்த
ஐந்து ரூபாய்
.. என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
நண்பனை ,வீட்டிற்கு
அழைத்து
வந்த போது ...
வீட்டில் இருந்தவர்கள்...
பெயர் கேளாமல் ..,
சாதியை கேட்டது .
...என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
வயதான என்
தாத்தா-பாட்டியை
முதியோர் இல்லத்தில்
தவிக்க விட்டு வந்த
என் பெற்றோர்கள் ..
....என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
விவரம் தெரியாத
வயதில் ...
அப்பாவிற்கு ...வாங்கி
கொடுத்த சிகரேட்...
.....என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
கடைக்காரர் தெரியாமல்
கூடக் கொடுத்த சில்லரையை
திருப்பி கொடுக்காமல்
வந்தது ....
......என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
.
இப்படித்தான்
ஒவ்வொருவரும்...
எங்கெங்கோ...
எதையெதையோ
பழகி இருக்கிறோம்...
நா(னா)மாக...எதுவும்
....பழகவில்லை .....
No comments:
Post a Comment