அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 29, 2011

இணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய


இணையத்தில் நாம் வீடியோக்களை கண்டிருப்போம். இதில் ஒரு சில வீடியோக்களை நாம் கணினியில் டவுன்லோட் செய்ய நினைத்தால் அந்த தளங்களில் டவுன்லோட் செய்யும் வசதியை அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள். ஆகையால் இந்த வீடியோக்களைடவுன்லோட் செய்ய நாம் ஒருசில மென்பொருட்கள் அல்லது சில இணையதளங்களில் உதவியோடு டவுன்லோட் செய்வோம். இந்த வரிசையில் நாம் இன்று பார்க்கும் மென்பொருள் மிகவும் பயனுள்ளது.



மென்பொருளின் பயன்கள்:

o இந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் இருக்கும் சுமார் 280 தளங்களில் இருந்து நமக்கு தேவையான வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம். எந்த மென்பொருளிலும் இவ்வளவுதளங்களில் இருந்து டவுன்லோட் செய்ய முடியாது.

o ஒரே நேரத்தில் 1 முதல் 20 வீடியோக்கள் வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

o வீடியோக்களை தரவிறக்கும் போதே CONVERT செய்து கொள்ளும் வசதி.

o 3.19 அளவே உடைய மிகச்சிறிய இலவச மென்பொருள்.

பயன்படுத்தும் முறை:

o கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

o இப்பொழுது இன்ஸ்டால் செய்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும் வீடியோவின் URL கொடுத்து அந்த DOWNLOAD என்ற பட்டனை அழுத்துங்கள்.

o ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யப்படும் எண்ணிக்கை இதில் 2 ஆக இருக்கும். இதனை மாற்றSETTING க்ளிக் செய்து அதில் வரும் விண்டோவில் உங்கள் எண்ணிக்கை தேர்வு செய்யுங்கள்.

o இதில் அதிக பட்சம் 20 வீடியோக்களை ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யுமாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

o டவுன்லோட் செய்யும் போதே வீடியோவை நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி உள்ளதால் டவுன்லோட் செய்து CONVERTAR மென்பொருள் கொண்டு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

o இதற்க்கு OUTPUT SETTINGS என்பதை க்ளிக் செய்து தேவையான பார்மட்டை செட் செய்து கொள்ளுங்கள்.

o இது போன்று வீடியோக்களை நாம் மிக சுலபமாக இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். 280தளத்திற்கும் மேலே இந்த மென்பொருள் மூலம் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இந்த பட்டனை அழுத்துங்கள்



No comments: