அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 29, 2011

மகரஜோதி சர்ச்சை: விசாரணை நடத்த விரும்பவில்லை: ஐகோர்ட்டில் கேரள அரசு தகவல்



மகரஜோதி மனிதரால் ஏற்றப்படுவதா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தும் திட்டம் இல்லை என்று கேரள ஐகோர்ட்டில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலை அருகே கடந்த 14ந் தேதி ஏற்பட்ட நெரிசலில் 102 பக்தர்கள் பலியானார்கள். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரி, முன்னாள் மேல்சாந்தி ஸ்ரீகுமார், பகுத்தறிவாளர் சங்கம் உள்பட 3 பேர் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், பி.எஸ்.கோபிநாத் ஆகியோர் அடங்கிய தேவசம் பெஞ்ச், மகரஜோதி' எனப்படுவது, மனிதரால் ஏற்றப்படுவதா? என்றும், மகரவிளக்குக்கும், மகரஜோதிக்கும் இடையிலான வேறுபாடு குறித்தும் கேள்வி கேட்டனர்.
இதுபற்றி சபரிமலை தலைமை பூசாரி கண்டரரு மகேஸ்வரரு கூறுகையில், மகரஜோதி என்பது வானில் தோன்றும் நட்சத்திரம். மகரவிளக்கு என்பதுதான், பொன்னம்பலமேட்டில் மனிதர்களால் ஏற்றப்படும் தீபம் என்றார்.

இந்நிலையில், 27.01.2011 அன்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகளின் கேள்விக்கு கேரள அரசு சார்பில் அரசு பிளீடர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
மகரஜோதி', மனிதர்களால் ஏற்றப்படுவதா? அல்லது அது வானியல் அற்புறதமா? என்பது குறித்து கேரள அரசு விசாரணை நடத்த விரும்பவில்லை. இதை முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார். மகரஜோதி, லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதால், அதுபற்றி விசாரணை நடத்த மாட்டோம் என்று அச்சுதானந்தன் கூறியுள்ளார் என, அரசு பிளீடர் கூறினார்.


இதையடுத்து, இந்த விவகாரம் பொதுநலன் சம்பந்தப்பட்டது என்பதால், இம்மனுக்களை மேல்விசாரணைக்காக தலைமை நீதிபதி செலமேஷ்வருக்கு மாற்றுவதாக தேவசம் பெஞ்ச் அறிவித்தது.


தினமனி செய்தி:

கொச்சி, ஜன.27: சபரிமலை மகர ஜோதி மற்றும் மகர விளக்கு தொடர்பான சர்ச்சை குறித்து எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை என உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக பகுத்தறிவாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு உள்ளிட்ட 3 மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் கோபிநாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு அரசு வழக்கறிஞர் பதில் மனுத்தாக்கல் செய்தார்.இதுதொடர்பாக எந்தவித விசாரணையும் நடத்த அரசு விரும்பவில்லை என முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார் என்று அரசு வழக்கறிஞர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.மக்களின் சமய நம்பிக்கை குறித்த விவகாரமாக இருப்பதால் மகரஜோதி தெய்வீகமானதா அல்லது மனிதரால் உருவாக்கப்படுவதா என்பதை அரசு விசாரிக்காது என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை அவர் சுட்டிக்காட்டினார்.


No comments: