ஹைட்ரஜனை வைத்து புதிய மூலக்கூறுகளுடன் கூடிய புதிய எரிபொருள் ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பேரா. ஸ்டீபன் பென்னிங்டன் தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த ச்செயற்கை எரிபொருளைக் கண்டு பிடித்துள்ளனர். "இது சாதாரண பெட்ரோலை விட 3 மடங்கு சக்தி வாய்ந்தது. வாகனங்களில் அடைக்கப்பட்டு அடுத்த ஆண்டு சோதனை நடத்தப்படும். பின்னர் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்" என்றும்
"இந்த எரிபொருள் மூலம் கார்கள் மற்றும் எவ்வித எந்திரங்களையும் இயக்க முடியும். இதில் இருந்து வெளியாகும் புகையால் காற்றில் மாசு ஏற்படாது.சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. வெளியாகும் வாயு கார்பனைப் போன்று மக்களின் உடல் நலத்துக்குத் தீங்கு இழைக்காது.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த எரிபொருள் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புதிய பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருள், பெட்ரோல் பங்க்குகள் மூலம் விற்பனையாக இன்னும் 3 ஆண்டுகளாகும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment