அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, February 8, 2011

உலகப்புகழ் வலைப்பதிவு 315 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

உலகின் முன்னணி வலைப்பதிவாக கருத்தப்படும் அமெரிக்காவை சேர்ந்த ஹஃபிங்டன் போஸ்ட் 315 மில்லியன் டாலருக்கு ஏ.ஒ.எல்(AOL) கம்பெனிக்கு விற்கப்பட்டது. அதுவும் மூந்நூறு டாலர் உடனடியாக கையிலே கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் மட்டும் பன்னிரண்டு கோடி வாசகர்களும் உலகம் முழுவதும் இருபத்தி ஏழு கோடி வாசகர்களையும் கொண்ட இந்த வலைபாதிவு இன்று விற்றதாக அறிவிக்கப்பட்டது. அதில் பணிபுரியும் முன்னணி இயக்குனர் மற்றும் சந்தாதாரர்கள் சம்மத்துடன் இந்த ஒப்பத்தம் முடிவானது.
நடுவடைந்து வரும் ஏ.ஒ.எல் நிறுவனம் இதன் மூலம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று சொல்லப்படுகிறது. இணையத்தளங்களில் சொல்லப்படும் விளம்பர வருமானம் 2009′ஐ விட 2010′இல் 1.5 சதவீதம் குறைந்து உள்ளது. அதாவது: 6.8% – 2009, 5.3%- 2010. இதை உயர்த்தும் நோக்கமாகவே இந்த வலைப்பதிவை வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஹஃபிங்டன் போஸ்ட்டில் எழுபது சம்பள பணியாளர்களும், ஆறாயிரம் வலைப்பதிவாளர்கள் சம்பளம் இன்றி இலவசமாக தினமும் எழுதி வந்தனர்.

No comments: