அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 11, 2011

ஷொராபுதீன் ஷேக் போலி எண்கவுன்ட்டர் ரிப்போர்ட்!

புது டெல்லி: குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாக கூறி ஷொராபுதீன் என்ற வாலிபர் சில வருடங்களுக்கு முன்னால் சுட்டுக்கொல்லப்பட்டார். அது போலியான என்கவுண்டர் என்ற உண்மை ஏற்க்கனவே வெளிவந்த நிலையில் இன்று அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையை ஆர்.டி.ஐ வெளியிட்டுள்ளது. அவருடையை உடம்பில் 5 முறை குண்டு துளைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1 முறை அவரது மூளையிலும், 3 முறை கால்களிலும், மீதி ஒரு முறை உடம்பின் மேற்பகுதியிலும் துளைத்தது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதிலே தலையில் சுடப்பட்டதால், குண்டு மூளையை துளைத்து பிடறி வழியாக வெளியேறியுள்ளது.
ஆர்.டி.ஐ யில் பணிபுரியும் அஃப்ரோஸ் ஆலம் ஷாஹில் என்பவர் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டார். ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுஸர்பீ-யின் கொலை வழக்கில் எத்தனையோ கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இக்கொலைக்குற்றத்தின் முக்கிய ஆவணாமாக கருதப்படும் பிரேத பரிசோதனை அறிக்கை முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
பீ.ஜே மருத்துவக்கல்லூரி, மற்றும் அகமதாபாதில் உள்ள சிவில் மருத்துவமனையைச்சேர்ந்த 5 மருத்துவர்கள் கொண்ட குழுவால் ஷொராபுதீனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 26ஆம் தேதி மாலை 4.00 மணி அளவில் பரிசோதனை தொடங்கியதாக மருத்துவர் குழு தெரிவிக்கிறது. அம்மருத்துவர்கள் கூறும்போது ஷொராபுதீன் அவர்கள் பரிசோதனை செய்யபட்ட நேரத்திலிருந்து சமார் 12 மணி நேரத்திற்க்கு முன்பாகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை கூறும் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஷொராபுதீன் மிக அருகாமையில் இருந்துதான் சடப்பட்டுள்ளார் என்றும், அப்படி சுடப்பட்டபொழுது அவர் படுத்து இருந்த நிலையிலோ அல்லது குனிந்து இருந்த நிலையிலோ இருந்திருக்கலாம் என்று கூறுகிறது. ஆனால் காவல் துறையின் அறிக்கையோ ஷொராபுதீன் தப்பி ஓட முயன்ற பொழுதுதான் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற பல எண்கவுன்ட்டர் வழக்குகளை விசாரித்து வரும் சுப்ரதீப் சக்ரவர்த்தி கூறும்போது தன்னுடைய விசாரனைக்கு சாதகமாக இந்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது என்றும், இது உண்மையிலேயே போலி எண்கவுன்ட்டர் தான் என்றும் நீரூபனமாகியுள்ளது என்றார்.
இந்த பரிசோதனை அறிக்கை மட்டும் முன்பே வெளியிடப்பட்டிருந்தால் காவல்துறையினர் கூறுவது படவர்த்தனமான் பொய் என்பது முன்பே தெரிந்திருக்கும் என்று கூறினார். காவல்துறையினர் கொடுத்த அறிக்கையையும் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால் காவல்துறையினரால் எந்த அளவிற்க்கு பொய் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை அறியலாம் என்று கூறினார்.
சகரவர்த்து கூறும்போடு வழக்கறிஞர் ஹுஜேஃபா அஹமதி கூறியதும், இந்த பிரேத பரிசோதனை அறிக்கையும் ஒன்றாகியுள்ளது. கொலை நடைப்பெற்று பல மாதங்களுக்கு பின்னால் இன்று அது போலியான எண்கவுன்ட்டர் என்ற உண்மை தெரியவந்துள்ளது என்றார்..
ஷொராபுதீன் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் நாள் அகமதாபாதில் வைத்து குஜராத மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் காவல்துறையினர் கூறியது ஷொராபுதீன் லக்ஸர்-இ‍-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச்சார்ந்தவர் என்றும் தப்பி ஓட முயன்ற போது சுட்டுக்கொன்றதாகவும் கூறினர்.

ஆனால் உண்மை என்னவெனில், ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுஸர்பீ குஜ்ராத மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையைச்சேர்ந்த காவல்துறையினரால் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று கடத்தப்பட்டனர். ஷொராபுதீன் ஒரு அரசு பேருந்திலே ஹைதராபாதிலிருந்து குஜராத் வந்து கொண்டிருந்த போது நவம்பர் மாதம் 26 தேதி அன்று அதிகாலையில் நெடுஞ்சாலையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பின்னர் 2007 ஆண்டு ஷொராபுதீனின் மனைவி கவுஸர்பீயும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக குஜராத் அரசாங்கம் கூறியது.
இதனைத்தொடர்ந்து சந்தேகத்திற்க்கு இடமான இந்த கொலை வழக்கை பிரசாந்த் தாயல் மற்றும் தாயினிக் பாஸ்க்கர் என்ற இருவர்களை நீதி மன்றத்தின் உத்தரவில் பேரில் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். பின்னர் இந்த கொலை ஒரு போலியான எண்கவுண்ட்டர் என்ற உண்மையை வெளிப்படுத்தி, டெபுடி கமிஷ்னர் டி.ஜி. வன்சாரா, ஐ.பி.எஸ் அதிகாரி அபே சுதசாமா, மற்றும் குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

No comments: