அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 26, 2011

கல்லூரியில் கலவரம் - 1 ஆம் தேதி வரை மூடப்பட்டது!

கல்லூரி மாணவனின் தற்கொலையை அடுத்து ஏற்பட்ட போராட்டம் சாலை மறியலில் ஆரம்பித்து கல்லூரியை மூட வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இது பற்றிய விபரம் வருமாறு:

சென்னை செங்குன்றம் அருகே இருக்கும் பாடியநல்லூரைச் சேர்ந்தவர் தனபால். இவர் கூலித்தொழிலாளியாக இருக்கிறார்.
இவரது மகன் இளையராஜா (வயது 20). இவர் வியாசர் பாடியில் உள்ள அம்பேத்கார் கல்லூரியில் முதலாம் ஆண்டு BBA படித்து வந்தார்.

இளையராஜா கல்லூரிக்கு சரியான செல்லாமல் அதிகமாக விடுமுறை எடுத்த காரணத்தால் பள்ளி நிர்வாகம் இவரை தேர்வு எழுத அனுமதிக்க இயலாது என்று கூறி விட்டது. இதனால் மனம் உடைந்த இளையராஜா தற்கொலை செய்து கொண்டார்.

இத்தகவல் கல்லூரியில் பரவியதும் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களோடு இளையராஜாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, கல்லூரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அத்தோடு அல்லாமல் கல்லூரி அலுவலகத்திலுள்ள மேஜை- நாற்காலிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.


எனவே கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் காவல்துறையில் புகார் செய்ததைத் தொடர்ந்து, கல்லூரியை சேதப்படுத்தியதாகக் கூறி ராஜேஷ், விஜயகுமார், கிருஷ்ணன், வசந்தகுமார், சக்திவேல், ஜெயராஜ், புருஷோத்தமன், பாபு, முகமது, அன்சாரி, ராஜசேகர், பிரவீன், வெங்டேசன், நாகராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 15 கல்லூரி மாணவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே புகாரின் அடிப்படையில் மாணவன் இளையராஜாவின் தந்தை தனபால் மற்றும் உறவினர்கள் அன்பு, காமராஜ், திருநாவுக்கரசு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டின் உத்தரவின் பேரில்புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


கல்லூரியில் நடைபெறும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக கல்லூரி மே 1-ம் தியதி வரை மூடப்பட்டு அனைத்துத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments: