உலகில் முக்கியமாக பிரபலமானவர்களின் முகங்களை நமக்கு
நொடியில் தேடிக் கொடுக்க ஒரு தளம் உதவுகிறது இத்தளத்தில்
சென்று நமக்கு பிடித்த பிரபலங்களை எளிதாக தேடலாம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
நமக்கு தேவையான புகைப்படங்களை கூகிள் Images -ல் சென்று
தேடினால் பெரும்பாலும் குப்பையான படங்கள் தான் முதலிடம்
பிடிக்கிறது இதைத்தவிர்த்து நாம் தேடும் பிரபலங்களின் முகங்களை
கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.ifacesearch.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம் தேட
விரும்பும் பிரபலத்தின் பெயரை கொடுத்து Let’s Search என்ற
பொத்தானை சொடுக்கினால் போதும் அதே திரையில் நமக்கு நாம்
தேடிய பிரபலங்களின் முகங்களை வரிசையாக அழகாக நேர்த்தியாக
கொடுக்கிறது கீபோர்ட்-ல் இருக்கும் வலது மற்றும் இடது பக்க
அம்புக்குறியை அழுத்தி ஒவ்வொரு படங்களாக பார்க்கலாம்.
பிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட
உதவும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
5 ஆண்டு உழைப்பில் யூடியுப்-ன் நிகரில்லாத மெகா சாதனை
பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்
லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி
ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம்.
வின்மணி சிந்தனை நல்லது செய்யும் அனைவருமே உயர்ந்தவர்கள் தான். என்றாவது ஒரு நாள் நாம் செய்த உதவிக்கு பலன் கிடைக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.முதன் முதலில் குடைவரைக் கோவிலை அமைத்தவர் யார் ? 2.அஜந்தா குகை ஒவியங்கள் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது ? 3.வெங்கட் ராமன் இந்தியாவின் எத்தனையாவது ஜனாதிபதி ? 4.வரலாற்று ஆய்வாளர்கள் எந்த நாட்டில் அதிகம் இருந்துள்ளனர்? 5.கலிங்கப்போர் எப்போது நடைபெற்றது ? 6.இந்தியாவில் யாருடைய காலம் பொற்காலம் என அழைக்கப்பட்டது ? 7.முதல் உலகப்போரில் எத்தனை நாடுகள் கலந்து கொண்டது ? 8.இந்தியத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு ? 9.இந்திராகாந்தி இரண்டாவது முறையாக பிரதமர் பதிவியேற்ற ஆண்டு ? 10.முதல் வட்டமேஜை மாநாடு லண்டலின் கூட்டப்பட்ட ஆண்டு ? பதில்கள்: 1.அசோகர்,2.குப்தர்கள்,3.8,4.சீனா,5.கி.மு. 261, 6.குப்தர்கள் காலம், 7.61 நாடுகள், 8.1912, 9.1967, 10.1930.
இன்று ஏப்ரல் 24
பெயர் : சச்சின் டெண்டுல்கர் பிறந்த தேதி : ஏப்ரல் 24, 1973 தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட்போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே, வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். உங்களால் இந்தியாவுக்கு பெருமை.
No comments:
Post a Comment