கோவை: அடுத்தடுத்து பல இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் மாயமானதை தொடர்ந்து கோவை நகரம் அதிச்சியில் ஆழ்ந்துள்ளது.
சமீப காலமாக கோவையில் வீட்ட்டை விட்டு வெளியில் செல்லும் பல இளம் பெண்கள் வீடு திரும்புவதில்லை. கோவை ரத்தினபுரி பாலுசாமி நகரை சேர்ந்தவர் சிபி விஷ்ணுதாஸ் இவரது மனைவி கற்பகம்(22). கடந்த 13ம் தேதி வேலை தேடி செல்வதாகக் கூறி தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதேபோல் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள காமராஜர்புரம் முதல் வீதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் திவ்யா (வயது 18), கடந்த 12ம் தேதி கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் மாயமானார்.
இதையடுத்து சிங்காநல்லூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் பிரவீணா (வயது 23). கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. மேலும் கோவை தொப்பிலியாம் பாளையத்தை சேர்ந்தவர் தன்யா யாழினி (வயது 22). தனியார் கல்லூரி ஊழியர். கடந்த 18ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மாயமானார்.
சின்னத்தடாகம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த செல்வராஜ் மகள் உமா மகேஸ்வரி(18). பி.காம் முதல் ஆண்டு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ராமநாதபுரம் ஆர்.என்.புரம் நேதாஜி நகர் முதலாவது வீதியை சேர்ந்தவர் சந்திரபோஸ். மகன் நடராஜன்(24). கடந்த 19ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மேலும் கோவை வடவள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவரது மகள் பத்மப்பிரியா (வயது 19). கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த 11ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றவர் திரும்பவில்லை.
No comments:
Post a Comment