சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த சென்ற சச்சின் டெண்டுல்கர் பற்றி ஊடகங்கள் அனைத்தும் கவர் செய்து செய்தி வெளியிட்டன..,கவாஸ்கர் உட்பட கிரிக்கெட் நட்சத்திரங்கள்,சிரஞ்சீவி உட்பட தெலுங்கு நட்சத்திரங்கள்,சந்திரபாபு உட்பட தெலுங்கு அரசியல்வாதிகள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்துள்ளனர்...பாடகி பி.சுசீலா அவர்கள் கதறி அழுதது...பக்தர்களை மேலும் துக்கத்தில் ஆழ்த்தியது...நடிகை அஞ்சலி தேவி மயங்கி விழுந்தார்..எத்தனையோ பகதர்கள் நெஞ்சில் வாழும் தெய்வமாக விளங்கிய சாய்பாபா மறைந்துவிட்டார்..என்ற செய்தி...வெறும் இறப்பு செய்தி மடுமல்ல.பலரது ஆறுதல் தூணாக இருந்த சாய்பாபா மறைந்துவிட்டார் என்றல்,இனி தங்களுக்கு ஆறுதல் யார் என்ற விரக்தியே பல பக்தர்கள் முகத்தில் தேங்கியுள்ளது...
தன்னம்பிக்கையும்,தைரியமும் கொடுத்து,ஒருவனை உற்சாகப்படுத்துவதே நல்ல குருவின் கடமையாகும்..அதை சரிவர பல லட்சம் பக்தர்களுக்கு செய்தவர் சாய்பாபா.
ரஜினி,இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சி கூட்டத்தில் கலந்துகொண்டாரா என்பது தெரியவில்லை..கலந்திருந்தால் ஊடகங்கள் இந்நேரம் செய்தியாக்கியிருக்கும்.
ரஜினி சாய்பாபா வின் தீவிர பக்தர்..சென்னைக்கு சாய்பாபா வந்தபோது,ரஜினி அவரை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.சாய்பாபா என்ன காரணத்தாலோ மறுத்துவிட்டார்.பின்பு சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு சென்று,அவரது குடும்பத்தாருக்கு ஆசி வழங்கி விட்டு,அமைச்சர் துரைமுருகனுக்கு காற்றில் இருந்து மோதிரம் ஒன்று வரவழைத்து தந்துவிட்டு,சென்றுவிட்டார்...
ரஜினி இது பற்றி வருத்தப்படவில்லை..தனக்கு பிராப்தம் இல்லையென்று நினைத்துக்கொண்டார்.அழைத்தேன்..மறுபடியும் ஒரு சினிமா விழாவில்,அதாவது கலைஞருக்கு பாரட்டுவிழாவில்,நான் சாய்பாபாவை அழைத்தேன் வரவில்லை...கலைஞர் வீட்டுக்கு கூப்பிடாமலேயே செல்கிறார்..நான் கடவுளை விழுந்து விழுந்து கும்பிடுறேன்...அவர் வரவில்லை..கடவுளெ இல்லையென்று சொல்லும் கலைஞர் வீட்டுக்கு கடவுள் போறார்...கடவுளெ விரும்பக்க்க்கூடியவர் தான் கலைஞர்..என ஐஸ்கட்டியல்ல..ஐஸ்மலையையே கலைஞர் மீது வைத்தார் ரஜினி.
நடிகர் ஜெயஷங்கர் மறைந்தபோது,ரஜினி செல்லவில்லை..காரணம் கேட்டபோது,அவர் புன்னகை எனக்கு ரொம்ப பிடிக்கும்..எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் ஜை சாரை நான் மரண கோலத்தில் பார்க்க விரும்பவில்லை என்றார்....
அதே மனநிலையில் தான் ,ரஜினி சாய்பாபா அஞ்சலிக்கு கூட செல்லவில்லை என நினைக்கிறேன்...
No comments:
Post a Comment