லிபியாவின் சர்த் நகரில் 'இறுதித் தாக்குதல்' என்று தாங்கள் வருணிக்கும் ஓர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக மோதல் முன்னரங்கத்தில் உள்ள தேசிய இடைக்கால ஆட்சி சபையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடாஃபிக்கு விசுவாசமான படையினர் வலுவாகவுள்ள கடைசி ஒரு சில இடங்களில் சர்த் நகரமும் ஒன்று.
இந்த ஊரில் இரண்டு நாள் இடைக்கால போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டிருந்த சமயத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊரை விட்டு வெளியேறியிருந்தனர்.
வெளியேற வழியில்லாமலும்,பயந்துகொண்டும் ஆயிரக்கணக்கானப் பொதுமக்கள் நகருகுள்ளேயே இன்னும் சிக்குண்டிருப்பதாக தப்பி வெளியேறியவர்கள் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்நகரின் மையப் பகுதியில் ரொக்கெட் குண்டுகளும் மோர்டார் குண்டுகளும் வீசப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment