புதுடில்லி: வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்கள் யார் என்பதிலும் , அவர்கள் வருமான செல்வு என்ன என்பதை நிர்ணயித்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து திட்டக்கமிஷன் துணை தலைவர் மாண்டேசிங், மத்திய அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களை எந்த அளவு நிதி செலவின் அளவுகோலாக கொண்டு முடிவு செய்வது என்பது குறித்து திட்டக்கமிஷன் தலைவர் இன்று இறுதி முடிவு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த அக்., 11 ல் சுப்ரீம் கோர்ட்டில் திட்டக்கமிஷன் அபிடவிட் தாக்கல் செய்தது. இதில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் காங்., பொதுசெயலர் ராகுலுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் மேலும் திட்டக்கமிஷனில் இடம் பெற்றிருக்கும் காங்கிரசாரும், சமூக ஆவர்வலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புறத்தில் 32 ரூபாய்க்கு மேல் செலவழிப்போர் கிராமப்புறத்தில் 26 ரூபாய்க்கு மேல் செலவழிப்போர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வர மாட்டார்கள். இதற்கு கூடுதலாக செலவழிப்போர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுவர். ஒரு நாய் மட்டுமே இந்த ரூபாயில் வாழ முடியும். இது கூட திட்டக்கமிஷனுக்கு தெரியாதா என்று எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை மாண்டேசிங் அலுவாலியா சந்தித்து பேசினார்.
மத்திய அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் , திட்டக்ககமிஷன் துணை தலைவர் மாண்டேசிங் அலுவாலியா சந்தித்து பேசினர். சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். நிருபர்களிடம் பேசிய அலுவாலியா; கூறுகையில் நாங்கள் இருவரும் வறுமைக்கோட்டுக்குள் யாரை கொண்டு வருவது , எந்த அடிப்படையில் சேர்ப்பது என்றும் ஆலாசித்தோம். இதில் இருதரபரப்பினர் இடையே நல்ல முடிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நல்ல முறையில் நடந்துள்ளது. முக்கியமான விஷயங்களில் நல்ல தீர்வு ஏற்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து கூறுகையில் நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்கள் வருமான செலவு ரூ. 32 என்பது திட்டக்கமிஷனின் நோக்கம் அல்ல. அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது. டென்டுல்கள் கமிஷன் அறிக்கையை பரிசீலனையில் கொண்டுள்ளோம். இந்த அளவு வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்கள் பெறும் நன்மையை பாதிக்காது. சமூக பொருளாதார கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது .இதுவே பயனாளிகளை தேர்வு செய்யும் என்றார்.
No comments:
Post a Comment