தாய்லாந்து : கடந்த ஒரு வாரமாக பேசப்பட்டுவரும் தாய்லாந்து வெள்ளத்தின் சீற்றம், தற்போது குறைந்த போதிலும், அம்மக்களின் வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிறந்தது ஒரு யானைக் குட்டி.
விலங்குகளையும் விட்டுவைக்காத வெள்ளம்:
விலங்குகளையும் விட்டுவைக்காத வெள்ளம்:
கடந்த வாரம் தாய்லாந்தில், அடித்து நொறுக்கிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைப் பற்றி தகவல்கள் வந்துக்கொண்டே இருக்கும் இந்நிலையில், வெள்ளம் எவ்வித வேறுபாடுமின்றி, 381 உயிர்களை பலி வாங்கியது. மேலும் அந்நாட்டின் நினைவுச் சின்னங்களையும் சூறையாடிச் சென்றது. வரலாற்று நகரமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அயுத்தயாவில் வெள்ளக்காடானதால், ஒரு யானை வளர்ப்புக் கூடமே ஆறாய் காட்சியளித்ததில், மதிற்சுவரைத் தாண்டி யானைகள் தனித்தனியே சிதறியடித்து ஓடின.
நம்பிக்கையூட்டிய குட்டி யானை:
இவ்வாறு, சிதறி ஓடிய யானைகளில் ஒன்று, ஒரு குட்டி யானையை மூன்று நாட்களுக்கு முன்பு ஈன்றது. இந்த குட்டி யானையை பார்த்த மக்கள் தங்கள் இழப்புகளை மறந்து, ஓரளவு தங்கள் இயல்பான மனநிலைக்கு, திரும்பியதாக தகவல்கள் வெளியாகின்றன.
No comments:
Post a Comment