இஸ்லாமாபாத்:ஜமாஅத்து தஃவா அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர்(ரூ.50 கோடி) பரிசு அறிவித்துள்ள அமெரிக்காவின் அடாவடியை கண்டித்து பாகிஸ்தான் நகரங்களில் நடந்த பேரணியில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது.
திஃபா-இ-பாகிஸ்தான் கவுன்சில் என்ற அமைப்பின் தலைமையில் மக்கள் பேரணிகளில் அணி திரண்டனர். பாக். கட்டுப்பாட்டு கஷ்மீரின் தலைநகரான முஷஃபராபாதில் அமெரிக்காவின் கொடி எரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவிற்கு எதிராக புனிதப்போரை துவக்க அழைப்பு விடுத்தனர். அமெரிக்காவின் இத்தகைய விவேகமற்ற அறிவிப்புகள், முஸ்லிம் சமூகத்தை துப்பாக்கி ஏந்த தூண்டுவதாக ஜமாஅத்து தஃவானின் மூத்த தலைவர் அப்துல் அஸீஸ் அலவி கூறினார்.
இஸ்லாமாபாத்தின் ப்ரஸ் க்ளப் முன்பாக அமெரிக்காவை கண்டிக்கும் முழக்கங்களுடன் பேனர்களை ஏந்தி 500 பேர் போராட்டம் நடத்தினர். லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு பேரணியில் மக்கள் வெள்ளம் கரை புரண்டது.
ஹாஃபிஸ் ஸயீதை நீதிமன்றம் குற்றமற்றவர் என கூறியுள்ள நிலையில் அவரை கைது செய்ய உத்தரவிடும் அமெரிக்கா, பாகிஸ்தானின் இறையாண்மையின் மீது தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் மியான் அஸ்லம் கூறினார்.
அமெரிக்க தூதரை அழைத்து அரசு அதிகாரப்பூர்வமாக கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்காவின் வெளியுறவு அண்டர் செகரட்டரி வெண்டி ஷெர்மான் கடந்த திங்கள் கிழமை ஹாஃபிஸின் தலைக்கு பரிசு அறிவித்தார்.
‘நான் வெளிப்படையான வாழ்க்கையை வாழ்பவன். எந்த அமெரிக்க நீதிமன்றத்திலும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க தயார்’ என்று அடுத்த நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் ஹாபிஸ் அமெரிக்காவிற்கு பதில் அளித்திருந்தார்.
2 comments:
pakistan
"பேராசிரியர் ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு அமெரிக்கா பரிசு அறிவிப்பு: பாகிஸ்தானை உலுக்கிய கண்டனப் பேரணி!"
Post a Comment