அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 15, 2011

Nakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.

___

உங்கள் கோப்பை இலவசமாக பதிவேற்றம் செய்து, பின் தரவிறக்கம் செய்ய வேண்டிய இணைப்பை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த இணைப்புக்கு சென்று இலவசமாக ஒரு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யலாம்.

__Nakido Download Options

Nakido Flag என்ற இந்த சேவை இணையத்தளத்தில் உள்ள Download manager .
இது peer to peer என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கி உள்ளதால் உங்கள் தரவிறக்கத்தை வேகமாக்கும்.இரண்டு கோப்பை ஒன்றன் பின் ஒன்றாக தரவிறக்கம் செய்யும் வசதி மற்றும் தரவிறக்கம் செய்யும் கேப்புகள் தடை ஏற்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்யும் வசதி,ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

_______Nakido Flag

இந்த தளத்தில் உங்கள் தகவலை பதிவு செய்து அதன் பிறகு உபயோகிக்க தேவை இல்லை. நேரடியாக உங்கள் கோப்பை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.

http://www.nakido.com/

நன்றி : தகவல்கள் எடுக்க பட்ட தளத்திருக்கு நன்றி மற்றும் NAKIDO

நீங்கள் ஊருக்கு போகும் போது உங்களுடன் வரும் வீடு..

Cool Bus 01

உங்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழநிலை வந்தால் என்ன பண்ணுவீர்கள். இந்த பேருந்து உங்கள் இடம் இருந்தால் நீங்கள் கவலை பட வேண்டியது இருக்காது. பேருந்தின் உள்ள கட்டமைப்பு ஒரு அடுக்குமாடி குட்யிருப்பை காட்டிலும் அழகா இருக்கும். உங்கள் காரை பேருந்துக்குள் வைத்து கொள்ளலாம் இதைவிட வேறு என்ன வசதி வேண்டும். மேலும் இந்த பேருந்தின் புகைப்படங்கள் இதோ.

Cool Bus 02Cool Bus 04Cool Bus 05Cool Bus 06Cool Bus 07Cool Bus 08Cool Bus 09Cool Bus 11Cool Bus 12Cool Bus 13Cool Bus 14Cool Bus 15

நன்றி : படங்கள் எடுக்கப்பட்ட தளத்திருக்கு நன்றி.


ஒருபக்க நியாயம்..மறு பக்கம் அநியாயம்..


உடையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத்
திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு
உரம் இட்டப் பின்னேப்
படித்தாண்டத் தோன்றாதா!

பார்வை மட்டும்தானே;
அழகைப் பார்க்கட்டும்;
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;

பசிக்கும் பார்வைக்கு
அணைப்போடச் சொல்லித்
திரைப்போடச் சொல்வது சிறையா!

மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன
உள்ளத்தை மீட்டெடுப்பதில்
என்ன தயக்கம்!

மற்றவர் அணிந்தால்
வாய் மணக்க உரைக்கும்
ஒழுக்கமுறை என்று;
நாங்கள் அணிந்தால்
மட்டும் வாய் குரைக்கும்
அடக்கு முறையென்று!



ஊருக்குப் போகும் போது....


விண்ணப்பித்த என்
விடுப்புக் கடிதம்
அனுமதி என்ற
வண்ணத்தால் பளப்பளக்க;

மூச்சு முட்டிச் சேமித்தத்
திர்ஹம்சை வடிக்கட்டி;
மூட்டை முடிச்சிக் கட்ட
ஆயத்தமாகும் போகும் போது;
அலறும் கைப்பேசி;

என்னைப் போல்
எண்ணை நாட்டில்;
பளப்பளப்பு இழந்த
ஊர் நண்பர்கள்
அக்கறையாய் அக்கரைக்குச்
செல்வதைக் கேட்கும் போது
உள்ளம் குதூகலிக்கும்!

நண்பர்கள் கூட்டமொன்று;
சிரித்துக் கொண்டேச்
சின்னச் சாமான் என்று;
என் மூட்டையோடு
மூலையில் போடென்று;
இளித்துக் கொண்டேக்
கரத்தில் திணித்துவிட்டுச் செல்லும்!

முக்கும் மூட்டையுடன்;
ஏறிய எடையுடன்;
விமான நிலையத்திற்குச் செல்ல;
கூடிய எடைக்குப்
பிரசவம் பார்க்கச் சொல்லி
நிலைய அதிகாரி எனக்கு
கட்டமிடுவார்!

கட்டு அவிழ்க்கக்
கவலைக்கொண்டு;
கப்பம் கட்டுவேன்;
இனி யாரிடம் பொருள்
வாங்கலாம் என்று
முடிவுக்கட்டுவேன்!

நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்

ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவு தான் சரியானது. மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும்.

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வு தான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.

தனியார் மெகாகிடங்கில் பயங்கர தீ விபத்து:பல கோடி ரூபாய் இழப்பு!

தனியார் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில், இருப்பு வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதன் காரணமாக, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் சுற்றுப்புற மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சென்னை, மாதவரம், கணக்கன் சத்திரம் ஜி.என்.டி. சாலை அருகே 15 ஏக்கர் பரப்பளவில் தனியார் கிடங்கு வளாகம் உள்ளது. இங்கு 16 மெகா கிடங்குகள் உள்ளன. இவற்றில் இரும்பு, ரசாயனம், தொழிற்சாலை உதிரிபாகங்கள், வேஸ்ட் பேப்பர், மருந்துகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பல டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். தேர்தலுக்காக, கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.காவலாளிகள் உட்பட ஒரு சிலர் மட்டும் பணியில் இருந்தனர். நேற்று காலை 9.30 மணி அளவில் 9ம் எண் கிடங்கில் இருந்து புகை வெளியேறியது. பின், தீ பிடித்து, கிடங்கின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.அந்த கிடங்கில் பியூரிக் பாஸ்பரஸ், சோடியம் கார்போரைட், ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனக் கலவைகள் கொண்ட 3 ஆயிரம் பேரல்கள் வைக்கப்பட்டிருந்தன.

25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரசாயன பேரல்கள் ஒவ்வொன்றும் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. பலத்த காற்றின் காரணமாக தீ 100 முதல் 200 அடி உயரம் வரை கொழுந்து விட்டு எரிந்தது.இதனால் அடர்த்தியான புகை மண்டலம் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பரவியது. கிடங்கிற்கு அருகில் உள்ள பகுதிகளில் வசித்த மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல்ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, மாதவரம் போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.தீயை கட்டுப்படுத்த முடியாமல், கெமிக்கல் மற்றும் மெக்கானிக்கல் ஃபோம் என்ற ரசாயன கலவைகளை தண்ணீரில் கலந்து தீயை கட்டுப்படுத்தி ஆறு மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைத்தனர். தீ விபத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழப்புகள் ஏதுமில்லை.

தீ விபத்தால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஜி.என்.டி. சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மாதவரம் துணை கமிஷனர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து டென்று, பேச்சு வார்த்தை நடத்தி மறியலை விலக்கினர். மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜனநாயகம் ஓர் அன்னிய மதமா ?


இன்றைய இஸ்லாமிய வாதிகளிடையே மிக பரபரப்பாக உச்சரிக்கப்படும் பெயராக ஜனநாயகம் உள்ளது மாத்திரமல்லாமல் ஆராதிக்கப்படும் நிலைக்கும் மாறி விட்டது என்றால் அது மிகையானதல்ல. ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்தாலும் அனைவரும் ஜனநாயகம் என்பது நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்லாத்துக்கு முரணானது என்பதிலும் கருத்தொற்றுமை கொள்கின்றனர். வேறு சிலரோ ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் ஷூரா அமைப்பை போன்ற ஆலோசனைகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற சில அம்சங்கள் இருப்பதால் ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல என்று கருதுகின்றனர்.

இக்கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது ஜனநாயகம் என்பது இஸ்லாத்துக்கு முரணான ஒன்று தான், ஆனால் இஸ்லாத்துக்கு முரணான கொள்கை அல்லது மதம் என்று கருத கூடிய அளவு அபாயகரமானது அல்ல, எனவே கால சூழலுக்கேற்ப ஜனநாயகத்தின் அடிப்படையில் வாழ்வது, அதற்காக பாடுபடுவது தவறல்ல என்று வாதிடுவோரின் வாதங்கள் சரி தானா ? ஜனநாயகம் என்பது அந்நிய மதமா என்பது குறித்து குரான் மற்றும் சுன்னாவின் ஒளியில் பார்க்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.

குரானினோ, ஹதீஸ் கிரந்தங்களிலோ, ஸலபுஸ் ஸாலிஹீன்களின் புத்தகங்களிலோ நாம் ஜனநாயகம் என்ற வார்த்தையை பார்க்க முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஜனநாயகம் என்ற சொல்லாடலோ அல்லது சித்தாந்தமோ இல்லை.

ஜனநாயகத்தின் தன்மையை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விளங்கி கொள்ள முஸ்லீமின் அடிப்படை கடமையான ஈமானை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஒருவர் ஈமான் எனும் உறுதி மொழியை முழுமையாய் தன் வாழ்வில் கடைபிடிக்கும் போதே அவர் முஸ்லீமாய் கணிக்கப்படுவார். ஈமான் எனும் அம்சமே முஸ்லீமை நிராகரிப்பாளரிடமிருந்து வேறுபடுத்தி காட்ட கூடிய ஒன்றாய் விளங்குகிறது. ஈமான் இல்லாமல் ஒருவர் எத்துணை நல்ல செயல்கள் செய்தாலும் அவற்றிக்கு மறுமையில் எப்பயனும் இல்லை என்பது நாம் அனைவரும் தெரிந்ததே.
ஒரு முஸ்லீமின் ஈமான் குறித்து விளங்கி கொள்ள கீழ்காணும் குரான் வசனங்களை பார்க்கலாம்.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (திருக்குரான் 51:56)

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; தாகூத்துகளை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். (திருக்குரான் 16:36)

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் (திருக்குரான் 2 : 256)

எவர்கள் தாகூத்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (திருக்குரான் 39 : 17)

மேற்காணும் திருமறையின் வசனங்களை ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு முஸ்லீம் ஈமான் கொண்ட பின்னர், அல்லாஹ்வை தவிர மற்றவைக்கு தலை வணங்கவோ, கட்டுபடவோ, அவற்றின் கட்டளைகளுக்கு கீழ்படியவோ கூடாது என்பதை வலியுறுத்துவதை காணலாம். எனவே ஒருவரின் ஈமான் முழுமை அடைய வேண்டுமானால் இஸ்லாம் தவிர அனைத்து கொள்கைகளின் தாக்கங்களிலிருந்தும் விடுபட வேண்டும்.
யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்குகிறாரோ, அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்குகிறாரோ அவரை தாகூத் என அல்லாஹ் வர்ணிக்கிறான். யாரெல்லாம் தங்களை முஷ் அரியாக (சட்டமியற்றுபவர்) கருதுகிறார்களோ, அவர்களும் தாகூத்தின் எல்லைக்குள் வருவார்கள்.

சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே இருக்க, அதற்கு மாற்றமான சட்டங்களை வகுப்பவர் ஆட்சியாளராக இருந்தாலும், இயக்க தலைவராக இருந்தாலும், எம்.எல்.ஏ, எம்,பி என மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி அவர்களும் இஸ்லாத்தின் பார்வையில் தாகூத்தாக கருதப்படுவார். ஏனெனில் அவர்களை அல்லாஹ் தன் அடிமைகளாக படைத்து தன்னுடைய சட்டத்துக்கு கீழ்படிய சொல்லி இருக்கும் போது, அதற்கு மாற்றமாக இறைவனின் வரம்புகளை மீறி அல்லாஹ்வை போல் தன்னையும் சட்டம் இயற்றும் தன்மை கொண்டவனாக நினைக்கிறான்.

இறைவன் இயற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு மட்டுமே கொண்டுள்ள அடிமையான மனிதன் “இலாஹ் முஷ் அரி” எனும் இறைவனின் தன்மைக்கு சவால் விடுகிறான். இம்மாதிரி இறைவனின் அதிகாரத்துக்கு நேரடியாக சவால் விடும் இத்தகையவர்கள் நிச்சயமாக தாகூத் என்பது மாத்திரமல்லாமல் தாகூத்தின் முண்ணணி தளபதிகளாகவே கருத வேண்டியதிருக்கிறது. தாகூத்திடம் தீர்வு தேட வேண்டாம் என்று மார்க்கம் தடுத்திருக்கும் போது தாகூத்தின் தளபதிகளாகவே மாறி போனவர்களின் ஈமான் குறித்து என்ன சொல்வது? இவர்களை குறித்து தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்

(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான். (திருக்குரான் 4 : 60)

இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹீ இது குறித்து கூறும் போது “ தாகூத் என்பது மனித வடிவில் உள்ள ஷைத்தானாகும். அவனுடைய சட்டத்தை ஏற்று கொண்டு மனிதர்கள் தங்கள் பிரச்னையை முறையிடுகின்றனர். அதன் மூலம் ஷைத்தான் அவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான் என்கிறார். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) இது குறித்து கூறும் போது அல்லாஹ்வின் புத்தகம் அல்லாமல் வேறு ஒன்றின் அடிப்படையில் யார் ஆள்கிறாரோ, அவர் தாகூத் ஆவார் என்கிறார்கள்.

இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்களோ “ அல்லாஹ் தன் அடிமைகளுக்கு ஏற்படுத்தியுள்ள வரம்புகளை மீறுபவர்கள் எல்லோரும் தாகூத்களே. அது வணக்கமாக அல்லது பின்பற்றுதலாக அல்லது கீழ்படிதலாக எதுவாக இருப்பினும் வரம்புகளை மீறுபவர்கள் அனைவரும் தாகூத்களே. ஒவ்வொரு சமூகத்தின் தாகூத்கள் யாரெனில் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் வகுத்த சட்டத்திற்கு மாற்றமானதை பின்பற்றுபவர்களும், அல்லாஹ், அல்லாஹ்வின் தூதரின் சட்டத்திற்கு முரணானவற்றின் அடிப்படையில் தீர்ப்பு கூறுபவர்களுக்கு அடிபணிபவர்களுமே ஆவார்கள்” என்கிறார்.

மேலும் “ இறைவனின் வேதம், நபிகளாரின் வழிமுறை அல்லாமல் அதற்கு முரண்படும் வேறொன்றிடத்தில் தன் பிரச்னைக்கான தீர்வை தேடினால் அது நிச்சயம் தாகூத்திடம் தீர்வு தேடியதை போன்றதேயாகும் என்றும் இப்னுல் கையூம் (ரஹ்) கூறுகிறார். ஜனநாயகம் இஸ்லாமிய பார்வையில் ஹராம் என்பதை இந்திய அரசியல் ஹராமா ?, ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு உள்ளிட்ட பல கட்டுரைகள் இதர கொள்கைகள் மற்றும் தீனை நிலைநாட்டல் லேபிள்களின் கீழ் தரப்பட்டுள்ளது. எனவே அனைத்து சகோதரர்களுக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களின் கூற்றாக குரானில் வரும் வசனத்தை நினைவுபடுத்தி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள்.” (திருக்குரான் 60 : 4)

அமர்நாத் பனிலிங்கம் மோசடி ...

அமர்நாத் பனி லிங்க மோசடி - தொடர்வது என்ன?

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை போல ஒரு ஆன்மீக‌ செப்படி வித்தை அம்பலம். பனிலிங்கம் என்று மோசடி.

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை கேரள அரசு ஒத்துக்கொண்டது போல, என்றைக்கு இதைக் காசுமிர் அரசு ஒத்துக் கொள்ளப் போகிறதோ? அந்த நாள் விரைந்து வரட்டும்.
பனிலிங்கம் என்று மோசடி செய்து மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள் .

பனி லிங்கம். கடந்த ஆண்டு இது சரிவர உருவாகவில்லை ஏன்? என்ன தெய்வக் குற்றம்?. அமர்நாத் பனி லிங்கம். ஆண்டுதோறும் இதைப் பார்க்க ஆயிரக்கணக்கில் இந்து மதப் பக்தர்கள் கூடுகின்றனர். என்ன அதிசயம் இதில்? ஆம், அதிசயம் என்கின்றனர். பனியால் லிங்கம் தானாகவே சுயம்புவாகவே உருவாகிறது என்கிறார்கள். பின்னர் கரைந்துவிடும் போல !

அடுத்த ஆண்டு அதே சீசனில் இது உருவாகும். பக்தர்கள் தரிசிப்பர். மூடத்தனம் வளரும். கடந்த ஆண்டு இது சரிவர உருவாகவில்லை ஏன்? என்ன தெய்வக் குற்றம்? தெரியவில்லை. தெரிவிக்கப்படவில்லை. என்ன செய்தார்கள்?

இவர்களே உருவாக்கினார்கள் பனி லிங்கத்தை கடவுளைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா?

புகார்கள் எழுந்தன. கவர்னர் விசாரணைக் கமிசன் வைத்தார், கமிசன் பிட்டுப்பிட்டு வைத்தது உண்மைகளை! உத்தமர்களின் வேசம் கலைந்தது. மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை வழக்கு என்றார்கள். முடிவு தெரியவில்லை.

கடவுளைக் காப்பாற்றிச் சுயம்பு பனி லிங்கம் எனக் காண்பித்திட என்ன செய்தார்கள் தெரியுமா? சிமெண்ட் கான்கிரீட்டினால் லிங்கம் போலக் கட்டிவிட்டார்கள். அதன் மேல் அய்ஸ்கட்டிகளை அப்பிவிட்டுப் பனி லிங்கம் என்றார்கள்.

செயற்கை தான். சில குளிர் ஆண்டுகளில் இது இயற்கையாக அமையும் என அறிவியல் கூறுகிறது.

சுண்ணாம்புக் கல்லினால் ஆன குகைகளில் பனி நீர் வடிவதால் இப்படிப்பட்ட உரு உருவாகிறது. மேலிருந்து கீழே பனி நீர் சொட்டுவதாலும் உருவாகும். கீழிருந்து மேல் நோக்கி லிங்கம் போல தூண்கள் போல கம்பிகள் போல உருவாகும் குகைகளில் - சுண்ணாம்புக்கல் குகைகளில் இம்மாதிரி உருவாகும்.

STALACTITE and STALAGMITE
ஸ்டாலக்டைட்(STALACTITE) என்று அதற்குப் பெயர். குகையின் கூரைப் பகுதியில் இருந்து தொங்கும் லிங்கத்திற்கு அந்தப் பெயர்.

ஸ்டாலக்மைட் (STALAGMITE ) என்று நிலத்தினின்றும் மேல் நோக்கி எழும் “லிங்கத்திற்கு” பெயர் வைத்திருக்கிறார்கள்

சுண்ணாம்புக் கல்குகைகளிலும் சுண்ணாம்புக்கல் பாறைகளிலும் மட்டுமே இவை ஏற்படும். இதை பனிலிங்கம் என்று மோசடி செய்து மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள்.

பனி அதிகமாக இருக்கும் பனிப் பாளங்கள் நிறைந்த குளூ மணாலி பகுதியில் பனி லிங்கம் உருவாகுமா? சுண்ணாம்புக் கல் இல்லாததால் உருவாகாது.

இதே மாதிரி பனி லிங்கம் “ஆதென்ஸ் நகரத்திற்குப் பக்கத்தில் கிரீஸ் நாட்டில் உள்ளது. அது போன்றவை நியூசிலாந்து நாட்டின் வைடாமோ குகைகளில் உள்ளன. மெலிதாகவும், மொத்தமாகவும் நூற்றுக்கணக்கில் உருவாகின்றன.

லிங்கம் வளராமல் போனதற்கான காரணம், பக்தர்கள் கொட்டிய குப்பையும், கொளுத்திய விறகும் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தியதால்தான் என்று அறிவியல் கூறியது.

லிங்கம் வளரவில்லை. என்ன செய்தார் தெரியுமா ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்?

குச்சி அய்ஸ் தயாரிப்பதைப் போல, அய்ஸ் கட்டிகளை அப்பி லிங்கத்தை மொத்தமாக்கினார். அதுவும் கூட கரைந்து போய், உள்ளே இந்த எத்தர்கள் உருவாக்கி வைத்த சிமென்ட் கட்டை வெளியே தெரிந்துவிட்டது.

ஆக, சிமென்டில் கட்டப்பட்ட உருளைக் கட்டையின் மீது சுண்ணாம்பு நீர் கொட்டி, ஸ்டாலக்மைட் உருவாவதை இவர்கள் பனிலிங்கம் எனப் புளுகி மடமையை வளர்க்கின்றனர்.

போன ஆண்டின் அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு லிங்கத்தின் உயரத்திற்கும் மேலே இரும்புக் கம்பிக் கூண்டு அமைத்து வைத்துள்ளனர். பக்த கே()டிகள் தொட்டுத் தொட்டு, பனி கரைந்து போய்விட்டது சென்ற ஆண்டு! ஆகவே தடுப்பு வேலி!

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை கேரள அரசு ஒத்துக்கொண்டது போல, என்றைக்கு இதைக் காசுமிர் அரசு ஒத்துக் கொள்ளப் போகிறதோ? அந்த நாள் விரைந்து வரட்டும். - - சு.அறிவுகரசு. SOURCE: “உண்மை”.




ஒரு கடவுள் மரணத்தை நோக்கி....?!

என்னப்பா இது? தலைப்பே தவறாக இருக்கிறதே! என்று எண்ணி முழுவதுமாக படிக்காமல் விட்டு விடாதீர்கள் முழுவதையும் படித்த பின்பு, உங்களுக்கு சரி என்று பட்டால் இதை பிறருக்கும் அனுப்புங்கள்.

ஆந்திர மாநில புட்டர்பத்தி சாய்பாபவை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் இந்துக்களில் பல பேர் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்கள் முதல் படித்த பட்டதாரி வரை, ஏழை முதல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரன் வரை பல பேர் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள்.

தன்னுடைய பேச்சாற்றல் மூலமாகவும், தந்திர வித்தைகள் மூலமாகவும் பல மக்களை கவர்ந்துதன்னை ஒரு மிகப்பெரிய அவதாரமாக ஆக்கிக்கொண்டவர்தான் இந்த புட்டர்பத்தி சாய்பாபா! சமீபத்தில் தொலைகாட்சியிலும், நாளிதழ்களிலும் ஒரு பரவலான் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாய்பாபாவின் உடல் நிலைப் பற்றி.

சாய்பாபாவிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவிஃபேஸ் மேக்கர்) பொருத்தப்படிருப்பதாகவும், நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமாகிவருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கட்டுரையை படிக்கக் கூடியவர்கள்யாராவது இவரை கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ நம்புபவர்களாக இருந்தால்பொறுமையாக இந்த கட்டுரையை படிக்கவும். அதன் நன்றாக அமர்ந்து குறைந்தது 5 நிமிடமாவதுசிந்தியுங்கள், நிச்சயமாக சத்தியம் உங்களை வந்தடையும். (




ஒரு சாதாரான் ஹிந்துக்களிடம் எத்தனை கடவுள் இருக்கிறது என்று கேட்டால்? ஒருவர் சொல்வார் மூன்று என்று, மற்றவர் சொல்வார் முப்பது என்று, மற்றொருவர் சொல்வார் மூவாயிரம் என்று இப்படியே போய் முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்றும் சில பேர் சொல்வார்கள். ஆனால் இந்து மத வேதங்களை படித்த மேதையிடம் கேட்டால் கடவுள் ஒன்று தான் என்று கூறுவார். இன்று எல்லா ஹிந்துக்களும் நம்பக்கூடிய ஒரு விஷயம் தான் கடவுளின் அவதாரம் என்பது. ஹிந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் இத்தகைய அவதார புருஷர்கள் நிறையவே உண்டு. உதாரணம் இராமன், கிருஷ்ணன். இவர்களை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும், இவர்கள் பூமியில் அசத்தியத்தை அழிப்பதற்காக மனிதர்களாக அவதாரம் எடுத்தார்கள் என்றும் நம்புகின்றனர்.


உலகத்தில் பெண்ணின் வயிற்றில் கருவாக உருவாகி பிறந்த மனிதர்கள் யாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது தான் நியதி. அவ்வாறுதான் இன்று வரை பிறந்த மனிதர்கள் அனைவரும் இறந்தும் இருக்கின்றனர். மேற்கூறிய அவதார புருஷர்களின் இறுதி வாழ்க்கை என்ன ஆனது என்று எங்கையுமே குறிப்பிடப் படவில்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்பதும் நமக்கு தெரியவில்லை, காரணம் அத்தகைய அவதார புருஷர்கள் வாழ்ந்த காலங்கள் யாருக்குமே சரியாக தெரிவதில்லை, சில பல லட்சம் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்தார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும், அது என்னவென்றால் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும், மரணத்தில் இருந்து யாரும் தப்பவே முடியாது என்பதுதான்.

இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் சில நபர்களை அவதாற புருஷர்களாக கருதுகிறார்கள், அதில் இரண்டு நபர்களைமட்டும் இங்கே காண்போம்.


ஓஷோ கம்யூனிட்டியின் நிருவனர் பகவான் ரஜ்நிஷ், இவர் அமெரிக்காவில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். அங்கே இருந்த அமெரிக்கர்கள் பலரை தனது கவர்ச்சிகரமான பேச்சாற்றல் மூலமாக தனது பக்தர்களாக மாற்றினார். இதனால் அமெரிக்க அரசாங்கம் இவரை சிறையில் அடைத்தது, சிறையில் இவருக்கு விஷம் வழங்கப்பட்டதாக இவரே கூறியிருக்கிறார். பின்னர் இவரை விடுதலை செய்த அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. இங்கே இவர் ஓஷோ கம்யூனிட்டியை தொடர்ந்து நடத்தி வந்தார். பின்னர் மரணம் அடைந்தார்.

இவரை கடவுளாக நம்பும் மக்கள் இவர் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை ஆனால் உலகத்திற்கு சில காலங்களுக்கு விஜயம் செய்திருந்தார் என்றும் நம்புகின்றனர். சற்று யோசித்து பாருங்கள் கடவுளை அமெரிக்க அரசாங்கம் சிறையில் அடைத்ததும், அவரும் உணவில் விஷம் வழங்கப்பட்டதையும்! இப்படிப்பட்டவர்கள் கடவுளாக இருக்க முடியுமா?


தற்போது புட்டர்பத்தி சாய்பாபா, ஆந்திர மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய ஆசிரமத்தை நடத்தி வரும் சாய்பாபாவை பல மக்கள் கடவுளாக நம்புகின்றனர். தற்போது அவர்கள் நம்பும் கடவுளுக்கு சுவாசக்கோளாறு பிரச்சனை. ஆதலால் செயற்கை கருவி பொறுத்தியுள்ளனர். சாய்பாபா தற்போது உயிருக்காக போராடிவருகிறார். செயற்கை கருவி ஒரு போதும் இயற்க்கையை போன்று இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே, அதே போன்று செயற்க்கை கருவி பொருத்தப்பட்டவர்களும் நீண்ட நாட்களுக்கு வாழ்ந்ததாகவும் தெரியவில்லை.
அப்படியென்றால் சாய்பாபா தனது இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய பக்தர்கள் ஆத்திரம் அடையக்கூடாது, இது தான் நிதர்சனம். மனிதனாக பிறந்தால் மரணித்தே தீர வேண்டும். அப்படி மரணிப்பவர்கள் யாரும் கடவுளாக இருக்க முடியாது என்பதே சத்தியம்!

கடவுள் என்பவன் யார்? மிக அழகாக கூறுகிறது திருக்குர்ஆன். ஒருவரை கடவுள் என்று நம்புவதற்கு அவரிடம் 4 நிபந்தனைகள் இருக்க வேண்டும்.

1. அவர் ஒருவராக இருக்க வேண்டும்.

இன்று எல்லா மதத்தின் வேதங்களும் கடவுள் ஒன்று தான் என்று கூற அந்த வேதங்களைப்பற்றிய ஞானம் இல்லாதவர்கள் பல கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆக கடவுள் என்பவர் ஒன்று தால் பலர் அல்ல என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

2. கடவுள் தேவையற்றவராக இருக்க வேண்டும்.

உலகத்தை படைத்த கடவுளை நம்பித்தான் மற்றவர்கள் இருக்க வேண்டுமே ஒழிய, கடவுள் பிறரை நம்பி இருக்கக்கூடாது. மேலே குறிப்பிட்ட இரண்டு நபர்களும் அவ்வாறு இருந்தார்களா? ரஜ்நிஷிற்கு அமெரிக்கா அரசாங்கம் விசாவை தள்ளுபடி செய்தது! கடவுள் உலகத்திற்கு விஜயம் செய்ய வருவாரானால் மற்ற நாடுகளுக்குச் செல்ல அவர் படைத்த மனிதர்களே விசா வழங்க வில்லை போலும் அப்படியா? மேலும் அவருக்கு உணவில் விஷம் கொடுக்கப்பட்டதாம்! சற்று யோசித்துப்பாருங்கள் கடவுளுக்கு மனிதர்கள் விஷம் கொடுத்தால் அது கடவுளை பாதிக்குமா? அப்படி பாதித்தால் அவர் கடவுளாக இருக்க முடியுமா?

அதே போன்று இன்று உடல் நிலை மோசமாகிக்கொண்டிருக்கும் சாய்பாபா? கடவுளுக்கு உடல் நிலை சரியில்லையா? அவருக்கு செயற்க்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறதே! அதுவும் மருத்துவர்களின் உதவியோடு! அப்படி இருக்க சாய்பாபா கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ எப்படி இருக்க முடியும்?

3. அவர் யாரையும் பெற்றிருக்கக்கூடாது! யாராலும் பெறப்பட்டவராக இருக்கக்கூடாது

ரஜ்நிஷ் மற்றும் சாய்பாபாவிற்கும் பெற்றோர்கள் உண்டு, மற்ற மனிதர்கள் போல் அவர்களும் தங்களுக்கு பல தேவைகளை பிறரின் உதவியுடன் பெற்றிருக்கிறார்கள். இப்படி இருக்க இவர்கள் கடவுளாக இருக்க முடியுமா?


4. அவரைப்போன்று எவறுமே இல்லை!

இந்த கட்டுரையின் மூலமே 2 நபர்களை தெரிவித்துவிட்டோம், தன்னை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் கூறும் பட்டியல் நமது இந்தியாவில் நீண்டுகொண்டே போகிறது.
ஆக, மனிதன் ஒரு போதும் கடவுளாக மாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். திருக்குர் ஆன் கூறுகிறது, கடவுளுக்கு தேவைகள் கிடையாது, சோர்வுகள் ஏற்படாது, பெற்றோர்கள் கிடையாது, குழந்தைகள் கிடையாது, மனோ இச்சைகள் கிடையாது, அவன் மகாத்தூயவன், எந்த ஒரு மனிதனின் பார்வையும் அவனைக் காணமுடியாது அப்படிப்பட்டவேனே இறைவன், அவனை மனிதர்கள் தங்களுக்கு மொழிக்கு ஏத்தவாறு அழைக்கிறார்கள்..

தமிழில் - இறைவன்

ஆங்கிலத்தில் - GOD

ஹிந்தியில் - பகவான்

அரபியில் - அல்லாஹ்

என்று அழைக்கிறார்கள். எனவே நாம் இவ்வுலகிலும் நாளை மறு உலகிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அப்படி வணங்குபவர்கள் தான் நம்பிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

ஆக நன்கு சிந்தியுங்கள் உண்மையை உணருங்கள், நேர்வழி அடைய வாழ்த்துகிறேன்!
உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமு உண்டாக பிரார்த்திக்கிறேன்!

பிரான்ஸ் -முகத்திரை தடையை மீறிய பெண்கள் ..


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இன்று முதல் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் என்ற முகத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு ரூ 10000 அபராதம் விதிக்கப்படும். இதனை அணியச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் ரூ 20லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இந்தத் தடையை மீறி இன்று பிரான்ஸில் பல பெண்கள் முகத்திரையிட்டு வந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதற்காக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் ஏறத்தாழ 50 லட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏறத்தாழ 2000 பெண்களே முகத்தை மறைக்கும் நிகாப் அணிந்து வருகின்றனர். இருந்தாலும் இந்தத் தடையை இஸ்லாத்திற்கெதிரான ஒரு செயலாக முஸ்லிம்கள் கருதுகின்றனர். பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி முகத்திரை அணிவது பெண்களை அடிமைப்படுத்தும் செயல் எனத் தெரிவித்து அதனை நீக்குவதற்காகத்தான் தடையை கொண்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.

சட்டத்தில் பெண்,முஸ்லிம்,முகத்திரை போன்ற வார்த்தைகள் மிகவும் கவனமாக தவிர்க்கப்பட்டு பொது இடங்களில் முகத்தினை மறைப்பது சட்ட விரோதமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தடையினை நீக்கக் கோரி பிரான்ஸ் நாட்டுக்கு அல் காய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தடை குறித்து கென்ஷா டிரைடர் என்ற பெண்மணி கூறும்போது என்னை நிகாப் அணியக் கூடாது என தடுத்தால் ஐரோப்பாவிலுள்ள மனித உரிமை நீதிமன்றத்தை அணுகுவேன் என தெரிவித்துள்ளார்.