அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 15, 2011

அமர்நாத் பனிலிங்கம் மோசடி ...

அமர்நாத் பனி லிங்க மோசடி - தொடர்வது என்ன?

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை போல ஒரு ஆன்மீக‌ செப்படி வித்தை அம்பலம். பனிலிங்கம் என்று மோசடி.

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை கேரள அரசு ஒத்துக்கொண்டது போல, என்றைக்கு இதைக் காசுமிர் அரசு ஒத்துக் கொள்ளப் போகிறதோ? அந்த நாள் விரைந்து வரட்டும்.
பனிலிங்கம் என்று மோசடி செய்து மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள் .

பனி லிங்கம். கடந்த ஆண்டு இது சரிவர உருவாகவில்லை ஏன்? என்ன தெய்வக் குற்றம்?. அமர்நாத் பனி லிங்கம். ஆண்டுதோறும் இதைப் பார்க்க ஆயிரக்கணக்கில் இந்து மதப் பக்தர்கள் கூடுகின்றனர். என்ன அதிசயம் இதில்? ஆம், அதிசயம் என்கின்றனர். பனியால் லிங்கம் தானாகவே சுயம்புவாகவே உருவாகிறது என்கிறார்கள். பின்னர் கரைந்துவிடும் போல !

அடுத்த ஆண்டு அதே சீசனில் இது உருவாகும். பக்தர்கள் தரிசிப்பர். மூடத்தனம் வளரும். கடந்த ஆண்டு இது சரிவர உருவாகவில்லை ஏன்? என்ன தெய்வக் குற்றம்? தெரியவில்லை. தெரிவிக்கப்படவில்லை. என்ன செய்தார்கள்?

இவர்களே உருவாக்கினார்கள் பனி லிங்கத்தை கடவுளைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா?

புகார்கள் எழுந்தன. கவர்னர் விசாரணைக் கமிசன் வைத்தார், கமிசன் பிட்டுப்பிட்டு வைத்தது உண்மைகளை! உத்தமர்களின் வேசம் கலைந்தது. மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை வழக்கு என்றார்கள். முடிவு தெரியவில்லை.

கடவுளைக் காப்பாற்றிச் சுயம்பு பனி லிங்கம் எனக் காண்பித்திட என்ன செய்தார்கள் தெரியுமா? சிமெண்ட் கான்கிரீட்டினால் லிங்கம் போலக் கட்டிவிட்டார்கள். அதன் மேல் அய்ஸ்கட்டிகளை அப்பிவிட்டுப் பனி லிங்கம் என்றார்கள்.

செயற்கை தான். சில குளிர் ஆண்டுகளில் இது இயற்கையாக அமையும் என அறிவியல் கூறுகிறது.

சுண்ணாம்புக் கல்லினால் ஆன குகைகளில் பனி நீர் வடிவதால் இப்படிப்பட்ட உரு உருவாகிறது. மேலிருந்து கீழே பனி நீர் சொட்டுவதாலும் உருவாகும். கீழிருந்து மேல் நோக்கி லிங்கம் போல தூண்கள் போல கம்பிகள் போல உருவாகும் குகைகளில் - சுண்ணாம்புக்கல் குகைகளில் இம்மாதிரி உருவாகும்.

STALACTITE and STALAGMITE
ஸ்டாலக்டைட்(STALACTITE) என்று அதற்குப் பெயர். குகையின் கூரைப் பகுதியில் இருந்து தொங்கும் லிங்கத்திற்கு அந்தப் பெயர்.

ஸ்டாலக்மைட் (STALAGMITE ) என்று நிலத்தினின்றும் மேல் நோக்கி எழும் “லிங்கத்திற்கு” பெயர் வைத்திருக்கிறார்கள்

சுண்ணாம்புக் கல்குகைகளிலும் சுண்ணாம்புக்கல் பாறைகளிலும் மட்டுமே இவை ஏற்படும். இதை பனிலிங்கம் என்று மோசடி செய்து மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள்.

பனி அதிகமாக இருக்கும் பனிப் பாளங்கள் நிறைந்த குளூ மணாலி பகுதியில் பனி லிங்கம் உருவாகுமா? சுண்ணாம்புக் கல் இல்லாததால் உருவாகாது.

இதே மாதிரி பனி லிங்கம் “ஆதென்ஸ் நகரத்திற்குப் பக்கத்தில் கிரீஸ் நாட்டில் உள்ளது. அது போன்றவை நியூசிலாந்து நாட்டின் வைடாமோ குகைகளில் உள்ளன. மெலிதாகவும், மொத்தமாகவும் நூற்றுக்கணக்கில் உருவாகின்றன.

லிங்கம் வளராமல் போனதற்கான காரணம், பக்தர்கள் கொட்டிய குப்பையும், கொளுத்திய விறகும் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தியதால்தான் என்று அறிவியல் கூறியது.

லிங்கம் வளரவில்லை. என்ன செய்தார் தெரியுமா ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்?

குச்சி அய்ஸ் தயாரிப்பதைப் போல, அய்ஸ் கட்டிகளை அப்பி லிங்கத்தை மொத்தமாக்கினார். அதுவும் கூட கரைந்து போய், உள்ளே இந்த எத்தர்கள் உருவாக்கி வைத்த சிமென்ட் கட்டை வெளியே தெரிந்துவிட்டது.

ஆக, சிமென்டில் கட்டப்பட்ட உருளைக் கட்டையின் மீது சுண்ணாம்பு நீர் கொட்டி, ஸ்டாலக்மைட் உருவாவதை இவர்கள் பனிலிங்கம் எனப் புளுகி மடமையை வளர்க்கின்றனர்.

போன ஆண்டின் அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு லிங்கத்தின் உயரத்திற்கும் மேலே இரும்புக் கம்பிக் கூண்டு அமைத்து வைத்துள்ளனர். பக்த கே()டிகள் தொட்டுத் தொட்டு, பனி கரைந்து போய்விட்டது சென்ற ஆண்டு! ஆகவே தடுப்பு வேலி!

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை கேரள அரசு ஒத்துக்கொண்டது போல, என்றைக்கு இதைக் காசுமிர் அரசு ஒத்துக் கொள்ளப் போகிறதோ? அந்த நாள் விரைந்து வரட்டும். - - சு.அறிவுகரசு. SOURCE: “உண்மை”.




No comments: