அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 15, 2011

பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்..

தேர்வுகள் முடிந்துவிட்டன - பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்

10-ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்துவிட்டன. மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தேர்வுக்கான முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம்வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்கப் பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.


விடுமுறை நாள்களில் என்ன பண்ணலாம்?

1. ஆங்கில மொழித்திறனை (English language skill) வளர்த்துகொள்ள முயலலாம்

ஆங்கில மொழித்திறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்கள், ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம். அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழிப் பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள மிகச்சிறந்த வழி, ஆங்கில குர்ஆனை, தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும்; அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.

2. தொடர்புத் திறனை (Communication skill) வளர்ப்பது

வேலைவாய்ப்பு பெற மிகமுக்கியத் தகுதியாகக் கருதப்படுவது 'தொடர்புத் திறன்' எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்தத் தொடர்புத் திறன் Communication skill -யை வளர்த்துக் கொள்ள மிகமுக்கியத் தேவை தைரியம். தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறருக்குச் சொல்லப் பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால், நல்ல தாஇகளாக (பிரசாரகர்களாக) மாறப் பழகுங்கள். Communication skill என்பது ஒவ்வொறு முஸ்லிமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும்.
"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம்

No comments: