அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 15, 2011

நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை!


இந்த நோஹ் 950௦ ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. இவ்வளவு காலம் வாழும் அளவுக்கு மனிதன் இருந்தானா? மனிதனின் செல் அமைப்புகள் எலும்புகளின் ஆர்கானிக் பொருட்கள் இவ்வளவு காலம் தாங்கி நிற்கும் அளவுக்கு திறனுடன் மனிதனிடம் இருந்ததா? மனிதனின் வாழ்நாள் இப்போது இருப்பது தான் அதிகம். தோராயமாக ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது புரானக்குப்பைகள் என்பதல்லாது.

கடவுள் இருக்கிறான் என்றால் இதை நம்புவதற்கு பெரிய தயக்கம் தேவையில்லை! இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். கடவுள் அதீத சக்தி வாய்ந்தவன். இதுவெல்லாம் அவனுக்கு சிரமமானதல்ல என்பதுதான் எமது நிலை. இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது வரை இது தவறாகாது. இதுபோல் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுதான் பதில்.

அராரத் மலையில் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டு அது நோஹ் நபியின் கப்பலாக இருக்கும் என்று தகவல் வெளியிட்டனர். அந்த ஆய்வில் முக்கிய பங்காற்றிய டேவிட் பசோல்ட் என்பவர் பின்னாளில் அது நோஹ் நபியின் கப்பல் அல்ல என்று தன் முடிவை வாபஸ் வாங்கியதாக அறிவிக்கிறார். இதை செங்கொடி மேற்கோள் காட்டி இதை உடைக்க முயன்றுள்ளார். இவற்றுக்கான பதிலை அறிந்து கொள்ள முன் முக்கியமான விடயம் ஒன்றை பதிவு செய்ய வேண்டும். இந்த கப்பல் தொடர்பான சேதி பைபிளிளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்த கப்பலுக்கும் மற்றும் பெய்த மழை, வெள்ளம் போன்றவற்றிற்கான குர்ஆனில் இல்லாத சில தடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அடிப்படையை வைத்துக்கொண்டே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. டேவிட் பசோல்ட் என்பவர் பைபிளில் கூறப்படும் இந்த தகவலை நன்கறிந்த அதில் ஈடுபாடு மிக்கவர். இவரது ஆய்வின் பின்னர் இவர் அது நோஹ் நபியின் கப்பல் இல்லை என்று வாபஸ் வாங்குவதற்கும் அதுதான் காரணமாய் இருந்தது.எனவேதான் அதை மறுத்தார். இவர் இறுதி வரை இந்த நிலையில் இல்லை. இவரது கடைசி காலத்தில் அதாவது 1998ம் ஆண்டு காலத்தில் இவர் அது நோஹ் நபியின் கப்பல்தான் எனும் நிலைக்கு மீண்டும் வந்தார்.

அராரத் மலையில் உள்ளது கப்பல்தான் என்பதற்கு ஆதாரமாக அமைவது அங்கு கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைவுகள்தான். அங்கு பலகைகளும் அதில் ஆணிகள் அடிக்கப்பட்ட தடயங்களும் காணப்படுகின்றன. மேலும் அது கப்பல் வடிவிலும் உள்ளது. செங்கொடி இந்த இடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிடுகிறார்.

அராரத் மலை ஒரு எரிமலையாகும். கடைசியாக அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி வெடித்து வெளிவந்த லாவா குழம்பு ஒரு கப்பல் வடிவில் படிந்திருக்கிறது என்பதை தவிர அதில் ஒன்றுமில்லை.

லாவா குழம்புகள் கப்பல் வடிவில் படிந்திருக்கக்கூடும் என்பதே இவரின் முடிவு. குழம்புகள் பலகைகளாக மாறிய வினோதம் என்னவோ? இது இவரின் ஊகம்தான். இது அங்கு நடந்த ஆய்வின் முடிவு அல்ல என்பதை இவரது கூற்றிலேயே வெளிப்படுகிறது.

அடுத்து பைபிளின் குறிப்பிற்கு ஒத்ததாக அதன் நீள அகலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கொரு சான்றாக குறிப்பிடுகின்றனர். அதன் அளவுப்படி பார்த்தால் ஒரு கப்பல் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்காது என்று கூறுகிறார். நாம் பைபிளில் கூறுவதை ஒரு போதும் நம்ப போவதில்லை. அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டாலும் அதில் பல கையாடல்கள் நடந்திருக்கின்றன. எனவே அதில் எது உண்மை என்று அறிந்து கொள்ள இயலாது.

அடுத்து நன்கூரத்தைப்பற்றியும் சில தகவல்களை குறிப்பிடுகிறார். அதை ஒரு சான்றாக முஸ்லிம்கள் கூறுவதில்லை. அந்த நிகழ்வுக்கு அத்தாட்சி கப்பல் மட்டுமே! மேலும் அதைப்பார்த்தாலே நங்கூரம் என்று கூற மாட்டார்கள். அதில் சிலுவை அடையாளங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த இடத்தில் அது நங்கூரம் இல்லை எனும் செங்கொடியின் கூற்றிற்கு முற்றிலும் உடன்படுகிறோம்.

இப்படி பூலோக ரீதியிலான ஒரு பிரளயம் வந்ததர்கான் சான்று என்ன என்ற கேள்வியுடன் முடிக்கிறார் செங்கொடி. இதற்கு சான்றே அந்த கப்பல்தான். ஏன்? இவ்வளவு பெரிய ஒரு மலையில் ஒரு கப்பல் எப்படி வரும்? அதைத்தூக்கிக்கொண்டு வைக்கும் அளவுக்கு ஏதாவது உபகரணம் இன்றைய காலங்களில் கூட உண்டா? எதுவும் இல்லை! ஆனால் அங்கு கப்பலின் சிதைவுகள் உள்ளன. அப்படியாயின் அந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான் வெள்ளம் வந்திருந்தால்தான் சாத்தியம். எனவே அந்த கப்பல் அமைந்திருக்கும் உயரமே வெள்ளம் வந்ததற்கான ஆதாரம்.

No comments: