அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 15, 2011

ஐ.நா.தூதராக நடிகர் (சீயான்) விக்ரம் தேர்வு!

ஐ.நா.வின் வாழ்விட அமைப்பின் இளைஞர் தூதராக கோலிவுட் நடிகர் (சீயான்) விக்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட நான்கு பேரில், ஆசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் விக்ரம் தான்.

கென்யாவின் நைரோபி நகரில் ஐ.நா.வின் 23வது கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டம் ஏப்ரல் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக நைரோபி சென்று இருக்கிறார் விக்ரம்.

இதுகுறித்து நைரோபியில் விக்ரம் கூறியதாவது, வறுமை ஒழிப்பிற்கும், நகர்புற வளர்ச்சிக்கும், குறிப்பாக ஏழைகளின் வாழ்வு மேம்படவும் பாடுபடும் பெருமைக்குறிய அமைப்போடு இணைந்து பணியாற்ற வாய்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம்.

சினிமாவில் நான் இந்த நிலைமைக்கு உயர உதவிய மக்களுக்கு நன்றிக்கடனாக, ஐ.நா. அமைப்பில் என்னை இணைத்துக் கொள்கிறேன்.
ஐ.நா.வின் வாழ்விடம் பிரிவின் நோக்கம் ,ஆரோக்கியமான நகர்ப்புற வளர்ச்சி, சூற்றுச்சூழல் மற்றும் பசுமையான பொருளாதாரத்தை உருவாக்குவது, மக்களுக்கு உ‌தவுவது, குடிசையில்லா நகரத்தை உருவாக்குவது போன்ற பணிகளில் என்னையும் சந்தோஷமாக இணைத்துக் கொள்கிறேன்.

வளமான எதிர்காலத்திற்காக நகரங்களை மாற்ற இந்த அமைப்பு முயல்வதாகவும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

விக்ரம் ஏற்கனவே, சஞ்சீவினி அறக்கட்டளை மற்றும் சிறப்பு தேவை கொண்ட மாணவர்களின் பள்ளியான வித்யா சுதாவின் தூதராக இருக்கிறார். அத்துடன் விக்ரம் பவுண்டேஷன் சார்பில்ஏழைப்பெண்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியும் செய்து வருகிறார்.

கூடவே காசி கண் சிகிச்சை முகாமின் உதவியுடன், இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஏழைகளின் பார்வையில் ஒளியேற்றி வைத்து உள்ளார்.

நடிப்புடன் பல்வேறு உதவி திட்டங்களை இந்தியாவில் செய்துவரும் விக்ரம், இப்போது ஐ.நா.வின் வாழ்விடம் அமைப்பில் இளைஞர் தூதராக பணியாற்றி, உலகம் முழுவதும் சேவை செய்ய இருக்கிறார்.

No comments: