இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களை சேர்க்காமல் இருப்பதை முன்னிட்டு பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி 'எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்த வேண்டாம்" என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல். விளையாட அனுமதிக்கவேண்டும், இந்த தொடர் வரை 3 சீசன்களாக பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இந்தியாவில் விளையாடுவது பற்றி எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. இப்போதுதான் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவில் விளையாடினோம். இது போன்று எங்களை 'தீண்டத் தகாதவர்கள்' போல் நடத்துவது எங்களை மிகவும் காயப்படுத்துகிறது." என்றார் அஃப்ரீடி.
"நான் ஐ.பி.எல். விளையாட வேண்டும் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை. இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஒரு சிறந்த அரங்கேற்றமாக அமையும்." என்றார் அஃப்ரீடி.
2009, 2010 தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு கருதி இதனைச் செய்தததாக அப்போது சாக்கு கூறப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானியை அழைத்தது ஒரு நல்ல அறிகுறி. அதேபோல் இப்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எங்களுக்கு வாய்ப்பளிப்பதும் ஒரு சிறந்த ஒற்றுமை உணர்வாகும். என்றார் அஃப்ரீடி.
No comments:
Post a Comment