உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை சோனுசின்கா. தேசிய அளவில் விளையாடி வருகிறார்.26 வயதான சோனுசின்கா மத்திய தொழிற்பேட்டை வேலைக்கான தேர்வு எழுதி விட்டு பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நொய்டாவில் இருந்து பைசாபாத் திரும்பி கொண்டிருந்தார். உத்தரபிரதேச மாநிலம் பரேலி ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது, கொள்ளையர்கள் அவரிடம் நகையை பறிக்க முயன்றனர்.
அவர் பதிலுக்கு கடுமையாக போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளினர். இதில் தண்டவாளத்தில் விழுந்தார். எழுந்து சுதாரிப்பதற்குள் அந்த தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயில் அவர் மீது ஏறியது.
இதில் சோனுசின்கா தனது இடது காலை இழந்தார். ரத்தம் கொட்டிய நிலையில் அவர் 6 மணி நேரம் தண்டவாளத்திலேயே கிடந்தார். அதற்கு பிறகு தான் ரெயில்வே போலீசார் தாமதமாக அங்கு வந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய்மக்கான் உடனடியாக கருணை தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment