அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, May 9, 2009

ெவள்ளிக்கிழமையில்.......

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள்.
புகாரி;எண் 935
ஜும்’ஆவை விடுபவரின் நிலை;
அலட்சியமாக யார் மூன்று ஜும்’ஆக்களைவிட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டுவிடுகிறான் என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக அபுல்ஜ்ஃது[ரலி] அறிவித்தார்கள்.
ஆதாரம்; திர்மிதி,460.

No comments: