இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது. மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.- 45:37
பெருமை என்பது இறைவனுக்குரியது, இறைவனுக்கு மட்டுமே உரியது என்பதை வலியுறுத்தும் வசனம்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனம். இந்தப் பெருமையில் மனிதனுக்கு எந்தப் பங்குமில்லை.
கசகசா செடியின் விதையின் அளவுக்கேனும் தன்னுடைய இதயத்தில் தற்பெருமையை வைத்திருப்பவர்களை அல்லாஹ் நரக நெருப்பில் தூக்கி எறிவான் (நூல்:அஹ்மத்) என நபிகள் நாயகம் (ஸல்) கடுமையாக எச்சரிப்பதிலிருந்து இந்த பாவத்தின் கொடுமையை உணர்ந்து கொள்ளலாம்.
ஆனால் இன்று சிறிதளவு மார்க்கத்தை கற்றுக் கொண்டதும், அல்லது ஏதாவது சில நற்பணிகளில் ஈடுபட்டதும் பெருமை நம் உள்ளத்தில் அனுமதி இன்றி அமர்ந்து கொள்கிறது. இது நமது பொது எதிரியான சைத்தானின் தூண்டுதலாகும். குர்ஆனில் இறைவன், இப்லீஸை பற்றி அறிமுகப்படுத்தும்போது
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, ''ஆதமுக்குப் பணி(ந்து ஸ{ஜூது செய்)யுங்கள்"" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன்(இப்லீஸ{) மறுத்தான். ஆணவமும் கொண்டான். இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். – 2:34
என பெருமையின் காரணத்தால் மலக்குகளிடையே சிறப்பாக இருந்தவன் எவ்வாறு மடையனாகி போனாhன் என கூறுகிறான். இவ்வாறு நாம் ஆகிவிடாமல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். நம்மை நாமே தூயவர்கள் என சொல்வதற்கு நமக்கு என்ன உரிமை உள்ளது? அல்லாஹ் கூறுகிறான்:
எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான். – 53:32
எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான். – 53:32
இவ்வாறு நம்மை நாமே புகழ்ந்து கொள்வதற்கும் அனுமதியில்லை. மற்றவர்களையும் அவ்வாறு ஒருவருக்கு முன்னிலையில் புகழ்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இவ்வாறு மற்றவர்களை அவருக்கு முன்பாக புகழும்போது அவருடைய உள்ளத்தில் பெருமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு தடவை நபிகளார் (ஸல்) முன்னிலையில் சபையிலிருந்த மனிதரைப் பற்றி மற்றவர் புகழ்ந்து கூறினார். இதனைக் கண்டித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்தவரைப் பார்த்து நீ உனது நண்பனின் தலையை வெட்டி விட்டாயே என கண்டித்ததோடு நீங்கள் யாரையாவது புகழ நினைத்தால் நான் இன்னாரை பற்றி இப்படி நினைக்கிறேன் , ஆனால் அல்லாஹ்தான் அவரைப் பற்றி தீர்மானிக்க கூடியவன் என கூறுங்கள். யாரையும் தூய்மையாளர் என புகழாதீர்கள் என அறிவுறுத்தினார்கள். ( அப்துர் ரஹமான் பின் அபி பரக்கா (ரழி) அறிவிக்க புஹாரி, முஸ்லிமில் இடம் பெற்றது).
ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை இவ்வாறு புகழ்வதை தடை செய்துள்ளார்கள்? நாம் யாரை புகழ்ந்து பேசுகிறோமோ அவரும் மனிதர்தான். ஆனால் இவ்வாறான புகழ்ச்சியை கேட்கும்போது அவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணிக் கொள்கிறார். இவ்வாறு புகழப்படுபவர் செல்வந்தராகவோ அல்லது ஏதாவது பதவியிருப்பவராகவோ இருந்தால் கேட்கவே வேண்டாம். இந்தப் புகழ்ச்சிகள் அவருக்கு பெருமையை ஏற்படுத்தி அல்லாஹ்விடத்திலிருந்து தூரமாக்கி விடும். நாம் அதிகமான நற்காரியங்கள் செய்வதால்தான் நமக்கு இந்த புகழ் என நினைக்கும் அவர் இந்த புகழ்ச்சியை விரும்பி மேலும் நல்ல காரியங்கள் செய்வார். ஆனால் இவை அவருக்;கு மறுமையில் எந்த பலனையும் அளிக்காது.
மறுமையில் விசாரணைக்கு கொண்டு வரப்படும் கல்வியாளர், முஜாஹித் மற்றும் செல்வந்தர் ஆகியோர் இறைவனுக்காகவே தான் கல்வியை போதித்ததாக, களத்தில் போராடியதாக, செல்வத்தை கொடுத்ததாக கூறுவர். ஆனால் அல்லாஹ் இவற்றை மறுத்து நீங்கள் மக்கள் உங்களை சிறந்த அறிஞர், சிறந்த வீரர், சிறந்த கொடைவள்ளல் என கூறுவதற்காகத்தான் இவ்வாறு செய்தீர்கள் என நரகத்திற்கு அனுப்புவான். அல்லாஹ் பாதுகாப்பானாக. எனவேதான் இந்த விசயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
இந்த தீய குணமான பெருமை நம்மிடமிருந்து விலக வேண்டுமென்றால் அல்லது வரமால் பாதுகாக்க வேண்டுமானால் நமக்கு தேவையான பண்பு பணிவு. ஒரு முஸ்லிமிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்பாக அல்லாஹ்வும், தூதரும் வலியுறுத்தும் பண்புகளில் ஒன்று பணிவு. பணிவு ஏற்படுவதற்காக அல்லாஹ்வின் தூதர் பல வழிpகளை சொல்லித்தந்துள்ளார்கள்.
இன்று நம்மிடையே இயக்கத்தை வைத்து பெருமை அடித்துக் கொள்கிறோம். நாம் சார்ந்த இயக்கம்தான் சொர்க்கத்துக்கு செல்லும் இயக்கம், மற்றவை இறைவனின் பார்வையில் மதிப்பில்லாதவை என எண்ணி பூரிப்பெய்தி சக முஸ்லிமுக்கு ஸலாமும் சொல்வதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்கிறார்: இஸ்லாத்தில் எந்தப் பகுதி மிகவும் சிறந்தது? அண்ணலார் (ஸல்)சொன்னார்கள்: உணவளிப்பதும், நீங்கள் அறிந்த, அறிந்திராத அனைவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும் ( அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அறிவித்து புஹாரி, முஸ்லிமில் இடம் பெற்றது). இவ்வாறு முதியவர், சிறியவர் , பணக்காரர், ஏழை, அறிந்தவர், புதியவர், அனைத்து இயக்கத்தவர் என ஸலாம் சொல்லும்போது நமது மனதில் உள்ள பெருமை கருகிப் போவதை உணரலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) பல்வேறு கொடுமைக்காளாகி மதினாவுக்கு சென்று மீண்டும் வெற்றி வீரராக மக்காவில் பிரவேசிக்கும்போது மிகவும் பணிவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நுழைகிறார்கள். இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற வெற்றுக் கோஷங்கள் அங்கு இல்லை. ஆனால் இந்தப் பணிவு நம்மிடையே இன்றிருக்கிறதா?
நன்றி - பார்வை
No comments:
Post a Comment