அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, September 27, 2009

கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஒப்புதல்


கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேரிடம் இருந்து தகவல்களைப் பெற்றதாக கைது செய்யப்பட்ட சுதான்ஷு சுதாகர் ஒப்புக் கொண்டதாக மாவட்ட கண்காணிப்பாளர் வினித் விநாயக் புதன்கிழமை தெரிவித்தார். இது குறித்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காக, இந்தத் தகவல்கள் ராணுவ உளவுத் துறை அதிகாரிகளிடம் அளிக்கப்படும் என்றார். பிகாரில் சீதாமார்ஹி மாவட்டத்தில் கங்கர்பாக் போலீஸ் எல்லைக்குள்பட்ட பகுதியில் சுதான்ஷு சுதாகர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்த சுதான்ஷுவின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால் 2007-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஆந்திரத்தில் செகந்திராபாத் ஆகிய இடங்களில் ராணுவத்தைப் பணியமர்த்துவது குறித்தும், இந்திய ஏவுகணைகள் குறித்தும் பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஏஜென்டிடம் தகவல் அளிப்பதற்காக நேபாளத் தலைநகர் காத்மாண்டு செல்ல இருந்த நிலையில் சுதான்ஷு பிடிபட்டார்.

No comments: