அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, October 16, 2009

ஆபாச ஊடகத்ததால்வழிதவறிப் போகும் சிறுவர்கள்: 9 வயது சிறுவன் கற்பழிப்புகுற்றத்திற்காக கைது!


ஊடகங்களும், சினிமா உள்ளிட்ட தொலைக்காட்சிகளில்இடம்பெறும் ஆபாச நிகழ்ச்சிகளும் காட்சிகளும் சிறுவர்களையும்குற்றம் செய்யத் தூண்டுகின்றன என்பதற்கு உதாரணமாககீழ்க்கண்ட இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில்கைதான சிறுவன் என்ற நிலையை ஹிமாச்சலப் பிரதேச மாநிலம்இன்டோரா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பெற்றுள்ளான்.
ஆம். ஒன்பதே வயதான அந்த சிறுவன், தன்னுடன் விளையாடிய 6வயது சிறுமியை, வீட்டில் அவர்களின் பெற்றோர் இல்லாதநேரத்தில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம்செய்துள்ளான்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,மைனரான சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர்,சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிணையில்விடுவித்துள்ளனர்.
இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 376 (கற்பழித்தல்)பிரிவின் கீழ் அந்த சிறுவனைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
காவல்நிலையத்தில் ஒருநாள் இருந்த அவனை, சிறுவர்நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் 10 வயதான மாணவர்கள் 3 பேர் சேர்ந்து,அவர்கள் படித்த பள்ளியைச் சேர்ந்த 4 வயதான மாணவியைபாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறி வழக்குப் பதிவுசெய்யப்பட்ட ஓரிரு தினங்களில், ஹிமாச்சலப் பிரதேசமாநிலத்தில் 9 வயதான சிறுவன் கற்பழிப்பு வழக்கில்கைதாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாகஅமைந்துள்ளது.
இண்டோரா அருகே ஜலோரா மொஹல்லா என்ற இடத்தைச்சேர்ந்த அந்த குழந்தைகள் இருவரும் தினமும் பள்ளிக்கு ஒன்றாகவருபவர்கள். பல ஆண்டுகளாக ஒன்றாக விளையாடுபவர்கள்.
கடந்த ஞாயிறன்று இதேபோல சிறுமியின் வீட்டில் இருவரும்விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமியின் பெற்றோர்வெளியே சென்று விட்டனர்.
அப்போது திடீரென்று அந்த சிறுவன் குளியலறைக்குள் சிறுமியைஇழுத்து, அந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளான். சிறுமி மறுத்தபோதிலும் அடித்து பணிய வைத்துள்ளான்.
சிறுமி, சிறுவனை எதிர்த்துப் போராடியதன் காரணமாகசிறுவைனின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறைஅதிகாரி தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் மாலையில் வீடு திரும்பியதும், சிறுமிஅழுது கொண்டிருப்பதை அறிந்து விசாரித்துள்ளனர். சிறுமிக்குஇரத்தப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிறுவனையும்,சிறுமியையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதுஉறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே உனா என்ற இடத்தில் உள்ள சிறுவர்கள்நீதிமன்றத்தில் அந்த சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.
பொதுவாக 5ஆம் வகுப்பு படிக்கக்கூடிய குழந்தைப் பருவம் மாறாதஒரு சிறுவன், தன்னுடன் விளையாடும் சிறுமியைபாலியல்ரீதியில் துன்புறுத்தத் தூண்டியது எது?
பெற்றோரின் அலட்சியப் போக்கு என்பதுடன், அவர்கள் வாழும்சூழல், பார்க்கும் காட்சிகள், பழகும் நண்பர்கள் என்றுஎண்ணற்றவற்றைக் கூறலாம்.
அதற்கேற்ப இன்றைய வளர்ந்து விட்ட, தொலைக்காட்சிஊடகங்களிலும், திரைப்படங்களிலும் இடம்பெறும் காட்சிகளும்பிஞ்சு மனதில் ந்ஞ்சை விதைக்கின்றன என்பதை மறுக்கமுடியுமா?
இதற்கு ஒரே தீர்வு ஊடகங்கள் ஆபாசத்தை நிறுத்த வேண்டும்.அல்லது நம்குழந்தைகளை அதை விட்டு நாம் காக்க வேண்டும்.

No comments: