ஈராக்கில் பாக்தாதின் தெற்கே புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாபில் பகுதில் புற்று நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு உயர்ந்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அங்குள்ள மக்கள், "அமெரிக்க இராணுவம் 2003-இல் ஈராக்கை ஆக்கிரமிக்கும் போது தங்கள் ஆயுதங்களில் பயன்படுத்திய யுரேனியம் தான் இதற்கு காரணம்" என்று கூறுகின்றனர். 2004 ல் மட்டும் 500 பேர் புது நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களில் இந்த எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.
2008 ல் இந்த எண்ணிக்கை ஏழு மடங்காக உயர்ந்து 7000 -த்தை எட்டியது. இந்த வருடம் 9000 பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
ஈராக்கிய ஆய்வாளர்கள், "கதிர்வீச்சு தான் இந்த புற்று நோய் மற்றும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறப்பதற்கு காரணம்" என்று கூறுகின்றனர்.
கிரிஸ்டோபெர் ரூபி என்ற பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் இந்த துறையில் ஆய்வு மேற்கொண்டு, "இந்த யுரேனியத்திற்கும் புற்று நோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆதாரத்தை நீதிமன்றத்தில் தான் சமர்ப்பித்ததாகவும் அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு இந்த புற்று நோய்கள் பயன்படுத்தப்பட்ட யுரேனிய பொருட்களால் ஏற்பட்டவை தான்" என்று உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த பத்து வருடங்களில் நடந்த ஆய்வின் படி யுரேனியம் மனிதனுக்கு தெரிந்த பொருட்களில் மிகவும் ஆபத்தானது என்றும் குறிப்பாக அவை போர்களில் பயன் படுத்தப்படும் போது மிகவும் ஆபத்தானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
நன்றி
அல் ஜசீரா.
No comments:
Post a Comment