சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த கணக்கு விவரங்களை இந்தியாவுக்குக் கைமாற்ற சுவிட்சர்லாந்து அரசு சம்மதித்துள்ளது. அதற்கு ஏற்றாற் போன்று சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பல லட்சம் கோடி கணக்கில் வராத பணம் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்ட பணம் தொடர்பான விவரங்களைத் தர இயலாது என சமீபத்தில் சுவிஸ் வங்கிகள் அறிவித்து, இந்திய அரசின் இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தன.
இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த தகவல்களை இந்தியாவுக்குக் கைமாற சுவிஸ் அரசு சம்மதித்துள்ளதாகவும் இதுதொடர்பான சட்ட திருத்தம் வரும் டிசம்பருக்குள் கொண்டு வரப்படும் எனவும் கருப்புப் பணம் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இருநாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டும் எனவும் சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
டிசம்பருக்குள் இதற்கான சட்டவரைவுகள் முடிவுக்கு வந்தால், ஜனவரிக்குள் கருப்புப் பணம் குறித்த முழுமையான தகவல்கள் இந்தியாவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment