அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 4, 2011

இறையச்சம் (கை)கூடியதா?

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 2
தொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள், அழைப்புப் பணி நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும், தொடர்ந்து வரும் 11 மாதங்களில் ஈடுபாடும் கவனமும் குறைந்து காணப்படுகிற நிலையில்தான் பெரும்பாலானோர் வாழ்க்கை கழிகிறது.

ரமளான் தினங்களில் தினம் தோறும் அக்கறையாக கவனத்துடன் கூட்டாக ஃபஜ்ருத் தொழுகை எனும் அதிகாலை தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள், ரமளான் அல்லாத காலங்களில் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழாமல் தூங்கிவிடுவதும், மற்ற தொழுகைகளில் கவனக்குறைவாக அக்கறையின்றி செயல்படும் நிலையையும் பரவலாகக் காண முடிகிறது.
குர்ஆனை அதிகமாக ஓதியவர்கள், குர்ஆனை விட்டு தூரம் ஆகிவிடுவதும் அவரவர் வாழ்க்கையில் இருந்து குர்ஆனும் நபிவழியும் தூரமாகி விடுவது மட்டுமில்லாமல் மீண்டும் புறம், கோள், மோசடி, விரயமான கேளிக்கைகள் என்று ரமளானில் பெற்ற நன்மைகளை விடப்பல மடங்கு அதிகமாக சொல், செயல், செவி, பார்வைகளின் மூலம், தொடர்ந்து வரும் 11 மாத காலம் தீமைகளில் மூழ்கிவிடுகின்றனர்.

இதிலிருந்து கிடைக்கும் செய்தி என்ன? ரமளானில் குர்ஆனைப் படித்தவர்கள் தமது உள்ளத்தில் அதன் கட்டளைகள் பதியுமாறு அதனைப் படிக்கவில்லை என்பதை இதன் மூலம் பறை சாற்றுகின்றனர். ரமளான் மாத இரவுகளில் நின்று வணங்கியவர்கள் இறை அச்சத்துடன் தாங்கள் அத்தொழுகைகளை நிறைவேற்றவில்லை என்பதை உரக்க அறிவிக்கின்றனர்.

ரமளான் மாத நோன்புகளை நோற்றவர்கள் நோன்பை எந்த நோக்கத்திற்காக இறைவன் விதித்தானோ அந்நோக்கத்தை மனதில் ஏந்தி அந்நோக்கத்தில் முழுமை பெறுவதற்காக நோன்புகளை நோற்கவில்லை என்பதை உலகிற்குக் கூறாமல் கூறுகின்றனர்.

".... நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்களாகலாம்." (அல்குர்ஆன் 2: 183)

ஒரு செயலைச் செய்யும் பொழுது அச்செயல் எந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டதோ அந்நோக்கம் முழுமை அடைவதைப் பொருத்து அச்செயலின் பிரதிபலன் கிடைக்கிறது. இது எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். அதுபோலவேதான் நோன்பும். ரமளான் மாதத்தில், 29 அல்லது 30 நாட்களில் பகல் முழுவதும் உண்ணுவதையும் பருகுவதையும் தவிர்த்து, இன்னபிற இச்சைகளையும் அடக்கி வாழ்ந்தவர்களின் நோக்கம் இறைபக்தியை தம்முள் ஏற்படுத்தி/வளர்த்துக் கொள்வதே. ஒரு நோக்கத்துக்காகப் பலவற்றைத் துறந்த ஒருவர், அந்த நோக்கத்தை அடைந்து கொண்டாரா என்பதை எளிய சுயசோதனை மூலம் அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும்.

கடந்த ஆண்டின் நோன்பு நாட்களில் அமைந்திருந்த தம் இறையச்ச நடைமுறைகள், கடந்த நோன்புப் பெருநாள் முதல் இந்த ரமளானின் முதல்நோன்பு வரைக்கும் எந்த அளவு தம் வாழ்வில் வெளிப்பட்டிருக்கின்றன? என்பதை ஒருகணம் அசைபோட்டுப் பார்த்தால், அல்லாஹ் கூறும் "இறையச்சம் உடையவர்கள்" ஆகிக் கொண்டிருக்கிறோமா? ஆகிவிட்டோமா? ஆகவேயில்லயா? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். நோன்பிருந்ததன் நம் நோக்கம் எத்துணை அளைவு நிறைவேறி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.


- தொடரும் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

Thanks
S.Margam

மீண்டும் ஒரு ரமளான்


மீண்டும் ஒரு ரமளான்printEmail
இஸ்லாம் இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
ரமளான் பிறை 1

ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்காக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறைவனுக்குக் கட்டாயம் தங்கள் நன்றியினைச் சொல்லாலும் செயலாலும் அவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இம்மாதத்தின் மகத்துவத்தினைக் குறித்து நபி(ஸல்) அவர்கள்,
'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன".... - (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் 1957) என்றும்,
'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761) என்றும் அறிவித்தார்கள்.
ரமளான் மாதம் நன்மைகளை அதிகமதிகமாகப் பெற்றுத் தரும் மாதம். ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்குவரை நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் மாதம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.

இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் ரமளானை எதிர்பார்த்து அதில் நோன்பு நோற்ற நிலையில் அதிகமான வணக்க வழிபாடுகள், தர்மங்கள், குர்ஆன் ஓதுதல், அதிகமாக மார்க்க விஷயங்களில் ஈடுபடுதல் போன்று நன்மைகளில் தமது நேரத்தை முஸ்லிம்கள் அதிகமாகக் கழிக்கின்றனர். தம்மிடமிருந்து சொல்லாலோ செயலாலோ பார்வையாலோ எந்த ஒரு தவறும் நிகழக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் எல்லாவித சிறிய பெரிய பாவங்களிலும் இருந்தும் நோன்பாளியான நிலையில் தவிர்த்துக் கொள்கின்றனர்.

முஸ்லிம் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நோன்பு நோற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தமது ஐவேளைத் தொழுகைகளை மற்ற நாட்களில் சரியாக நிறைவேற்றாதவர்களும்கூட மிக ஆர்வமாக இம்மாதத்தில் நோன்பு நோற்பதையும் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதையும் அதிகமாகக் குர்ஆன் ஓதுவதையும் காணலாம்.

அதிகமாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், முஸ்லிம்களிடம் இம்மாதத்தில் மிகுந்து இருப்பதைக் காணமுடியும். "எப்படியாவது அல்லாஹ்விடம் நன்மைகளைப் பெற்று கொள்ள வேண்டும்; தான் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்புப் பெற்று மீட்சி அடைந்திட வேண்டும்" என்று முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.

புனித ரமளானின் ஒரு மாத கால அளவில் காணப்படும் நற்செயல்களின் மீதான ஆர்வம் நோன்பு மாதம் முடிந்ததும் மீண்டும் தலைகீழாக மாறிவிடும் நிலையைச் சமூகத்தில் பரவலாகக் காண முடிகிறது. நோன்பின் சமயங்களில் செய்த நல்லறங்கள், பேணிய ஒழுக்கங்கள், காட்டிய நற்பண்புகளை அடுத்த பதினொன்று மாதங்களுக்குப் பூட்டி வைக்கும் நிலையைக் குறித்து இச்சமூகம் இன்னும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை? புனித ரமளான் மூலம் தான் அடைந்த நன்மை என்ன? அதற்கான பிரதிபலன் பெறும் தகுதி தனக்கு உள்ளதா? எனத் தன்நிலையைக் குறித்து சுயபரிசோதனை செய்ய முஸ்லிம்கள் தவறி விடுகின்றனர்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

- தொடரும் இன்ஷா அல்லாஹ்.

Thanks
S.Margam

தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவனும் விலகுகிறார்!

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமும் அதுபற்றி பேசியிருக்கிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி உலகத் தமிழர்களின் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கையெழுத்துகளை வாங்கி அவற்றை ஐ.நா. சபைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் பழனிமுத்து தலைமையில் வெள்ளிக் கிழமையன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியது வருமாறு:

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமும் அதுபற்றி பேசியிருக்கிறேன்.

தற்போது என்னுடைய எண்ணத்தின்படி, பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ராமதாசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ராமதாஸ் அழைப்பு விடுத்தால், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, பா.ம.க. அணியில் சேர்வது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டின் பக்கங்கள் அதிகம்; திட்டங்கள் இல்லை: ராமதாஸ்!!!

தமிழக நிதிநிலை அறிக்கை அதிக பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக திட்டங்கள் எதுவும் இல்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை அதிக பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக திட்டங்கள் எதுவும் இல்லை.

மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர ஆசிரியர்களை அமர்த்துவது குறித்தோ அல்லது பள்ளிகளை தரம் உயர்த்துவது குறித்தோ நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

ரூ 12 ஆயிரம் மகப்பேறு நிதி உதவித் திட்டம், விவசாயிகளுக்கு ரூ 3 ஆயிரம் கோடி வட்டியில்லாக் கடன், நடமாடும் மருத்துவமனை ஆகிய திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

சென்னைக்கு சற்றும் ஒத்துவராத மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது சரியல்ல.

கடந்த மார்ச் நிலவரப்படி தமிழகத்தின் கடன்சுமை 1,01,349 கோடி ரூபாயாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டின் இறுதியில் 1,18,801 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஓராண்டில் 17,452 கோடி ரூபாய் கடன் உயர்ந்தால் தமிழகம் தாங்காது. தமிழகத்தின் மொத்த வருவாயான ரூ 72,413 கோடியில் 10.31 விழுக்காடு அதாவது சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிக்கே செலவிடப்படும் நிலை மாற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, August 2, 2011

500 புதிய சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் விண்டோஸ்-மேங்கோ!

மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பேசிகளுக்கான புதியவகை மென்பொருளை இம்மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் மற்றும் கூகில் நிருவனங்களின் அசுரவளர்ச்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட், கைபேசி சந்தையில் தான் இழந்தை மீட்கும் முயற்சியில் தீவிரவாக இறங்கியுள்ளதை அடுத்து, 500 புதிய சிறப்பம்சங்களுடன் சந்தைக்கு வருமென்று மைக்ரோசாப்ட் கைப்பேசி நிறுவனத்தின் துணைத்தலைவர் டெர்ரி மியர்சன் தெரிவித்துள்ளார்.

இணைய தொடர்புக்கு இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9, ஆட்டோ ஃபோகஸ் வசதியுடன் கூடிய 13.2 மெகா பிக்சல் துல்லியமுள்ள கேமரா,32 GB கொள்ளளவு கொண்ட நினைவகம் ஆகிய சிறப்பம்சங்களுடன் வரும் செப்டம்பரில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைலுக்காக உருவாக்கப்படும் இந்த புதிய சாஃப்டுவேடுவேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் மேங்கோ என்று பெயரிட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்களின் வருகையால் இழந்த சந்தையை மீட்டெடுக்கும் நோக்கில் தீவிரவாமக் இறங்கியுள்ள மைக்ரோசாஃப்ட்டின் அறிவிப்பு, தொழில்நுட்ப விரும்பிகளால் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாஃப்டை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும், கூகிலின் ஆண்ட்ராய்டும் தங்கள் தயாரிப்புகளில் மேலும்பல புதுமைகளை புகுத்தும்பட்சத்தில் நவீன கைபேசி பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

செம்பைத் தங்கமாக மாற்றும் முயற்சியில் மந்திரவாதி பலி!

நெல்லை அருகே செம்பு பானையைத் தங்கமாக மாற்ற முயன்ற மந்திரவாதி செம்பு வெடித்து பலியானார். அவர் சித்தர்களின் புத்தகத்தைக் காண்பித்து செம்பைத் தங்கமாக மாற்றுவதாக நம்ப வைத்ததால் அழைத்து வந்ததாக விவசாயி காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் அருகேயுள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் விவசாயி அழகியநம்பி. இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றபோது, அண்ணாநகரைச் சேர்ந்த கணேஷ் பொன்னம்பலம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தன்னைப் பிரபல மந்திரவாதி எனவும், பில்லி சூனியம் வைப்பதில் கைதேர்ந்தவன் எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மேலும் பழங்காலத்தில் சித்தர்கள் மந்திரங்கள் மூலம் நிகழ்த்திய அற்புத சம்பவங்கள் அடங்கிய புத்தகங்களைக் காண்பித்து, அதில் உள்ளவாறு செம்பு, பித்தளை சாமான்களைத் தங்கமாக மாற்றும் வல்லமை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அழகியநம்பி தனது ஊருக்கு வருமாறு கணேஷ் பொன்னம்பலத்தை அழைத்துள்ளார். அப்போது அவர் ஆடி அமாவாசையையொட்டி மந்திரங்கள் நல்ல பலனளிக்கும். அப்போது வருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன்படி மந்திவாதி தனது உதவியாளர்கள் கல்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சங்கர் ஆகியோருடன் நேற்று முன்தினம் அழகியநம்பியின் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் தனது வீட்டில் இருந்த செம்பு, பித்தளை பானைகளை எடுத்து மந்திரவாதியிடம் கொடுத்தார். செம்பு பானையில் சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட ரசாயன கலவைகளையும், மந்திர பொருட்கள் என்ற பெயரில் சிலவற்றையும் போட்டு பித்தளை மூடியினால் ஆவி வெளியேறாதபடி மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்திய போது பானை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் மந்திரவாதி பலியானார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அழகிய நம்பியிடம் பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும் போது, "சித்தர்களின் வழியில் பித்தளை, செம்பு சாமான்களைத் தங்கமாக மாற்ற முடியும் என்று மந்திரவாதி கூறியதால் தங்கத்திற்கு ஆசைப்பட்டு அவரை இங்கு அழைத்து வந்தேன். அவர் எனது வீட்டின் எதிரில் உள்ள காலிமனையில் அடுப்பு மூட்டி, நான் கொடுத்த செம்பு பானையில் சில பொருட்களைப் போட்டு மந்திரங்கள் செய்தார். திடீரென அந்தப் பானை வெடித்து சிதறியது. இதில் மந்திரவாதி பலியாகிவிட்டார்" என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த சங்கர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவானதாக கருதப்பட்ட மற்றொரு உதவியாளர் கோவிந்தன் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர்களிடம், இதுபோன்று யார் யாரிடம் தங்கமாக மாற்றும் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர் என்பதைக் குறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இளம்பெண்களைச் சீரழிப்பதே பணக்காரர்களின் பொழுதுபோக்காகி விட்டது- கேரள நீதிபதி!

"இளம்பெண்களுடன் பாலியல் உறவு வைத்து கொள்வது பணக்காரர்களின் பொழுதுபோக்காகி விட்டது" என இளம்பெண் பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணையின்போது கேரள நீதிபதி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பரவூரைச் சேர்ந்த 14 வயது மாணவியை 100-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் அந்த மாணவியின் தந்தை, காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபல பணக்காரர்கள் உள்பட 60 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.

மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ள கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தாமஸ் வர்கீஸ் உள்பட 8 பேர் ஜாமீன்கோரி விண்ணப்பித்து இருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி கே.டி. சங்கரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கூறியதாவது:

"பணக்காரர்களுக்கு இளம்பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பொழுதுபோக்காகிவிட்டது. கன்னிப் பெண்களுக்கு மவுசு அதிகமாகிவிட்டது. ஒரு வேளை எய்ட்ஸ் வந்துவிடும் என்று இப்படி செய்கிறார்களோ?" என்றார். பின்னர் அவர் அந்த 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

லேப்டாப் கொண்டுபோகவே இல்லை - வெங்கையா நாயுடு!

தன்னுடைய மடிக்கணியைக் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கோபத்தில் எறிந்து உடைத்ததாக வெளியான தகவலைப் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துள்ளார்.
கர்நாடகாவின் முதலமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் ராஜினாமா செய்த எடியூரப்பா, தம்மை ராஜினாமா செய்ய வலியுறுத்திய பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவின் மடிக்கணினியைக் கோபத்தில் பறித்து உடைத்தெறிந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இச்செய்தியினைத் தற்போது வெங்கயா நாயுடு மறுத்துள்ளார். அன்றைய சந்திப்பின் போது தன்னுடைய மடிக்கணினியினை ஹோட்டலுக்குக் கொண்டுசெல்லவே இல்லை என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு லலித் அசோக் ஹோட்டலில், எடியூரப்பாவைச் சந்தித்த பாஜக மூத்த பிரதிநிதிகள், அவரை உடனடியாக பதவி விலகுமாறு கூறி சமாதானப்படுத்திக்  கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கோபமுற்ற எடியூரப்பா, வெங்கையா நாயுடுவின் மடிக்கணினியினைப் பறித்து, நிலத்தில் எறிந்ததாகவும் அருகிலிருந்த இன்னொரு அமைச்சரின் கன்னத்தில் அறைந்ததாகவும் பாஜக ஆதரவு பத்திரிக்கைகளிலேயே செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.