தன்னுடைய மடிக்கணியைக் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கோபத்தில் எறிந்து உடைத்ததாக வெளியான தகவலைப் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துள்ளார்.
கர்நாடகாவின் முதலமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் ராஜினாமா செய்த எடியூரப்பா, தம்மை ராஜினாமா செய்ய வலியுறுத்திய பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவின் மடிக்கணினியைக் கோபத்தில் பறித்து உடைத்தெறிந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இச்செய்தியினைத் தற்போது வெங்கயா நாயுடு மறுத்துள்ளார். அன்றைய சந்திப்பின் போது தன்னுடைய மடிக்கணினியினை ஹோட்டலுக்குக் கொண்டுசெல்லவே இல்லை என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு லலித் அசோக் ஹோட்டலில், எடியூரப்பாவைச் சந்தித்த பாஜக மூத்த பிரதிநிதிகள், அவரை உடனடியாக பதவி விலகுமாறு கூறி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கோபமுற்ற எடியூரப்பா, வெங்கையா நாயுடுவின் மடிக்கணினியினைப் பறித்து, நிலத்தில் எறிந்ததாகவும் அருகிலிருந்த இன்னொரு அமைச்சரின் கன்னத்தில் அறைந்ததாகவும் பாஜக ஆதரவு பத்திரிக்கைகளிலேயே செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment