சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வாதப் பிரதிவாதங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்தன. வழக்கின் தீப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜூன் 22-ந்தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்கபட வேண்டும் என்றும் கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க இயலாது. போதிய அவகாசம் வேண்டும் என அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டதை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவுவிட்டது.
இந்நிலையில், கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

No comments:
Post a Comment