அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 4, 2011

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் இருந்தால் சிலிண்டர் விலை ரூ.250 உயரும்

புதுடெல்லி : ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருந்தால் காஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகும். சிலிண்டர் விலை 250 ரூபாய்  அதிகரிக்கும். இதற்கான பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக் குழு, அரசிடம் அளித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை குறைக்க அதில் வழிகள் கூறப்பட்டுள்ளன. 

அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது சிலிண்டர் விலையான ரூ.395 மீது அரசு ரூ.250 மானியம் அளிக்கிறது. நிலைக் குழுவின் பரிந்துரையை  அரசு ஏற்றால், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காஸ் சிலிண்டர் விலை உயரும்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்: ஏழைகள், நடுத்தர மக்களின் சிரமத்தை குறைக்க அளிக்கப்படும் மானியங்களை பணக்காரர்கள் அனுபவிப்பது  நிறுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுடன் எம்.பி.க்கள், எல்.எம்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்
டுள்ளது.

தவிர, வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளிக்கும் திட்டத்துக்கு பெட்ரோலிய அமைச்சகம் விரைவாக அனுமதி வழங்கவும், அடுத்த 5 ஆண்டு திட்ட காலம் வரை இந்த திட்டத்தை நீட்டிக்கவும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. 

ஆண்டுக்கு 4 சிலிண்டர்

ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் வரை மட்டுமே மானிய விலையில் அளிப்பது, அதற்கு மேல் சர்வதேச சந்தை விலையில் மட்டுமே சப்ளை செய்வது என்றும் கார் அல்லது பைக், சொந்த வீடு இருப்பவர்களுக்கு இது நடைமுறைப் படுத்தப்படலாம் என்றும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

No comments: