tamil muslim news.

World Wide News.

Your Ad Here

Friday, November 13, 2009

ஆணின் வயிற்றில் இரும்புச் சாமான்கள்

pinsபெரு நாட்டில் மருத்துவர்கள ஓர் ஆணின் வயிற்றிலிருந்து ஒன்றரை பவுண்டு உலோகப் பொருட்களை அறுவை சிகச்சை மூலம் எடுத்துள்ளனர். ஆணிகள், காசு, துருப்பிடித்த செம்பு கம்பி ஆகியன அவர் வயற்றில் பதுங்கியிருந்தன.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், ”குடல் அழற்சி நோய் என்று நினைத்துத் தான் ஆரம்பித்தோம். ஆனால் இதைப் போல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததே இலலை” என்று பேட்டியளித்துள்ளார். ரெக்கொமெ அபான்தோ (Requelme Abanto) என்ற 26 வயது கட்டுமானத் தொழிலாளர் "அவர்கள் என்னை உலோகக் கடை என்று அழைத்தனர்”என்றார்.

”ஒரே நாளில் 17 ஐந்து அங்குல ஆணிகளை பிப்ரவரி மாதம் நான் சாப்பிட்டேன். ஆனால் சாகவில்லை. இனிமேல் இதை ஒரு விளையாட்டாக பொதுமக்கள் மத்தியில் செய்து காட்ட நாடியுள்ளேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விரட்டியடித்த மைக்ரோசாஃப்ட் - திருப்பியடித்த நெட்ஸ்கேப்

மைக்ரோசாஃப்ட் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத அதிர்ச்சி 2004 ஆம் ஆண்டு வாக்கில் ஃபயர் ஃபாக்ஸ் மூலம் கொடுக்கப்பட்டது. பேரரசர்கள் சிற்றரசர்களைச் சிறைப்பிடித்து கப்பம் கட்ட வைத்தது போல் தனக்கு முன்பே சிறிதும் பெரிதுமாக செயல்பட்டு வரும் நிறுவனங்களை காசு கொடுத்து வாங்கி காலடியில் போட்டு வைப்பது அல்லது காலை ஒடித்து முடக்கிப் போட்டு சந்தையிலிருந்தே விரட்டியடிப்பது என்ற முரட்டு முதலாளியாகக் களமிறங்கியது மைக்ரோசாஃப்ட்.

தனக்கு முன் செயல்பட்டு வந்த நெட்ஸ்கேப் குழுமத்தின் நேவிகேட்டர் என்ற உலாவியை, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இணைய உலாவியை தனது விண்டோஸ் இயங்குதளத்துடன் இலவச இணைப்பாக வழங்கி ஆப்படித்தது. ஓசியில் ஏசி கிடைக்கும்போது யார்தான் காசு கொடுத்து விசிறி வாங்குவர்? சொல்லாமல் கொள்ளாமல் அனேக நெட்ஸ்கேப் பயனர்களை வலையில் வீழ்த்தியது மைக்ரோசாஃப்ட்.

மைக்ரோசாஃப்டுடன் கெஞ்சியும் பயனில்லை; மிஞ்சவும் முடியவில்லை என்றான பிறகு, போகும்போது ஏன் சும்மா போகனும். இரு, வைக்கிறேன் ஆப்பு என்று சற்றே பிரபலமாகத் தொடங்கிய ஓபன் சோர்ஸ் என்ற இணையப் பொது உடமைக் கொள்கைக்கு மாறி, ஏழைக்கேற்ற ப்ரவ்சராக நுழைந்து மைக்ரோசாஃப்டுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பஞ்ச தந்திரங்களையும் கையாண்டு மைக்ரோசாஃப்ட்டால் பாதிக்கப் பட்டவர்களையும் மரணடி வாங்கி வீதிக்கு வந்தவர்களையும் ஓரணியில் திரட்டி, 25% சதவீத இணைய உலாவி சந்தையை ஃபயர்ஃபாக்ஸ் பெற்றுள்ளது. மைக்ரோசாஃப்டின் கண்ணில் விரல் விட்ட கூகிலும், பர்சனல் கம்யூட்டரின் பிதாமகன் ஆப்பிலும்கூட மைக்ரோசாஃப்டுக்கு ஆப்படிக்க மைக்ரோசாஃப்டின் தீராத தலைவலியாகிவிட்ட ஃபயர் ஃபாக்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளன.

மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸை கடந்த ஐந்தாண்டுகளில் 330 மில்லியன் பயனாளர்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக தரவிறக்கம் செய்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் அதிவிரைவாக முன்னேறும் இணையத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் வேகமான உலாவியாக இருந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளோம் என்கிறார் மோஸில்லா ஃபவுண்டேசனின் க்ரிஸ் ப்ளிஸார்ட்.

95% இணையப் பயனர்களைக் கொண்டிருந்த மைக்ரோஸாஃப்டை மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளி, விரைவான செயல்பாடு, தொடர்ந்த ஒத்துழைப்பு, மேம்பட்ட சேவைகள், தளையறு உலாவி தடையின்றி கிடைக்க வேண்டும் என்று இயங்கி வரும் ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவிக்கு இன்றோடு ஐந்து வயது பூர்த்தியாகிறது. ஆறாவது பிறந்த நாளுக்குள் கைப்பேசிகளுக்குமான ப்ரவ்சர் சந்தையையும் கலக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். மைக்ரோசாஃப்டின் வயிற்றையும் சேர்த்துக் கலக்குவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

பாஜகவின் பவர் ஜெனரேட்டர் ஆர்.எஸ்.எஸ்.: பாஜக

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பதவி குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியது பாரதீய ஜனதா கட்சியில் குழப்பத்தையோ, பிரச்சனையையே ஏற்படுத்தவில்லை என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு மற்றும் ஆனந்த் குமார் ஆகியார் பாரதீய ஜனதா கட்சித் தலைவராக வரமாட்டார்கள் என்றும் டில்லிக்கு வெளியிலிருந்து ஒருவர்தான் பாஜகவின் தலைவராக இருப்பார் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின்போது குறிப்பிட்டார்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பாஜகவின் விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். தலையிடுவதாகத இதன்மூலம் தான் கருதவில்லை என்று கூறிய அவர், மோகன் பகவத்தின் கருத்து கட்சியில் குழப்பத்தையோ, பிரச்சனையையே ஏற்படுத்தவில்லை என்று கூறினார். பாஜக தன்னுடைய முடிவுகளை சுயமாகவே எடுத்துக் கொள்ளும் என்று மோகன் பகவத் கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ஒரே சிந்தனைக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று கூறிய ஜவதேகர், பாஜக உள்பட ஆர்.எஸ்.எஸ்.சின் அனைத்து துணை அமைப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சக்தி அளிக்கும் மையமாகச் செயல்படுவதாகவும் கூறினார்.

பகத்தின் கருத்துகள் உண்மையான பொருளில் புரிந்து கொள்ளப்படவில்லை என்று கூறிய ஜவதேகர், மோகன் பகவத் கூறிய கருத்துகள் பாஜக தலைமைக்கு அதிகாரம் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக தனிப்பட்ட முறையில் கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்றும் கூறினார்.

Thursday, November 12, 2009

மிஸ்டு காலா? பெண்களே!

உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.

அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன் ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும்.

திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும். சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி (வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லா மேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை. 2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லா மேரி தொடர்பு கொண்டால் எதிர் முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது.

அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார். மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார். கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார்.

இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார். நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள்.

பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர். ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீசார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார்.

அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது. நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார். எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு.

ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது.

கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி. காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

கோவா குண்டு வெடிப்பு மேலும் ஒரு இந்துத் தீவிரவாதி கைது!

கோவா காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு படை மேலும் ஒரு ஹிந்து தீவிரவாத சனதன் சன்ஸ்த்தா அமைப்பை சேர்ந்த எலக்ட்ரானிக் இஞ்ஜினியரை கோவா குண்டு வெடிப்பு சம்மந்தமாக கைது செய்துள்ளது.
பிடிபட்டவர் தனான் ஜை ஆஷ்டெகர்(20) எலக்ட்ரானிக் இஞ்ஜினியர் மாணவர். கெத் ரத்தனகிரியை சேர்ந்தவர். தென்டாம் என்ற ஊரில் சனதன் சனஸ்த்தா உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜெலட்டின் குச்சிகளை கோவாவில் அக்டோபர் 16 அன்று பல இடங்களில் வெடிக்க செய்வதற்கு திட்டம் தீட்டி உள்ளார் என்று போலீஸ் கமிஷ்னர் அட்மரம் தெரிவித்துள்ளார்.

ஜை ஆஷ்டெகர் 12 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் கமிஷ்னர் அட்மரம் தெரிவித்துள்ளார்.
இதுவரை கோவா குன்டு வெடிப்பு சம்பந்தமாக 3 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இதற்கு முன் கைது செய்யப்பட்டுள்ள வினைதலெக்கர் & வினாயக் பாட்டில் இருவரும் இதே சனதன் சன்ஸ்த்தாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
source: sahilonline

Tuesday, November 3, 2009

மோடிக்கு பன்றிக்காய்ச்சல்! பீதியில் தொழிலதிபர்கள்


அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது, வியாழனன்று அவரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பபட்டு இருந்தது சோதனையின் முடிவில் அவ்ருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளதாக நேற்று காலை குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே அவருடன் மாஸ்கோ சென்ற பெரும் தொழிலதிபர்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து குஜராத் மந்திரி சபையில் கடந்த வியாழனன்று முதல்வர் மோடியுடன் மூன்று மணி நேர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஒரு அமைச்சர் கூறும்போது மோடிக்கு பன்றிக்காய்ச்சல் என்ற சந்தேகமான நிலையில் அவர் இந்த அமைச்சரவை கூட்டத்தை நடத்தி இருக்ககூடாது பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும் என்றார்.எனினும் குஜராத் அரசு இதை இன்னும் உறுதிபடுத்த மறுத்துவிட்டது முதல் சோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில் நேற்று மாலை மீண்டும் மற்றொரு மாதிரி சோதனக்கு அனுப்பப்பட்டுள்ளது இந்நிலையில் மோடி அரசு ஏற்கனவே மோடிக்கு பன்றிக்காய்ச்சல் தாக்குதலை மறைப்பதற்காக அந்த மாதிரியை ரமேஷ் என்பவரின் பெயரில் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
source:inneram

பள்ளி இமாமை கொன்றது FBI. அதிர்ச்சியில் அமெரிக்க முஸ்லீம்கள்


அமெரிக்காவில் டெட்ராய்ட் அருகே டியர்பார்ன் எனும் இடத்தில் உள்ளூர் பள்ளி இமாம் அமெரிக்க உளவு படையால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அமெரிக்க முஸ்லீம்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலைக்கும் உள்ளூர் அல்லது சர்வதேச தீவிரவாதத்திற்கும் எவ்வித தொடர்புமுமில்லை என அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் கூட்டமைப்பின் (CAIR) தலைவர் தாவூத் வலீத் கூறினார்.

53 வயதான லுக்மான் அமீன் அப்துல்லா டியர்பார்னில் உள்ள சரக்கு கிடங்கில் புலனாய்வு துறையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அட்டர்னி அலுவலகம் கூறுகிறது. கொலை செய்யப்பட்ட அப்துல்லாவை அமெரிக்காவில் ஒரு இஸ்லாமிய அரசை ஏற்படுத்த முயற்சி செய்த மிக முக்கியமான தீவிர போக்கு கொண்ட சுன்னி தலைவராக ஃஎப்.பி.ஐ கூறுகிறது.

ஆனால் அப்துல்லாவை அதிகாரிகள் பல தடவை திருடு போன பொருட்களை விற்றதாகவும் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் கைது செய்ய முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
CAIR தலைவர் வலீத் அப்பள்ளியில் எவ்வித சட்ட விரோத காரியமும் நடைபெறவில்லை என்றும் தாம் அறிந்த வரையில் அப்துல்லா ஒரு சிறந்த மனிதர் என்றும் கூறினார். அப்துல்லா பல தடவை தன்னிடமுள்ள உடைமைகளை பிறருக்கு அன்பளிப்பு செய்துள்ளதாகவும் அவர் மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உணவளிப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்கள் என்றும் வலீத் கூறினார்.

மேலும் வலீத் அப்துல்லாவை பற்றி கூறுகையில் ”அப்துல்லா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுடன் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். நிறைய இளைஞர்களை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளார்” என்றும் புகழாரம் சூட்டினார்.
source:foxnews,inneram

Saturday, October 31, 2009

பாஜக ஆட்சியில் ரூ. 1,60,000 கோடி ஊழல்!

பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ. 1,60,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் அமைச்சர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

பாஜக தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது செல்போன் சேவை அளித்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் இலவசமாக ஒதுக்கப்பட்டன. டெலிகாம் வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேடு இதுவேயாகும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முரண்பட்ட முடிவுகள் உருவானதற்கும் பாஜக அரசுதான் காரணம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது தொடர்பான முடிவு முதலில் கிடப்பில் போட்டதும் பாஜகதான். பின்னர் மிகவும் வசதியான சமயத்தில் 500 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையை பாஜக அமைச்சரவை ஒதுக்கியது.

2004-ம் ஆண்டு இத்துறை அமைச்சராயிருந்த அருண் செüரி, லைசென்ஸ் கட்டணத்தை 2 சதவீதமாகக் குறைத்தார். அருண் செüரி எடுத்த முடிவினால் மட்டும் ரூ. 900 கோடி இழப்பு ஏற்பட்டதாக ராசா குற்றம் சாட்டினார்.


நன்றி:
http://www.dinamani.com/edition/story.aspx?Title=பாஜக+ஆட்சியில்+ரூ.+1.6+லட்சம்+கோடி+டெலிகாம்+ஊழல்:+ஆ.+ராசா+குற்றச்சாட்டு&artid=147228&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

மார்கோவா குண்டு வெடிப்பு: வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து விசாரணை! , சனாதன் சான்ஸ்தாவை தடைசெய்ய கோவா பரிசீலனை!

கோவா மாநிலம் மார்கோவாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய சனாதன் சான்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்பின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து கோவா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராம்நாதி என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து சிலர் அடிக்கடி வந்து போயிருக்கின்றனர். இதனை காவல்துறையிடம் உறுதி செய்து கெண்டேன். வெளிநாடுகளிலிருந்து வருவோர் காவல்நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய "சி"ஃபார்மைக்கூடத் தாக்கல் செய்யவில்லை என்று கோவா மாநில உள்துறை அமைச்சர் ரவி நாயக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இந்த இடத்திற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் வந்து சென்றிருக்கின்றனர். இங்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இங்கு வந்து சென்ற வெளிநாட்டவர் குறித்து அறிய காவல்துறையினர் முயன்றனர். ஆனால் ஆசிரமத்தில் இதுபற்றிய பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
குண்டு வெடிப்பை நிகழ்த்தியது சனாதன் சான்ஸ்தா என்ற அமைப்புதான் என்ற குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய அந்த அமைப்பைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் சிலர் இது தொடர்பாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இனிமேல்தான் முறைப்படி கைது செய்யப்பட வேண்டும். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த ஆசிரமத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து அறிவது மிகவும் முக்கியம் என்றும் ரவி நாயக் கூறியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த ஆசிரமத்தில் மூன்று பிரெஞ்சுக்காரர்கள் தங்கியிருந்தார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது அவர் கூறினார்.
இந்த அமைப்பை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால் இதுகுறித்து அரசு ரீதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று கோவா மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சுபோத் கான்டக் திங்கள் கிழமையன்று கூறினார்.இந்த அமைப்பை மத்திய அரசுதான் தடை செய்ய வேண்டுமா அல்லது கோவா மாநிலத்தில் மட்டும் தடை செய்யலாமா என்பது குறித்து மாநில சட்ட அமைச்சகம் ஆய்ந்து வருவதாக அவர் கூறினார்.
தீபாவளி அன்று மார்கோவாவில் நடைபெற்ற இருவரைப் பலிவாங்கிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சனாதன் சான்ஸ்தா அமைப்பு மாநிலக் காவல்துறையால் தீவிரமாகக் கன்காணிக்கப்பட்டு வருகிறது.

சம்ஜெளதா குண்டு வெடிப்பு: பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களிடம் விசாரணை


2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் இருந்து லாகூருக்குச் சென்ற சம்ஜெளதா விரைவு இரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் நால்வரிடம் CBI விசாரணை நடத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சைக்கிள் கடை நடத்திவருபவர் பிரவீன் மண்டல், இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவராக உள்ளார். நேற்று, இவரிடமும், மேலும் 3 பேரிடமும் பலாசியா காவல் நிலையத்தில் வைத்து CBI நீ்ண்ட நேரம் விசாரணை நடத்தியது.

சம்ஜெளதா விரைவு இரயிலில் வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் இந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்பதை அறிந்த CBI அது தொடர்பாக பலரை கண்காணித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தூர் நகருக்கு வந்து இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

சம்ஜெளதா விரைவு இரயில் குண்டுவெடிப்பில் 68 பயணிகள் கொல்லப்பட்டனர், பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் இயக்கங்களே காரணமாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
CBI ன் இந்த விசாரணையின் மூலம் சங்பரிவார் அமைப்பினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.