புதுடில்லி: இந்தியாவின் மினி பொதுத்தேர்தல் என்றழைக்கப்படும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இதில் உ.பி., யில் முலாயம்சிங் கட்சி ஆட்சி அமைக்கு கிறது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.இதில் பஞ்சாப், கோவா மாநிலங்களில் முழுமையாக வெளிவந்துள்ளது. மணிப்பூர், உத்தர்கண்ட், உ.பி., மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டும் முடிவுகள் வெளி வர வேண்டியுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் உ .பி.,மாநிலத்தில் ஆளும் கட்சியான பகுஜன்கட்சி ( மாயாவதி ) அதிக இடங்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 220 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. ஆளும் மாயாவதி கட்சி ( 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுது , பா.ஜ., 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.