அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, September 25, 2010

ஹமாஸ் தளபதி இஸ்ரேலிய படைகளால் கொலை செய்யப்பட்டார்

ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் -ன் தளபதி 37 வயதான லியாத் ஆசாத் அபு
ஸில்பயிஹ் இஸ்ரேலிய படைகளால் மிக அருகில் வைத்து மூன்று முறை
சுடப்பட்டார் பின்னர் மருத்துவ உதவியும் தாமதப்படுத்தப்பட்டு
கொல்லப்பட்டார்.சம்பவத்தைப் பற்றி லியாத் ஆசாத்தின் சகோதரர்
முஹம்மத் தெரிவிக்கையில் ஏராளமான இராணுவ ஊர்திகள் 17.09.2010 அதிகாலை 2 மணியளவில்
முகாமிற்குள் நுழைந்து முஹம்மதை ஒரு மனித கேடயமாக பயன்படுத்தி தேடுதல் வேட்டை
நடத்தியிருக்கின்றன, இறுதியில் லியாதின் படுக்கையறை கதவை உடைத்துசென்று,
படுக்கையில் இருக்கும் போதே கழுத்தில் ஒருமுறையும் நெஞ்சில் இருமுறையுமாக, மூன்று
முறை சுடப்பட்டுள்ளார், பின்னர் அவரது உடலை முழுதும் சோதனையிட்டு
குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்
சம்பவத்தின் போது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினரை சந்திக்க மேற்கு கரையில்
ஜெனின் என்ற ஊருக்கு சென்றிருந்தனர்
மேலும் இஸ்ரேலிய படைகள் முகாமிலிருந்து 15 இக்கும்
மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ளது இதில் ஹமாஸ் உறப்பினர்களும், ஆதரவாளர்களும்
இருப்பதாக பாலஸ்தீன் தெரிவிகின்றது
இதுபற்றி இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறுகையில், இராணுவம் தீவிரவாத தொடர்புடையவர்களை
கைது செய்யவே சென்றது, அனால் லியாத் இஸ்ரேலிய வீரர்களை தாக்கும் நோக்கத்தில்
அவர்களை நோக்கி வந்துள்ளார், தங்களின் உருக்கு ஆபத்தான நிலையிலேயே
தர்க்காப்பிர்காகத்தான் இஸ்ரேலிய வீரர்கள் சுட்டதாக தெரிவித்தார்
பாலஸ்தீன் பிரதமர் சலம் பாய்யாத் இப்படுகொலையை கடுமையாக கண்டித்துள்ளார் அவர்
செய்தியாளர்களிடம் "இப்படுகொலை ஆபத்தான சூழ்நிலையை அதிகரித்துள்ளது, இன்னும்
ஏற்கனவே இழுபறியில் இருக்கும் அமைதிப்பேச்சு வார்த்தையின்
நம்பகத்தன்மையை குழிதோண்டி புதைத்துள்ளது" என்று கூறியுள்ளார்
ஹமாஸ் இப்படுகொலையில் பாலஸ்தீனிய பாதுகாப்பு படையினர் இஸ்ரேலிய இராணுவத்திற்கு
உதவி செய்தனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது, அவர் சம்பவத்திற்கு இரண்டு
நாட்களுக்கு முன் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு நம்பிக்கைக்குரிய
பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அநியாயக்கார ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தொடந்து ரத்தம் சிந்துவோம் என்றும்
ஹமாஸ் தெரிவித்துள்ளது
ஹமாஸின் செய்திப்பொருப்பாளர் ஸாலேஹ் அல் பர்துவில் இந்த படுகொலை பேச்சுவார்த்தையை
ஒட்டியே நடத்தப்படுள்ளது, இஸ்ரேல் பாலஸ்தீனுக்கான பேச்சுவார்த்தை பல்வேறு
விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார், பேச்சுவார்த்தையை தொடர்ந்து
ஏற்படப்போகும் விளைவுகளை திசைதிருப்பவே இஸ்ரேல் இந்த கொலைக்கான சதிசெய்துள்ளது
என்றும் அவர் கூறினார்
செப்டம்பர் மாத தொடக்கத்தில் வாஷிங்டனின் தொடங்கிய இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனின்
இடையேயான நேரடி பேச்சுவார்த்தை, இதுவரை எந்த முடிவையும் எட்டவில்லை,இம்மாத
இறுதியில் முடியப்போகும் எல்லைகளின் வரையறையை குறித்த ஒப்பந்தத்தை நீடிக்கமுடியாது
என்றும் இஸ்ரேல் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகின்றது, இஸ்ரேலிய பிரதமர் இது
சம்பந்தமாக தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்று மூத்த இஸ்ரேலிய அதிகாரி
தெரிவித்தார்
இஸ்ரேலின் 7 முக்கிய காபினெட் அமைச்சர்கள் கொண்ட குழு இந்த வாரம்
கூடி எல்லைகளை குறித்த ஒப்பந்தத்தை நீடிக்க மறுக்கும் முடிவை எடுத்துள்ளது என்று
அரசாங்கத்திற்கு நெருக்கமான இஸ்ரேலிய நாளிதழ் இஸ்ரேல் ஹயோம் கூறியுள்ளது. மேலும்
இந்த முடிவு வளைகுடா பகுதியில் அமைதிக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும், தற்போது
வளைகுடாவில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்ட்டனிடமும்
தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் அந்த செய்தித்தாள் கூறியுள்ளது.

சவூதி-யு.எஸ். 60 பில்லியன் டாலருக்கான ஆயுத ஒப்பந்தம் கையெழுத்து!

ரியாத்: சவூதி அரேபியாவுக்கு 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை
அமெரிக்கா விற்பனை செய்ய உள்ள நிலையில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது,

இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தம் எனக்
கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையானது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான
சூழ்நிலையை உருவாக்குவதுடன் மற்ற நாடுகளை ஆயுதக் குவிப்பில் ஈடுபடுத்தும் நிலையை
உருவாக்கும். இத்தொகையில் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் போர்
விமானங்கள், வான் ஊர்திகள் வாங்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் தனது
கடற்படையைப் பலப்படுத்தும் செயற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த
விற்பனையானது அமெரிக்காவில் சுமார் 77, 000 வேலை வாய்ப்புக்களைப் உருவாக்கும்
எனத்தெரிகிறது
அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையானது ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கில்
மேற்கொண்டு வரும் இராஜதந்திர நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே இஸ்ரேலுடனான தனது உறவினைக் கருத்தில் கொண்டு சவூதிக்கு ஆயுதங்கள் விற்பனை
செய்வதை அமெரிக்கா தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சமாதானத்திற்கான நோபால் பரிசைக் கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா
வென்றமை குறிப்பிடத்தக்கது.

சிபிஐ என்னை மிரட்டியதால் பொய் கூறினேன் ..

அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கிய சாட்சியான அஸம் கான்
பெரும் பல்டி அடித்துள்ளார். தன்னை சிபிஐ மிரட்டியதால்தான் பொய்யான சாட்சியம்
அளித்ததாக அவர் கூறியுள்ளதால் வழக்கின் எதிர்காலம் பெரும்
கேள்விக்குறியாகியுள்ளது.

சோராபுதீன் வழக்கில் முக்கிய சாட்சி அஸம்கான். இவர் சமீபத்தில் ஒரு பரபரப்பு
பேட்டி அளித்தார். அதில், சோராபுதீன் ஷேக்கை, ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள்
தொழிலதிபர் கும்பல்தான் பெரும் பணம் கொடுத்து கொலை செய்தது. இந்தக் கொலையை
ராஜஸ்தானில் வைத்து செய்யவே அவர்கள் முதலில் திட்டமிட்டனர்.

ஆனால் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தரப்பிலிருந்து பச்சைக் கொடி
காட்டப்படவில்லை. இதையடுத்தே நரேந்திர மோடியின் ஆட்சியில் உள்ள குஜராத்தில் வைத்து
இதை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ரூ. 10 கோடி பணத்தை ராஜஸ்தான் முன்னாள்
அமைச்சர் ஒருவரிடம் கொடுத்தனர். அவர் மூலம் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த
அமீத் ஷாவை அணுகி போலி என்கவுன்டர் மூலம் சோராபுதீனைக் கொலை செய்தனர்.

இதை நேரில் பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியையும் இதேபோல போலியான
முறையில் கொன்று விட்டனர். இந்தத் தகவல்களை பிரஜாபதியுடன் நான் சிறையில்இருந்தபோது
அவர்தான் கூறினார். இதையடுத்து தற்போது எனக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன என்று
கூறியிருந்தார் அஸம்கான்.

எனக்கு எதுவும் தெரியாது!

இந்த நிலையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தன்னை சிலர்
துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய வந்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். ஆனால்
அது போலியானது, அவரே தன்னை சுட்டுக் கொண்டு நாடகமாடியுள்ளார் என்று ராஜஸ்தான்
போலீஸார் கண்டுபிடித்து தெளிவுபடுத்தினர். இந்தப் பின்னணியில்தான் தற்போது தான்
கொடுத்த வாக்குமூலமே போலியானது, சிபிஐ மிரட்டலுக்குப் பணிந்து அவ்வாறு கூறியதாக
இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அஸம்கான்.

இதுதொடர்பாக அகமதாபாத் சிறப்பு சிபிஐ கோர்ட்டின் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர்
தவே முன்பு அவர் தாக்கல் செய்த அபிடவிட்டில், கடந்த 2005ம் ஆண்டு சிபிஐ பதிவு
செய்த குற்றப்பத்திரிக்கையில் உள்ள எனது சாட்சியம் உள்பட அனைத்துமே சிபிஐயின்
மிரட்டலுக்குப் பணிந்து தெரிவிக்கப்பட்டதாகும். அதில் உள்ளவை உண்மை இல்லை.

சோராபுதீன் கொலை செய்யப்பட்டது குறித்தோ, பிரஜாபதி கொல்லப்பட்டது குறித்தோ எனக்கு
எதுவும் தெரியாது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் எனக்கு எதிரான ஹமீத் லாலா கொலை வழக்கை மீண்டும்
திறந்து விசாரித்து கடும் தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று சிபிஐ என்னை
மிரட்டியது. இதற்குப் பயந்தே நான் பொய்யான வாக்குமூலம், சாட்சியம் அளித்தேன் என்று
கூறியுள்ளார் அஸம்கான்.

ஹமீத் லாலா யார்?

இந்த ஹமீத் லாலா என்பவர் ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள் வியாபாரி ஆவார்.
அஸம்கானும் கூட மார்பிள் வியாபாரிதான். ஹமீதா லாலா கொலை வழக்கில் அஸம்கானின்
பெயரும் அடிபட்டது. பின்னர் இந்த வழக்கு மூடப்பட்டு விட்டது. இதை திறக்கப் போவதாக
கூறி தன்னை சிபிஐ மிரட்டியதாக அஸம் கான் கூறியிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது வாக்குமூலத்தில் குஜராத் மாநில காவல்துறை அதிகாரி சுடஸ்மாவுக்கு
எதிராக தான் எதுவும் கூறவில்லை என்றும் அஸம்கான் கூறியுள்ளார். அதேசமயம், குஜராத்
மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியாதான் தனது பெயரையும், சுடஸ்மா பெயரையும்
இணைத்து விட்டிருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐ தரப்பில் சோராபுதீன் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்றால், பெரும்
பணக்காரர்களை குறிப்பாக மார்பிள் தொழிலதிபர்களின் மோசடிகளை தெரிந்து வைத்துக்
கொண்டு அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதே சோராபுதீனின் வேலை. சோராபுதீனுக்கும்,
குஜராத் போலீஸாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அகமதாபாத் நகர குற்றப் பிரிவு
துணை ஆணையராக இருந்த சுடஸ்மாவும், சோராபுதீனும், பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வது
வழக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை குஜராத் காவல்துறை சரிவர கையாளவில்லை எனவே இதை
சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை
விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இதையடுத்து
அதிரடியாக களத்தில் இறங்கிய சிபிஐ அமீத் ஷா உள்ளிட்ட சிலரைக் கைது செய்தது.
சுடஸ்மாவும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் சிபிஐ சமர்ப்பித்த முக்கிய
சாட்சி பொய் சாட்சியம் சொல்லியதாக கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கில் பெரும்
திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் குவிக்கப்படும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை

கடந்த வியாழக்கிழமை (23.09.2010) சில்வான் குடியிருப்புக்கருகில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் விளைவாக ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு மற்றும் பலர் படுகாயமுற்றதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகர வீதிகளில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில் வன்முறையைத் தூண்டிவிட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் குடியேற்றவாசிகள் சிலரும் ஐந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலீஸாரும் அங்கு இடம்பெற்ற மோதலில் காயமடைந்துள்ளதாக ஹீப்ரு வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி சம்பவம் பற்றிக் கருத்துரைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலீஸ் படை கமாண்டர் அஹ்ரோன் ஃப்ரான்கோ, ஜெரூசல நகரில் யூதக் குடியேற்றவாசிகளால் ஒழுங்குசெய்யப்படும் சுக்கொட் களியாட்ட விருந்து முதலான கொண்டாட்டங்களுக்கு எதிரான தடையுத்தரவுகளைத் தாம் பிறப்பிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். யூதக் குடியேற்றவாசிகளின் இத்தகைய களியாட்ட நிகழ்வுகளின் போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீனர்களை வேண்டுமென்றே ஆத்திரமூட்டி வம்புக்கிழுக்குமுமாக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளும் அடாவடி நடவடிக்கைகளின் விளைவாகவே இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி -- தேவை தீர்ப்பா தீர்வா?

த்தரப்பிரதேச மாநிலம் மட்டுமின்றி அகில இந்தியாவும் --- இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியை நாடும் பொதுமக்களும் தீர்ப்பில் இருந்து அரசியல் ஆதாயம் பெற, அரசியல் கட்சிகளும் என அனைத்துத் தரப்பினரும் -- பீதி கலந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்ப்பு இம்மாதம் 24 ஆம் தேதி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையால் வழங்கப்பட உள்ளது.


ராமன் கடவுளா, அவ்விடத்தில்தான் ராமன் பிறந்தானா, ராமஜன்மபூமி கோயிலை இடித்து மீர்பாகி பாபர் மசூதியைக் கட்டினானா அல்லது மசூதியை இடித்தது சரியா தவறா என்றெல்லாம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப் போவதில்லை.

அத்வானி, உமாபாரதி, வினய்கட்டியார்,அசோக்சிங்கால் முன்னிலையில், பீஜேபி தலைமையில் ஒன்றுதிரண்ட காவித்தீவிரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர்மசூதி நின்ற இடமான சுமார் 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பதற்கே தீர்ப்பு.


இரு தரப்பு மோதும் ஒரு வழக்கில் ஒரு தரப்புக்குச் சாதகமாகத் தீர்ப்பு வருவதே இயல்பு.


நம் நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதில் ஆமையையும் நத்தையையும் மிஞ்சும் வேகம் காட்டுகின்றன.


பாபர்மசூதிப் பிரச்சனை இன்று நேற்று முளைத்ததில்லை. இராமாயணத்தில் குறிப்பிடப்படும் அயோத்தி நகரம் இந்துக்களுக்குப் புனித நகரம் என்பதால், அந்நகரில் மசூதி கட்டப்பட்ட காலத்தில் இருந்தே இப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் விடுதலை பெற்ற இந்தியர்களின் ஆட்சியிலும் தொடர்ந்த இப்பிரச்சனைக்கு, 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மசூதி இடிக்கப்பட்டுப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் ஒரு தீர்ப்பு வரப்போகிறது.


தீர்ப்பு எதுவாயினும் கலவரம் வருவது உறுதி என்ற திடமான நிலைப்பாட்டில் உத்தரப்பிரதேச அரசு காவல்துறையையும் துணைராணுவப்படையையும் மாநிலமெங்கும் சிறப்புச் சிறைகளையும் ஆயத்தப்படுத்தி வருகிறது.


"இது ஒரு முடிவான தீர்ப்பன்று; பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்" என மற்றொரு புறம் மத்திய அரசு மக்களின் 'டென்ஷனை'க் கூட்டுகிறது.


பாபர்மசூதி போன்ற ஒரு பழமை வாய்ந்த கட்டடம் இடிக்கப்பட்டது பிரச்சினையில்லை. அக்கட்டடத்தை இடித்ததால் நாட்டில் முஸ்லிம்களின் இருப்பும் உரிமையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதே பிரச்சனை.

அயோத்தியில் பாபர்மசூதி நின்ற இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை அளித்தாலும் அதை நாங்கள் மதித்து ஏற்போம் என பாரதீய ஜனதாக் கட்சி கூறினாலும் அதன் காவிக் கூட்டாளிகளான விஸ்வஹிந்து பரிஷத்தும் பஜ்ரங் தள்ளும் ராமர்கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ர்ப்புச் சொல்ல முடியாது என வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.


"சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதிப்பதே பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்" என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளார். "முஸ்லிம்கள் ராமர் கோயில் கட்ட ஆதரவளித்துவிட்டால் பின்பு யாரும் அவர்களை நோக்கித் 'தேச துரோகிகள்' என்று கூற முடியாது" என்றும் அவர் கூறினார்.


நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராகவே இருக்கும் என இவர்கள் எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது.


"முஸ்லிம்கள் பாபர்மசூதி நின்ற இடத்தை ராமர்கோவில் கட்ட வழங்குவதன் மூலம் தங்கள் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும்" என மறைமுகமாக "பிளாக்மெயில்" செய்கிறார் மோகன் பகவத்.


தீர்ப்பு என்னவாக இருப்பினும் மேல்முறையீடு என்ற அஸ்திரத்தைப் பிரயோகிப்பதைவிட முஸ்லிம்களை மிரட்டியே காரியத்தைச் சாதித்து விடலாம் என்ற அவர்களது எண்ணமே இதில் பிரதிபலிக்கிறது.


"நீங்கள் எங்களுக்கு அடங்கிப் போகவில்லையெனில் "தேசத்துரோகிகளான" உங்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பது எங்களுக்குத் தெரியும். மீண்டும் ரத யாத்திரைகளால் ரத்தாபிஷேகம் நடத்தத் தயங்க மாட்டோம்; மும்பையும் குஜராத்தும் எங்கள் பயிற்சிக் களங்கள்தாம். இனி வருவது நிஜமான செயற்களமாக இருக்கும்" என்ற எச்சரிக்கையும் இதில் தொனிக்கிறது.


ஒரிஸ்ஸாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவரது மக்களையும் உயிரோடு கொளுத்தியதையும் மத்தியப்பிரதேசத்தில் கிருத்துவக் கன்னீயாஸ்திரீகளைக் கற்பழித்ததையும் தேசபக்தி மிக்க செயல் என வருணித்தவர்கள் விஹெச்பி, பஜ்ரங்தள் தலைவர்கள்.


தேசம் என்பது உலக வரைபடத்தின் எல்லைக்குள் அடங்கும் நிலப்பரப்பும் அதில் உருவாகி இருக்கும் கட்டடங்களும் தொழிற்சாலைகளும் கடலும் நதியும் மலைகளும் மட்டும் இல்லை. மக்களும் அவர்களது பண்பாடும் நாகரீகமும் உயரிய விழுமியங்களும் இணைந்ததே தேசம் ஆகும்.


தேசபக்தி என்பது உலகின் முன் தம் தேசத்தைத் தம் உயரிய விழுமியங்களால் உயர்த்திக் காட்டுவது ஆகும்.


பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று வெளியான செய்தி அந்நாட்டின் மானத்தைக் கப்பலேற்றியது என்றால், கற்பழித்தும் நெருப்பிட்டுக் கொளுத்தியும் வழிபாட்டுத் தலத்தை இடித்தும் கலவரங்களை உருவாக்கி இனப்படுகொலை செய்தும் தேசத்தின் மதிப்பையும் மானத்தையும் கெடுத்தவர்கள் தம் செயலின் விளைவை உணர்ந்து கொண்டால் தேசபக்தி என்ன என்பது விளங்கும்.


குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது அன்றைய பிரதமர் வாஜபாய் "நான் எந்த முகத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்வேன்?" எனக் கவலையுடன் கேட்டதுதான் தேசபக்தி.


முஸ்லிம்கள் அயோத்தி இடத்தைக் கொடுத்துவிட்டால் இவர்கள் அடங்கி விடுவார்களா?அப்படிக் கொடுப்பது ஒட்டகத்துக்கு இடம் கொடுத்து அரேபியன் இறந்த கதையாகிவிடாதா?

அடுத்து இவர்களின் பட்டியலில் உள்ள மதுராவையும் காசியையும் விட்டுவிடுவார்களா?


இந்தத் தேசபக்தித் திலகங்கள், "நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வந்தாலும் நாங்கள் இந்நாட்டுக் குடிமக்களான எங்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கு அவ்விடத்தைக் கொடுக்கிறோம்" எனச் சொல்லித் தம் தேசபக்தியை நிரூபிக்கலாம்; இந்தியாவின் மதிப்பையும் இந்துக்களின் மாண்பையும் உலகின் முன்னே உயர்த்திக் காட்டலாம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தாவிடின் அச்செயல் "காவித்தீவிரவாதம்" எனச் சிதம்பரம் சொன்னதை உறுதிப்படுத்துவதாகவே அமையும்.

AREN'T WE GETTING THIS NEWS AFTER MORE THAN THREE WEEKS? NO MEDIA FOCUSED THIS NEWS UNTIL NOW. WHERE ARE THE SO-CALLED HUMAN RIGHT ORGANIZATIONS?



நீதிமன்றில்....
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?

மர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்!

நீதிமன்றில்....
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?


இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.

"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.

தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.

அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.

உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?

ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?

ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் "முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?


__._,___
Recent Activity
Visit Your Group
Give Back

Yahoo! for Good

Get inspired

by a good cause.

Y! Toolbar

Get it Free!

easy 1-click access

to your groups.

Yahoo! Groups

Start a group

in 3 easy steps.

Connect with others.

.

__,_._,___




--
Gate way of Islam

YouTube - Videos from this email

"9/11 தாக்குதலுக்கு காரணம் அமெரிக்க அரசுதான்" ஈரான் அதிபர் ஐ.நா.சபையில் பரபரப்பு பேச்சு.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான ஐ.நா.சபை கூட்டம் நடந்தது. இதில், ஈரான் அதிபர் அஹ்மது நிஜாதும் கலந்துக் கொண்டு பேசினார். அவரின் பேச்சு கூட்டத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.



அவர் பேசியதாவது: "கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மற்றும் பென்டகன் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு காரணம் அல்- கொய்தா அமைப்பினரின் தற்கொலை படையினர் தான் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

ஆனால், இந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அரசு தான் உள்ளது என பெரும்பாலான மக்களும், அரசியல்வாதிகளும், உலக நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் நலிந்து வரும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தவும், மேற்கு ஆசியாவில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவும் நடந்த ஏற்பாடு தான் இது" என்று இவ்வாரு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து, ஈரான் அதிபர் அஹ்மது நிஜாதின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் இருந்து அமெரிக்க, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 27 நாட்டு பிரதிநிதிகள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். மேலும், ஈரான் அதிபரின் இந்த பேச்சுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபரின் இந்த பேச்சுக்கு 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஐ.நா.சபை கூட்டத்தில் மிகவும் குறைவானவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்ப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோயில் கட்டும் முடிவில் மாற்றமில்லை: அருண் ஜேட்லி

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்ற எங்களின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என, பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி வீட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, கடந்த 60 ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆனாலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக எந்தவித தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை. இனியும் இந்த வழக்கில் தாமதம் இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்ற எங்களின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. இதுவரை இந்தப் பிரச்னையில் தீர்வு ஏற்படாததற்கு நீதிமன்றத்தின் தாமதமே காரணம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25ஆம் தேதி சோம்நாத் ஆலயத்துக்கு செல்வதை அத்வானி வழக்கமாகக் கொண்டுள்ளார். சோம்நாத்துக்கு அவர் புறப்பட்டு சென்றுவிட்டதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை

தர்மபுரி பஸ் எரிப்பு! தூக்குதண்டனையை ரத்துசெய்ய ஜனாதிபதிக்கு கருணை மனு!

தர்மபுரி: வேளாண்துறை கல்லூரி பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி குற்றம் நிரூபிக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டால் தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய அதிமுகவினர் மூன்று பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிகள் 3 பேரையும் அக்டோபர் 8ம் தேதி தூக்கில் போட சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ராகவன், வேலூர் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பினார். இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநில வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த மனோஜ்பாண்டியன் உட்பட அதிமுகவினர் வேலூர் சிறைக்கு சென்று, நெடுஞசெழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேரையும் சந்தித்து பேசினர்.

பின்னர் அவர்களின் சார்பில் தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு சமர்ப்பிக்கும் மனுவில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து இம்மனு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிகிறது. மேலும் டெல்லியில் அதிமுகவினர் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் இம்மனுவை அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்னை தனிக்கோர்ட்டு தண்டனை வழங்கியது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன. தர்மபுரியில் நடந்த போராட்டத்தின்போது, கோவை வேளாண்மை கல்லூரி பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் மாணவிகள் ஹேமலதா, கோகிலவாணி மற்றும் காயத்திரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

உரத்த சிந்தனையா; உளரும் சிந்தனையா..?! இல. கணேசனுக்கு மறுப்பு!!

பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பை இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பாபர் மஸ்ஜித் குறித்து தமது வழக்கமான சங்பரிவார சிந்தனையை 'உரத்த சிந்தனை' என்ற பெயரில் ஒரு நாளிதழில் உளறியுள்ளார் திரு. இல.கணேசன். அந்த கட்டுரையில் அவர் கூறியுள்ள சில முக்கியமான விஷயங்கள் இங்கே அலசப்படுகிறது.

'' இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே'' என்கிறார் இல. கணேசன்.

ஆர்.எஸ்.எஸ். குறித்தும்- பாஜக குறித்தும், ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும், பாஜக காரர்களுக்கும் பாடம் நடத்தும் அளவுக்கு முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ். ஆக, ஜன சங்கமாக, பாஜகவாக, வி.ஹெஜ்.பி.யாக, பஜ்ரங் தள் இவ்வாறு இன்னும் பல்வேறு பெயர்களில் ஒரே இந்துத்துவா சிந்தனையோடு வலம்வரும் நீங்கள் யார்..? உங்கள் கொள்கை என்ன என்பதை முஸ்லிம்கள தெளிவாகவே விளங்கியுள்ளோம். மேலும், காந்தி கொலை தொடங்கி, குஜராத் கொலைக்களம் வரை உங்கள் 'கொள்கையின்' செய்திகள் நித்தமும் செய்திகளாக மலர்வதையும் அறிந்தும் வைத்துள்ளோம்.


'' இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.

இது இன்றைக்குத்தான் இல. கணேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததாக்கும்..? முஸ்லிம்களை எதோ வெற்றுக் கிரகவாசிகள் போல், இவரது சகாக்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று பல்வேறு காலகட்டத்தில் முழங்கியபோது இல. கணேசன் அவர்கள எங்கே போயிருந்தார்..?

''ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர்.
அப்பாடா! இப்பவாவது முஸ்லிம்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக போரிட்டார்கள் என ஒப்புக் கொண்டீர்களே அதுவரைக்கும் சந்தோசம்.

'' இந்த அயோத்திப் பிரச்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.இஸ்லாமிய சமுதாய மக்கள் கூடிப் பேசினார்கள். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள். இருதரப்பிலும் மகிழ்ச்சி. ஆனால், விஷயம் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓடிவந்தார்கள். இந்த ஒற்றுமை தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தார்கள். உடன்படிக்கையை வாங்கி, கிழித்தெறிந்தார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட இந்துப் பிரதிநிதியையும் முஸ்லிம் பிரதிநிதியையும் பகிரங்கமாக, மக்கள் முன்பு, மரத்தில் தூக்கிலிட்டார்கள் என்கிறார் இல. கணேசன்.

அவரின் வார்த்தைகளை கவனமாக படிக்கவேண்டும். அதாவது பாபர்மஸ்ஜித் பிரச்சினை என்பது ஆங்கிலேயன் காலத்திலேயே இருந்தது. அந்த பிரச்சினையை தீர்க்க இந்து முஸ்லிம் தலைவர்கள் கூடி பேசி, முஸ்லிம்கள் மஸ்ஜித் பகுதியை இந்து தலைவர்களிடம் விட்டுக் கொடுத்து சமாதானத்தை ஏற்படுத்தினார்கள் என்று இதுவரை கேள்விப்படாத கதையை சொல்கிறார். சரி! முஸ்லிம்கள் எழுதிக்கொடுத்த அந்த ஆவணத்தை எங்கே என்று யாரும் இல.கணேசனிடம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலேயன் கிழித்துவிட்டான் என்று கூறி லாவகமாக தப்பிக்கிறார்.

ஒரு விஷயத்தை இல. கணேசன் அவர்கள் மறந்து விட்டார். பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களுக்கு சொந்தமானது என அவர் கருதுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல. பள்ளிவாசல் என்பது இறைவனுக்கு சொந்தமானது என்பதும், ஒருவர் தன் சொந்த பணத்தில் ஒரு பள்ளியை கட்டியிருந்தாலும், அந்த பள்ளிக்கு அவர் எந்த வகையிலும் உரிமை கொண்டாட முடியாது என்பதும் தான் உண்மை. இவ்வாறிருக்க, முஸ்லிம் தலைவர்கள் பாபர் மஸ்ஜிதை விட்டுக் கொடுத்தார்கள் என்பது எவ்வாறு உண்மையாகும்..? அவ்வளவு ஏன் பாபரே நினைத்தாலும் பள்ளிவாசலுக்கு உரிமை கொண்ண்டாடி, அதை இந்துக்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது எனபதுதான் இஸ்லாமிய நிலையாகும்.

சரி! ஒரு வாதத்திற்கு இல. கணேசன் அவர்கள் சொன்னது போன்று, அன்றைய முஸ்லிம் பிரமுகர்கள் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்றால், ஆங்கிலேயன் காலத்திலேயே அப்பிரச்சினை முடிவுக்கு வந்திருக்குமே..? பிறகு எப்படி விட்டுக்கொடுத்த பள்ளியில் முஸ்லிம்கள் தொழுதார்கள்..? மேலும், உங்கள் வாதப்படி விட்டுக்கொடுக்கப்பட்ட பள்ளியில், இரவோடு இரவாக கள்ளத்தனமாக சிலைவைக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது..?


''அது ராமஜென்ம பூமி. அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு பெயர் ஜன்ம ஸ்தான் போலீஸ் ஸ்டேஷன். ஜன்ம ஸ்தான் தபால் ஆபீஸ். முஸ்லிம் சமுதாயத்தின் இரு பிரிவுக்கிடையே அந்த மசூதியின் உரிமைமீது வழக்கு வந்தபோது, அங்கிருந்த மசூதிக் கட்டடத்தை அவர்களே ஜன்ம ஸ்தான் மஸ்ஜித் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள். என்கிறார் இல. கணேசன்.

அதாவது பாபர் மஸ்ஜித் அமைந்த பகுதியை எல்லோரும் முஸ்லிம்கள் உட்பட, ஜென்மஸ்தான் என்றுதான் கூறினார்களாம். எனவே அது ராமர் அவதரித்த இடம் என்று சொலல் வருகிறார் இல. கணேசன். இது சாதாரண விஷயம். எப்படியெனில், அயோத்தியை ஜென்மஸ்தான் என்று இந்துத்துவாக்கள் தொடர்ந்து சொல்லிவர, அந்த பெயர் மக்களிடம் நிலைத்திருக்கலாம். இதுவெல்லாம் ஒரு ஆதாரமா..? இன்னும் சொல்லப்போனால் ஒரு ஊருக்கு இயற்பெயர் ஒன்று இருக்கும். மக்கள் அழைக்கும் பெயர் வேறாக இருக்கும். இதெல்லாம் இல. கணேசன் அவர்கள் அறியாததா..?

'' ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும். ன்கிறார் இல.கணேசன்

ஒருநாளும் தொழுகை நடைபெறவில்லை என்று இல.கணேசன் அவர்கள் கூறுவது ஒரு பருக்கை சோற்றில் ஒரு யானையை மறைப்பதற்கு சமமானதாகும். உங்களால் கள்ளத்தனமாக சிலை வைக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவுத் தொழுகை வரை அங்கே தொழுகை நடந்தது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விஷயம். மேலும் மசூதிக்க்கான கட்டட அமைப்பும் இல்லையாம்! இதற்கு முன்னால் இவர்தான் சொன்னார். நான் அங்கு போயிருக்கிறேன்;வெளியிலிருந்து பார்த்தால் மசூதி போன்று தெரியும் என்று. இப்போது அவரே முரண்படுகிறார். மேலும், ஒரு மசூதி அமையக்கூடாத இடத்தில் பாபர்மஸ்ஜித் அமைந்துவிட்டதாக வருந்துகிறார். முஸ்லிம்களை பொருத்தவரை தொழுவதற்கு தடுக்கப்பட்ட இடங்கள் எதிலும் எந்த காலத்திலும் பள்ளிவாசல் எழுப்பப்படுவதில்லை. அதில் பாபர் மஸ்ஜிதும் விதிவிலக்கல்ல.

''சிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.என்கிறார் இல.கணேசன்.

முஸ்லிம்கள் எவரும் பாபர் மஸ்ஜித் இடத்தை பாபர் கல்லறை என்று ஒரு போதும் கருதியதில்லை. அன்றிலிருந்து இன்றுவரை அதை மசூதி என்றே கூறுகிறார்கள். மேலும் இனி எவரும் பாபர் மசூதி கட்டமுடியாது; மன்மோகன் சிங் கட்டினால், அது மன்மோகன்சிங் மசூதி என்றே அழைக்கப்படும் என்று அங்கலாய்க்கிறார் இல. கணேசன்.

இல. கணேசன் அவர்களே! முஸ்லிம்கள் அந்த இடத்தில் கட்டவிருப்பது பாபருக்கு மசூதியல்ல. அல்லாஹ்விற்கு, அதாவது அல்லாஹ்வை வணங்குவதற்கு ஒரு மசூதி.பாபருக்கு நாங்கள் மசூதி கட்டபோகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

'' பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர்.என்கிறார் இல.கணேசன்.

ஒரு பக்கம் உங்க கூட்டம்தான் சொல்கிறது. சுதந்திரத்திற்கு முன் அகண்டபாரதம் இருந்தது. அந்த அகண்ட பாரதத்தில், ஆப்கானிஸ்தான் இருந்தது என்று. அப்படியாயின் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் பிறந்த பாபர் அன்னியர் என்றால், கைபர்-போலன் கனவாய் வழியாக வந்த உங்களுடைய முன்னோர்கள் யார்..? என்று நாங்கள் கேட்கவில்லை. வரலாறு கேட்கிறது.
பாபர் இரண்டாவது முறை தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்
அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது என்கிறார் கணேசன்.

பாபர் போரில் பெற்ற வெற்றியை கொண்டாட அவர் எழுப்பியது நினைவுத் தூண் அல்ல அகற்றுவதற்கு. அவர் அமைத்தது பள்ளிவாசல். பள்ளிவாசலை அடிமைச்சின்னம் என்று வர்ணித்து தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் இல. கணேசன். சரி! பாபரால் அமைக்கப்பட்டது அடிமைச்சின்னம் என்றால் இன்றைக்கு முகலாயர்களின் கட்டட கலைக்கு சான்று பகரும் எண்ணற்ற கலைநயமிக்க கட்டடங்கள் உள்ளனவே.
அதுபற்றி இல.கணேசனின் நிலை என்ன..? மேலும் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள், பாலங்கள், அணைகள், உள்ளிட்ட அத்துனையையும் அனுபவிக்கும் இல. கணேசன் அதுபற்றிய என்ன நிலையில் இருக்கிறார்..?
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை. என்கிறார் இல. கணேசன்.

இல. கணேசன் அவர்களே! எங்கேனும் முகலாயர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட எந்த முஸ்லிம்களுக்காவது சிலை இருந்தால் அதை அகற்றி,நீங்கள் அருங்காட்சியத்தில் வைக்கவேண்டாம். மாறாக நடுத்தெருவில் அடித்து நொறுக்குங்கள். ஒரு முஸ்லிமும் தடுக்கமாட்டோம்.

சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு. இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.
மீண்டும் ஒரு சோமநாதபுரமாக பாபர் மஸ்ஜித் இடத்தை மாற்ற, உங்களுக்கு ஆசி வழங்க இப்போது காந்தியும் இல்லை. செய்து முடிக்க நீங்கள் வல்லபாய் படேலும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் அன்றுபோல் இன்று ஏமாளிகளாகவும் இல்லை. இந்தியாவில் கடைசி முஸ்லிம் உயிர் இருக்கும்வரை பாபர் மஸ்ஜித் இடத்தில் நீங்கள் சோமநாதபுர கனவுகான விடமாட்டான் இன்ஷா அல்லாஹ்.


மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.என்கிறார் இல. கணேசன்.

இதை சொல்வதற்கு முன்னால் உங்களை கொஞ்சம் கண்ணாடியில் பார்த்திருக்கக் கூடாதா..? மதத்தின் பெயரால் எல்லைமீறி, மஸ்ஜிதை இடித்தது யார்..? ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தியது யார்..? நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள் யார்..? வன்முறையை அரசியலாக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை உண்டாக்கி பதவி சுகத்தை அனுபவித்தது யார்..? அவ்வளவு ஏன்..? சம்மந்தப்பட்ட இந்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏகோபித்த குரலில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்; அமைதிகாப்போம் என்று சொல்லிக்கொண்டிருக்க, நீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தாலும் அது எங்களை கட்டுப்படுத்தாது; நாங்கள் கோயில் கட்டியே தீருவோம் எனக் கொக்கரிப்பது யார்..? எல்லாம் செய்து விட்டு 'தேசபக்தி' முகமூடியை போர்த்திக் கொள்வதில் சங்பரிவாருக்கு நிகர் சங் பரிவார்தான்.

'' எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே......? இந்திய நாட்டிலே..!

--
بســــم الله الـر حـمـن الرحـــيــم


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

ஒருவர் தம் சகோதரருக்கு அநீதி ஏதேனும் இழைத்திருந்தால் (அவருடன் சமரசம் செய்து) அதிலிருந்து அவர் (இவ்வுலகிலேயே) தம்மை விடுவித்துக் கொள்ளட்டும். ஏனெனில், அங்கு (மறுமையில் ஈட்டுத் தொகை கொடுக்க) பொற்காசோ, வெள்ளிக்காசோ இருக்காது. இவர் தம் சகோதரருக்கு (இழைத்த அநீதிக்கு ஈடாக) இவருடைய நன்மைகளிலிருந்து (தேவையானவற்றை) எடு(த்துக் கொடு)க்கப்படும்; இவரிடம் நன்மைகளே இல்லை என்றால், (அநீதிக்குள்ளான) சகோதரனின் பாவங்களிலிருந்து (விகிதாச்சாரப்படி) எடுத்து இவர் மீது சுமத்தப்(படும். இந்நிலை ஏற்)படுவதற்கு முன்பே (இம்மையில் சமரசம் செய்து கொள்ளட்டும்).buhaari ;6534

விடுகதை இதற்கு...

அஸ்ஸலாமு அலைக்கும்,


feel.jpg

எல்லோரும் அறையினில் சிரிக்க

நான் மட்டும் தனிமையில் இருக்க

கலங்கியக் கண்ணீரை

விளங்கிய நண்பர்கள்!

கனவுகள் கண்களில் மிளிர

கடமைகள் கண்டு மிரள;

வழியில்லாமல்

வலியுடன் வளைகுடாவில்!


பலியாய் நம் உறவுகள்

விழிகள் குளத்தில் நீராடும்;

கவலைகளால் தள்ளாடும்!

லட்சியங்கள் சில

லட்சத்திற்க்காக ஏங்கி நிற்கும்;

விடைக்கொடுக்க நினைத்தாலும்

வினாக்களால் ஸ்தம்பித்து நிற்பேன்!

விடுகதை இதற்கு

தொடர்க்கதை இருக்கு;

ஆனாலும் உழைக்கிறேன்

என்னைபோல் என் தலைமுறை

ஏங்காமல் இருக்க;

இங்கு வாராமல் இருக்க!

செராபுதீன் போலி மோதல் கொலை!

சோராபுதின் ஷேக்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதின் ஷேக் என்ற முசுலீம் ‘தீவிரவாதியின் ஆவி’, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை மீண்டும் துரத்தத் தொடங்கியிருக்கிறது. மிரட்டிப் பணம்பறிப்பது, ஆயுதங்களைக் கடத்துவது போன்ற சட்டவிரோதச் செயல்களைச் செய்துவந்து உள்ளூர் தாதாவான சோராபுதின் ஷேக் நவம்பர் 26, 2005 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். குஜராத் போலீசாரால் சோராபுதினோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ ‘காணாமல்’ போனார்.

சோராபுதினின் சகோதரர் ருபாபுதின் இம்மோதல் கொலை பற்றி உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியதையடுத்து, அக்கடிதத்தையே மனுவாக ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இது பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசுக்கு ஜனவரி 21, 2007 அன்று உத்தரவிட்டது. மோடி அரசு ஒரு கேடி அரசு எனத் தெரிந்திருந்த நிலையிலும், விசாரணை பொறுப்பை குஜராத் அரசிடமே உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த பெருந்தன்மை நம்மை வியக்கத்தான் வைக்கிறது.

மோடி அரசு தனக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது. ஒருபுறம் தனது சி.ஐ.டி. பிரிவு போலீசாரைக் கொண்டு விசாரணை என்ற நாடகத்தை நடத்திக்கொண்டே, மறுபுறம் சாட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையையும் திறம்படச் செய்தது.

உதாரணத்திற்குச் சொன்னால், இப்போலி மோதல் கொலையின் முக்கிய சாட்சியான சோராபுதினின் கூட்டாளி பிரஜாபதி கொல்லப்பட்டதைக் கூறலாம். தனது மனைவியோடு ஆந்திராவில் இருந்து மகாராஷ்டிராவிற்குச் சென்று கொண்டிருந்த சோராபுதினை குஜராத், இராசஸ்தான், ஆந்திர மாநிலப் போலீசார் கூட்டணி அமைத்துக் கொண்டு கடத்தியபொழுது, பிரஜாபதியும் அவர்களோடு பயணம் செய்து வந்தான். சோராபுதினையும் அவரது மனைவி கவுசர்பீயையும் குஜராத்திற்குக் கடத்திய குஜராத் போலீசார், பிரஜாபதியை இராசஸ்தான் போலீசாரிடம் ஒப்படைத்துச் சிறையில் அடைத்தனர்.

இப்போலி மோதல் கொலை விசாரணையைத் தலைமையேற்று நடத்திவந்த கீதா ஜோரி என்ற போலீசு அதிகாரி பிரஜாபதியை விசாரிப்பதற்கு அனுமதி கோரியவுடன், தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த டி.ஜி. வன்சாரா – சோராபுதினைச் சுட்டுக் கொன்ற போலீசு கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர் – குஜராத் மாநில எல்லைப் பிரிவுக்குத் திடீரென மாற்றப்பட்டார். வன்சாரா இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டாவது வாரத்திலேயே பிரஜாபதி, டிசம்பர் 28, 2006 அன்று குஜராத் – இராசஸ்தான் எல்லையையொட்டிய நகர் ஒன்றில் நடந்த போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுவொருபுறமிருக்க, “விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு தனக்கு குஜராத் அரசு நெருக்கடி தருவதாக” விசாரணை அதிகாரி கீதா ஜோரி உச்ச நீதிமன்றத்திடம் புகார் செய்தார். மோடி அரசோ இப்புகார் பற்றி அலட்டிக் கொள்ளாததோடு, தன் மீது புகார் கொடுத்த கீதா ஜோஹ்ரியை சி.ஐ.டி. பிரிவில் இருந்து தூக்கியடித்தது.

இதன்பின், தங்களுக்குத் தலையாட்டுவார் என்ற எண்ணத்தில் ரஜ்னீஷ் ராய் என்ற அதிகாரியை சி.ஐ.டி. பிரிவின் துணைத் தலைவராக நியமித்தது, மோடி அரசு. ஆனால் ரஜ்னீஷ் ராய், கீதா ஜோரி ஏற்கெனவே தயாரித்து அளித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் குஜராத்தைச் சேர்ந்த டி.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் இராசஸ்தானைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய மூன்று போலீசு அதிகாரிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார். இதனையடுத்து ரஜ்னீஷ் ராயும் சி.ஐ.டி. பிரிவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். இப்படி பிரஜாபதி என்ற சாட்சி கொல்லப்பட்டதையும், விசாரணை அதிகாரிகள் பந்தாடப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்ததேயொழிய, இப்போலி மோதல் கொலை பற்றிய விசாரணையை உடனடியாக குஜராத் அரசிடமிருந்து பறிக்கும் எந்த நடவடிக்கையினையும் அப்பொழுதே எடுக்கவில்லை.

இதனிடையே கீதா ஜோஹ்ரிக்கும் குஜராத் அரசிற்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டு, அவர் மீண்டும் சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றப்பட்டு, சோராபுதின் வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். குஜராத் அரசின் வனத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது கணவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கிடப்பில் போடுவது என்ற உடன்பாட்டின் அடிப்படையில் கீதா ஜோஹ்ரி, “சோராபுதின் கொலையில் அரசியல் தலைவர்களுக்குத் தொடர்பில்லை; போலீசார் பதவி உயர்வு மற்றும் பண வெகுமதிக்கு ஆசைப்பட்டு இக்கொலையைச் செய்ததாக” அறிக்கை தயாரித்து உச்ச நீதிமன்றத்திடம் அளித்தார்.

அப்பொழுதே, சோராபுதினின் சகோதரர் ருபாபுதின் விசாரணை என்ற பெயரில் நடந்திருக்கும் இந்த மோசடிகளைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவிலேயே சோராபுதின் மற்றும் கவுசர் பீ கொலைகளுக்கும், குஜராத் அரசின் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் இருக்கும் தொடர்புகளையும் குறிப்பிட்டிருந்தார். குஜராத் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஓட்டைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணையைத் தொடராமல் நிறுத்தி வைக்குமாறு அக்.1, 2008-இல் உத்தரவிட்டது. அதன் பின் 15 மாதங்கள் கழித்து, ஜனவரி 2010-இல்தான் இவ்வழக்கு விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் மாற்றும் உத்தரவை அளித்தது.

இப்போலி மோதல் கொலை தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் மறுவிசாரணையில் மேலும் பல உண்மைகள் அம்பலமாகி வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள் கல்லை வெட்டியெடுக்கும் சுரங்க அதிபர்களின் தூண்டுதலினாலேயே, குஜராத் மற்றும் இராசஸ்தானைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளும் பா.ஜ.க. அமைச்சர்களான அமித்ஷா (குஜராத்) மற்றும் குலாப் சாந்த் கடாரியா (ராஜஸ்தான்) ஆகியோரும் கூட்டணி அமைத்துக்கொண்டு, மார்பிள் கல் முதலாளிகளிடமிருந்து 10 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, சோராபுதினையும் அவரது மனைவி கவுசர் பீயையும் குஜராத்திற்குக் கடத்திவந்து, சோராபுதினைப் போலி மோதல் மூலமும், அவரது மனைவியை விஷ ஊசி போட்டும் தீர்த்துக் கட்டினர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

***

குஜராத் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலேயே சோராபுதின் போலி மோதலில் கொல்லப்பட்டார் என்பது அம்பலமான பிறகும், குஜராத் அரசே உச்ச நீதிமன்றத்தில் சோராபுதினின் மனைவி கவுசர் பீ குஜராத் போலீசாரால் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட பிறகும் நரேந்திர மோடி, “தனது அரசையும் குஜராத்தியர்களையும் களங்கப்படுத்துவதற்காக காங்கிரசு செய்யும் சதி இது” எனப் பிரச்சாரம் நடத்தி வருகிறார். “போலி மோதல் கொலைகள் நடக்காத மாநிலங்களே இல்லாதபொழுது, குஜராத் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்பித் தனது பிரச்சாரத்தை நியாயப்படுத்தி வருகிறார், மோடி.

மோடியின் இந்த வாதம், அரைகுறையான உண்மைகளைக் கூறித் தங்களை நியாயப்படுத்திக் கொள்ளும் பாசிஸ்டுகளின் உத்தியாகும். முதலாவதாக, மோடியின் குஜராத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் பல மோதல் கொலைகள் நடந்திருந்தாலும், வெறும் இரண்டு வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாவதாக, மற்ற மாநிலங்களில் நடைபெறும் போலி மோதல் கொலைகள் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுவதற்கு மேல், அக்கொலைகளுக்கு அரசியல் நியாயம் கற்பிக்கப்படுவதில்லை. ஆனால், குஜராத்திலோ ஒவ்வொரு போலி மோதல் கொலையும், நாட்டைப் பாதுகாக்கும் முசுலீம் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டு, அதன் மூலம் மோடியை நாட்டையே காக்க வந்த இரட்சகனாகக் காட்டும் இந்து மதவெறிப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டு, மற்ற மாநிலங்களில் நடைபெறுவதைப் போலத்தான் குஜராத்திலும் போலி மோதல் கொலைகள் நடத்தப்படுவதாக மோடி கதையளப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.

மோடியை ஆதரிக்கும் சாக்கில், போலி மோதல் கொலைகள் மூலம்தான் இசுலாமிய பயங்கரவாதிகளையும் கிரிமினல் மாஃபியா கும்பல்களையும் ஒழித்துக்கட்ட முடியும் என்று இந்து மதவெறி பாசிஸ்டுகளில் ஊதுகுழலான துக்ளக் “சோ” வாதிடுகிறார். “சோ”வும் அவரை ஆதரிக்கும் கும்பலும் போலி மோதல் கொலைகள் தேசநலன்/பாதுகாப்பிற்காகவே நடத்தப்படுவதாக நியாயப்படுத்த முயன்றாலும், அவற்றின் பின்னணியில் வெவ்வேறு காரணங்கள் உள்ளன என்பது ஏற்கெனவே பல வழக்குகளில் அம்பலமாகியிருக்கிறது.

உதாரணத்திற்கு, குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ‘தீவிரவாதி’ சோராபுதின் வழக்கையே எடுத்துக் கொள்வோம். சோராபுதின் மார்பிள் சுரங்க முதலாளிகளின் நலனுக்காகத்தான் சுட்டுக் கொல்லப்பட்டாரேயொழிய, தேச நலனுக்காக அல்ல என்பது இப்பொழுது நிரூபணமாகியிருக்கிறது. இந்த உண்மையான நோக்கம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, உள்ளூர் தாதாவான சோராபுதினை முசுலீம் தீவிரவாதியாகவும், நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு சோராபுதின் குஜராத்திற்குள் நுழைந்ததாகவும் கதை பின்னப்பட்டது.

அது மட்டுமல்ல, ஆயுதக் கடத்தல் பேர்வழி, தாவூத் இப்ராகிமின் கூட்டாளி என்றெல்லாம் இந்து மதவெறிக் கும்பலால் அன்று குற்றம் சுமத்தப்பட்ட சோராபுதினுக்கும் மோடிக்கு நெருக்கமான குஜராத் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா மற்றும் போலீசு துணை கமிசனர் அபய் சுடாசாமா ஆகியோருக்கும் இடையே தொழில் உறவு (சுரங்க அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது) இருந்து வந்திருப்பது இன்று அம்பலமாகியிருக்கிறது. சோராபுதினைப் போலி மோதலில் சுட்டுக் கொன்றதன் மூலம் இக்கும்பல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைத் தட்டியிருக்கிறது. ஒன்று, சுரங்க அதிபர்கள் அள்ளிக் கொடுத்த‘‘சுபாரி” பணம்; மற்றொன்று, தங்களது இரகசியத்தைத் தெரிந்த கூட்டாளி ஒழிந்தான் என்ற நிம்மதி.

அமித் ஷா கும்பலின் நிம்மதியை சோராபுதினின் தம்பி ருபாபுதின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கெடுத்துவிட்டது. அது மட்டுமல்ல, இக்கும்பலின் இரகசியங்களையெல்லாம் அறிந்த என். கே. அமின் என்ற போலீசு அதிகாரி “அப்ரூவர்” ஆக மாற சி.பி.ஐ.-யிடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனால், மோடி கும்பல் இந்த அதிகாரி நடத்திய பழைய போலி மோதல் கொலை வழக்கை விசாரணைக்காகத் தூசு தட்டி எடுத்திருக்கிறது. போலீசு அதிகாரிகளின் பதவி உயர்வுக்குப் பயன்படும் போலி மோதல் கொலைகள், அவர்களைப் பழி வாங்கவும் பயன்படுத்தப்படும் எனக் காட்டியிருக்கிறார், மோடி.

குஜராத்தில் நடந்த மற்றொரு போலி மோதலில் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த இர்ஷத் ஜஹன், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதியா, இல்லை அப்பாவி கல்லூரி மாணவியா என்பது குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனினும், இந்து மதவெறிக் கும்பல், “அவர் முசுலீம் தீவிரவாதிதான், அவர் சுட்டுக் கொல்லப்பட்டது நியாயம்தான்’’ என்று மூர்க்கமாகப் பிரச்சாரம் நடத்தி வருகிறது. இது மட்டுமின்றி, சோராபுதின், இர்ஷத் ஜஹன் கொலைகளைக் காட்டி, பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் இசுலாமிய பயங்கரவாதத்தால் மோடியின் உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருப்பதாகவும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

மோடியும், பா.ஜ.க.வும் சோராபுதின் மற்றும் இர்ஷத் ஜஹன் போலி மோதல் கொலை வழக்குகளை மத்தியப் புலனாய்வுத் துறையும், உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருவதைக் காட்டி, “முசுலீம் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடி வரும் மோடியைக் கொலைகாரனாகக் காட்டும் நோக்கத்தோடு, காங்கிரசும் அதன் உளவு நிறுவனங்களும் கதைகட்டி விடுவதாகவும், நாட்டின் மிகப் பெரிய அபாயமான இசுலாமிய பயங்கரவாதத்தோடு காங்கிரசு ஓட்டுக்காகச் சமரசம் செய்து கொள்வதாகவும்” குற்றஞ்சுமத்துகின்றனர்.

ஆனால், உண்மையில் சோராபுதின் போலி மோதல் கொலைக்கு எதிராக காங்கிரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டதில்லை. மேலும், அணுஉலை விபத்து கடப்பாடு மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க., காங்கிரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதற்கு ஈடாக, சோராபுதின் கொலை வழக்கில் மோடியை மாட்டி விடுவதில்லை என காங்கிரசு உறுதியளித்திருப்பதாக முலயம் சிங்கும் லல்லுவும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இர்ஷத் ஜஹன் போலி மோதல் கொலை வழக்கிலோ காங்கிரசு இளைய பங்காளியாகவே செயல்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவியான இர்ஷத் ஜஹன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி; அவர் மோடியைக் கொல்லும் நோக்கத்துடம் குஜராத்துக்கு வருவதாக குஜராத் அரசின் புலனாய்வுப் பிரிவிடம் போட்டுக் கொடுத்ததே காங்கிரசு அரசுதான். இப்போலி மோதல் கொலை வழக்கு அம்பலமாகி விசாரணைக்கு வந்த பின்னால், காங்கிரசு அரசு தான் அப்படிச் சொல்லவில்லை என்று பல்டி அடித்துவிட்டது என்பதுதான் உண்மை.

இந்தப் போலி மோதல் கொலைகள் குறித்து இவ்வளவு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், பா.ஜ.க.வும் மோடியும் கொஞ்சம்கூட அசராமல், சோராபுதின் மற்றும் இர்ஷத் ஜஹன் குறித்து பொய் மூட்டைகளையே உண்மையைப் போல கட்டமைத்து இந்து மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வர முடிகிறதென்றால், அதற்குக் காரணம் போலி மோதல் கொலைகள் குறித்தும், இசுலாமிய பயங்கரவாதம் குறித்தும் பெரும்பாலானவர்கள் இந்து மதவெறி பாசிச கும்பலின் கருத்துக்களையே கொண்டுள்ளனர் என்பதுதான்.

குறிப்பாக, மேல்தட்டு வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் போலி மோதல்கள் மூலம்தான் முசுலீம் தீவிரவாதத்தையும், கிரிமினல்களையும் ஒழித்துக்கட்ட முடியும் என்ற கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தக் கருத்துதான் ஒவ்வொரு போலி மோதல் கொலைக்கும் சமூக அங்கீகாரத்தை வழங்கி விடுகிறது.

போலி மோதல் கொலை வழக்குகளில் நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்றால், அதனை நடத்திய போலீசாரையும், அப்போலீசாரைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகளையும் நீதிமன்றங்களையும் எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது; பொதுமக்கள் மத்தியில் ‘மோதல்’ கொலைகள் பற்றி உருவாகியிருக்கும் இந்த பாசிச கருத்தையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும்.

அறிவுப் புரட்சி ஓங்குக !



பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி
( பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் )
அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் , ஹதீது, கணிதம், அறிவியல் , வானியல் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன எனக் குறிப்பிடுகின்றார் . அத்தகைய காலத்தில் கணிதம், மருத்துவம், இயற்பியல் வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சாதனைகள் பலவற்றை உலகளவில் செய்து பெருமிதம் மிக்கவர்களாக இஸ்லாமியர் அவனியில் உலா வந்தார்கள். ஆனால் அதன்பின் அவர்களது அறிவுத்திறன் ஒழிந்து கொண்டுவிட்டது. அதே சமயத்தில் யூதர்கள் பல்வேறு துறைகளிலும் ஆளுமை செலுத்தத் தொடங்கினார்கள் .
இன்று உலகளவில் யூதர்கள் 140 லட்சம் பேர் உள்ளனர் முஸலிம் களோ 1500 லட்சம் பேர் உள்ளனர் அதாவது ஒரு யூதருக்கு 107 முஸ்லிம்கள் என்ற கணக்கில் இருக்கிறார்கள் உலகளவிலும் இந்திய அளவிலும் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். ஆயினும் நிலைமை எவ்வாறு உள்ளது ?

விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், கம்யூனிஸத்தந்தை எனக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் உள்பட உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் யூதர்களே ஆவர்; கடந்த 105 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற யூதர்கள் 180 பேர்; ஆனால் முஸ்லிம்களோ 3 பேர்தாம்; மருத்துவத்துறையில் தடுப்பூசி, சிறுநீரகச் சுத்திகரிப்பு, குடும்ப நலம், கருவியல், குடலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் புதிய கண்டிபிடிப்புகளைத் தந்து சாதனைப் படைத்தவர் களும் யூதர்களே ஆவர் கோகோ கோலா போலோ லெவிஸ் ஜீன்ஸ் கணிணியியல் ஆரகிள் டெல் கம்ப்யூட்டர்ஸ் முதலான பல்வேறு வணிகத் துறைகளிலும் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருப்பவர் களும் யூதர்களாவர்.
உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் பெரும்பான்மையான ஆதிக்கம் யூதர்களுடையதே ஆகும்; ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் பல செய்தி நிறுவனங்களும் அவர்களுடைய ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன; அவ்வாறிருக்கும் போது உலகளவில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கர வாதிகளாவும் வன்முறையாளர்களாகவும் சித்திரிக்காமல் இருப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
கல்வித் துறையில் கணிப்பைச் செலுத்தினால் 57 இஸ்லாமிய நாடுகளில் 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம்; அமெரிக்காவில் மட்டுமே 5758 பல்கலைக் கழகங்கள் உள்ளன ; பல்கலைக்கழகங்களின் தரவரிசையைக் கணக்கிட்டால் முதல் தரத்திலிருந்து 500 தரம் முடிய உள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று கூட ஒரு முஸ்லிம் நாட்டின் பல்கலைக்கழகம் கிடையாது.
கிறிஸ்துவ நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 90 ஆக இருக்கும் போது முஸ்லிம் நாடுகளில் படித்தவர்களின் சதவிகிதம் 40 ஆகவே இருக்கிறது; கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் 15 நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 100 ஆக இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் கூட படித்தவர்கள் 100 சதவிகிதம் இல்லை ; கிறிஸ்தவ நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 1000 பேர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கும்போது முஸ்லிம் நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு வெறும் 50 பேர் மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள்; உலகளவில் முஸ்லிம்களின் இத்தகைய நிலையைக் கண்ணுறும்போது வேதனையே விஞ்சுகிறது .
உலகளாவிய இந்த நிலைமையின் தாக்கத்தையே இந்தியாவிலும் காண முடிகிறது; இந்தியாவில் முஸ்லிம்கள் 16 சதவிகிதம் இருப்பதாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறத;. நாமோ 22 லிருந்து 25 சதவிகிதம் இருக்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 5.8 சதவிகிதமென அரசுப் புள்ளிவிவரம் காட்டுகிறது; நாமோ 10 லிருந்து 13 சதவிகிதம் இருக்கிறோம். 10 சதவிகிதம் எனக் கணக்கிட்டாலும் தமிழக சட்டமன்ற 234 உறுப்பினர்களில் 23 அல்லது 24 முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 7 பேர்தாம் ! பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 120 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ 40 க்கும் குறைவே !
நிர்வாகத்துறையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளில் 2 சதவிகிதமே முஸ்லிம்கள்; தமிழகத்தில் 527 பேரில் 18 பேரும் குரூப் ஏ அதிகாரிகள் 540 பேரில் 15 பேரும்தாம் முஸ்லிம்கள் .நீதித்துறையில் கணக்கிட்டால் உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை முஸ்லிம் நீதிபதிகள் 1 சதவிகிதமே இருக்கிறார்கள்; ஒருகாலத்தில் தமிழக உயர்நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் இருந்தபோது 4 முஸ்லிம் நீதிபதிகள் இருந்தனர். இன்று 49 நீதிபதிகள் இருக்கு மிடத்தில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகவில்லை.
ஊடகத்துறையில் கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி பத்திரிகை ஆசிரியர், துணை ஆசிரியர், உரிமையாளர் உள்ளிட்ட பத்திரிகை யாளர்களில் 55 சதவிகிதம் பேர் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாக உள்ளனர் ;முஸ்லிம்களோ 3 சதவிகிதம் தாம் உள்ளனர். இவ்வாறே ஒரு ஜனநாயக நாட்டின் தூண்களாகக் கருதப்படும் ஆட்சி ,நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்குத் துறைகளிலுமே முஸ்லிம்களுடைய நிலை கவலையளிப்பதாகவே இருக்கிறது.
இந்திய நாட்டில் முஸ்லிம் தணிக்கையாளர் 1 சதவிகிதமே ;பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இன்னும் 3 சதவிகிதத்தை எட்டவில்லை; வங்கி போன்ற துறைப் பணிகளிலே 2 . .2 சதவிகித மாகவே முஸ்லிம்கள் உள்ளனர்; அரசுத்துறையானாலும் அரசு சார்ந்த துறையானாலும் தனியார் துறையானாலும் முஸ்லிம்கள் 3 சதவிகிதத் திற்கும் குறைவாகவே வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களில் 94.61 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனச் சுட்டுகிறது சச்சார் குழு அட்டவணை 10ல் பாகம் 3ல் பக்கம் 204ல் முஸ்லிம்களில் 93.3 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்; 49 சதவிகிதம் முஸ்லிம்கள் தினக் கூலிகளாக இருக்கிறார்கள்.
கல்வித்துறையில் இன்றைக்கும் இந்தியாவில் 6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட முஸ்லிம் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேர் மழைக்குக்கூட பள்ளிக் கூடத்திற்குள் ஒதுங்குவதில்லை ;ஆரம்பத்தில் பள்ளியில் சேர்பவர்களிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வோர் 11.5 சதவிகிதமே ஆகும்; பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 2 சதவிகிதமே உள்ளனர்; பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள் 0.78 சதவிகிதமே என்றால் கல்வியில் நமது நிலையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இந்தியாவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதத்திற்கும் குறைவே என்றபோதிலும் இன்று இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதமும் ஊனமுற்றோருக்கான கல்வி நிறுவனங்களில் 25 சதவிகிதமும் கிறிஸ்தவர்களுக்குச்சொந்தமானவை யாகும்; கல்வி வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் அதிக சதவிகிதம் பேர் இருப்பதாலேயே தமிழகத்தின் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு தேவையில்லையெனக் கூறிவிட்டனர்.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித ஒதுக்கீட்டால் சாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது, சில துறையில் பாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது; சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாதகத்தை எடுத்துக்கூறிக் களைந்து கொள்ளவும் முஸ்லிம்கள் பாடுபட்டாக வேண்டும்; வருங்காலத்தில் இந்த இட அளவை அதிகப்படுத்தவும் போராடியாக வேண்டும்.
அக்காலத்தில் இந்தியாவில் கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டு மல்லாது மாகாண சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு இருந்து வந்தது ஆனால் அவை காலத்தின் கோலத்தில் காணாமல் போயின. ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது; 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திடவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.
மத்திய –மாநில அரசுகளிடம் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் போராடும் அதே சமயம் நம்மை நாமே கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர்த்திக் கொள்ளவும் போராட வேண்டியிருப்பதை மறந்து விடக்கூடாது. பெரும்பாலும் ஒரு கிறிஸ்துவத் தேவாலயம் இருக்குமிடத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருப்பதைக் காணலாம். அதே போன்று இடவசதியும் பொருள் வசதியும் உள்ள பள்ளிவாசல்களில் மார்க்கக் கல்வியும் நடப்புக் கல்வியும் இணைந்து கற்பிக்கப்படும் தரமுள்ள பிரைமரி பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.
ஆரம்பப் பள்ளியில் நுழையும் ஏறக்குறைய 70 சதவிகித மாணவர்கள் 11 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட நிலையை அடையும் போது மூன்றில் ஒரு பங்கினாராகச் சுருங்கி விடுகின்றனர். மேற்பட்டப் படிப்பு வகுப்பைத் தொடுபவர்கள் 2 சதவிகிதமாக மேலும் சுருக்கம் காணுகின்றனர். பெண் குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர் ஐந்தாம் வகுப்புக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். எட்டாம் வகுப்புக்கு முன்னர் மேலும் 57 சதவிகிதம் மாணவிகள் படிப்பை நிறுத்திவிடும் போக்கு சமுதாயத்திலிருந்து முற்றிலுமாகக் களையப் படவேண்டும். அதற்கான முழுமுயற்சிகளைப் புயல்கால அடிப்படையில் முஸ்லிம்கள் எடுத்தாக வேண்டும் .
உலக அளவில் யூத சகோதரர்களும் இந்திய அளவில் பிராமணச் சகோதரர்களும் குறைந்த சதவிகித அளவே இருந்தாலும் தங்களது அறிவுத் திறனால் உயர்ந்திருப்பதைப் போன்று முஸ்லிம் சமுதாயமும் முன்னேற வேண்டியுள்ளது அத்தியாவசியமாகும். இறைமறை நெறியும் திருநபி ( ஸல் ) வழியும் வற்புறுத்துகிற அறிவை – கல்வியை – இஸ்லாமியர்கள் முற்றிலுமாகப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்கள் முன்னேற இன்றைய தேவை அறிவுப் புரட்சியே ஆகும் .
ஓங்கட்டும் அறிவுப் புரட்சி....
ஒளிரட்டும் சமுதாயம்...
கூடட்டும் இறையருள்....

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!

பல தலைமுறைகளாக ஊழலிலே ஊறித்திளைத்த காங்கிரஸ் கொள்ளைக் கூட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து கீழ்த்தரமாகப் பொறுக்கித் தின்றிருப்பது இப்போது சந்தி சிரிக்கிறது.

சென்ற ஆண்டு ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதைப் போன்றதொரு போட்டியை நடத்தி அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக ஆட்சியாளர்கள் கூறிவந்தார்கள். அதன்படி, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் போட்டிகளை டெல்லியில் நடத்தவிருக்கிறார்கள்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கென அமைப்புக் கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக சுரேஷ் கல்மாடி என்ற முன்னாள் காங்கிரசு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளுக்காக நவீன விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவது, ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களைச் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்துவது எனப் பல வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்தத் திட்டங்களின் எல்லா இடங்களிலும் வகைதொகையின்றி, அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. சென்ற மாதத்தில் இவர்களது ஊழல் வெளிப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவதொரு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது.

பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகள் அதனிடமிருந்து ‘சுதந்திரம்’ பெற்ற பின்னரும், எஜமான விசுவாசத்துடன் அமைத்துள்ள கூட்டமைப்புதான் காமன்வெல்த் என்பதாகும். காலனிய அடிமைத்தனத்தின் மிச்சசொச்சமாக விளங்கும் காமன்வெல்த்தின் தலைமைப்பீடமான பிரிட்ஷ் பேரரசியின் முன்னிலையில் நடைபெற்ற ’காமன்வெல்த் சுடர்’ ஊர்வலத்தை அகன்ற திரையில் காட்டவும், அந்த ஊர்வலத்திற்கு கார்களை வாடகைக்கு எடுக்கவும், ஏ.எம்.பிலிம்ஸ், ஏ.எம்.கார்ஸ் ஆகிய பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஆனால், அது போன்ற நிறுவனங்கள் எதுவும் உண்மையில் இல்லை. இந்தியாவில் இவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது. ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியது போன்றதொரு போலியான சிபாரிசுக் கடிதத்தை அதிகாரிகளே உருவாக்கி ஏமாற்றியுள்ளனர். பிரிட்டிஷ் பேரரசியே தனது அதிருப்தியைத் தெரிவிக்குமளவுக்கு இந்த ஊழல் சில்லறைத்தனமாக நடந்துள்ளது.

நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இவ்விளையாட்டுப் போட்டிக்கு விளம்பரம் திரட்டித் தரவும், விளம்பரக் கட்டணத்தை வசூலிக்கவும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் அமர்த்தப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை ஒரு விளம்பரதாரரைக் கூடப் பிடித்து தரவில்லை. அரசு நிறுவனங்கள் அரசு விழாக்களுக்கு விளம்பரம் தருவதென்பது வழக்கமான செயல்தான். இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் தாமே முன்வந்து வழங்கிய கோடிக்கணக்கான விளம்பரதாரர் தொகையில் 23 சதவீதத்தை, செய்யாத வேலைக்குக் தரகுப் பணமாக இந்த நிறுவனத்திற்குத் தரவேண்டும்.

நாக்பூரில் புதிதாக ஒரு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஆன செலவு 84 கோடி ரூபாய்தான். ஆனால், டெல்லி நேரு விளையாட்டரங்கை ‘மேம்படுத்த’ மட்டும் 669 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இவ்வாறு ‘மேம்படுத்தப்பட்ட’ அரங்கத்தின் கூரை, அண்மையில் பெத லேசான மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதேபோன்று இன்னும் 17 அரங்கங்களை பல ஆயிரம் கோடிகளில் ‘மேம்படுத்தி’யுள்ளனர்.

“டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவற்றில் ‘தனிச் சிறப்பாக’ ஏதேனும் இருக்குமோ என்னவோ?

இதேபோல முக்கிய பிரமுகர்கள் அமரும் சோபாசெட்டுகள், குளிர்சாதன எந்திரங்கள், கார்கள் என பலவற்றை அவற்றின் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதலான விலைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக ரூ.50 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.

2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு மதிப்பீடு 35,000 கோடிகளில் வந்து நிற்கிறது. வேலைகள் எதுவும் முடிந்த பாடா இல்லை என்ற நிலையில், திட்டமிட்டதை விட 1575% செலவு அதிகரித்துவிட்டது. இதனை ஈடுகட்ட டெல்லி மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட நிதிகள் இதற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆதரவற்ற முதியவர்களுக்கான 171 கோடி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான 744 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியன காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவு செய்யப்பட்டன. இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கென டெல்லி அரசு கொடுக்க வேண்டிய 5,000 கோடி ரூபாய், பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கான டெல்லி அரசின் நிதி ஒதுக் கீட்டில் 14 கோடி ரூபாய் – என பிற நலப்பணிக்களுக்கான நிதிகள் காமன்வெல்த்தில் கரைக்கப்பட்டுவிட்டன.

இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த தனியாக ஒரு நகரத்தை உருவாக்காமல், தெற்கு டெல்லியை ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். இதற்காக தெற்கு டெல்லியில் நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் சேரிவாழ் மக்களை, நகரை அழகுபடுத்துவது என்ற பெயரில் விரட்டியடித்துள்ளனர். இதன் மூலம் டெல்லி பெருநகரத் திட்டத்தை தெற்கு டெல்லிவரை விரிவுபடுத்தி மேட்டுக்குடியினர் ஆதாயமடைந்துள்ளனர். விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி கட்டப்படும் வீடுகளை, போட்டிகள் முடிந்த பின்னர் கைப்பற்றிக்கொள்ள இப்போதே போட்டாபோட்டியும் ஊழல்களும் பெருகி, வெளியே கசியத் தொடங்கிவிட்டன.

இலஞ்ச ஒழிப்புத்துறை, இதுவரை நடத்திய விசாரணை மூலம் 16 திட்ட ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இது மட்டுமின்றி, கணக்கு தணிக்கை அதிகாரியின் இடைக்கால அறிக்கையும் ஊழல் மோசடிகள் நடந்துள்ளதை நிலைநாட்டியுள்ளது. இருப்பினும், ஊழல் வெளியாகி இத்தனை நாட்களாகியும் சுரேஷ் கல்மாடி இன்னும் பதவியில் நீடிக்கிறார். ஊழல்-செய்தவர்களுக்கு ‘கடும்’ தண்டனை கொடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் சவடால் மட்டும் அடிக்கிறார். இவை ஒருபுறமிருக்க, போட்டியில் விளையாட்டு வீரர்களைச் சேர்த்துக் கொள்ள இலஞ்சம் வாங்குவது, வீராங்கனைகளுக்கு பாலியல் நிர்ப்பந்தங்கள் கொடுப்பது என பல வழிகளிலும் அதிகார வர்க்க ஊழலும் மோசடியும் அட்டூழியங்களும் நடக்கின்றன.

கும்பி கூழுக்கு அழும்போது கொண்டைக்குப் பூ வைத்த கதையாக, நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு வேளைச் சோறின்றி வாடும் போது ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இதுபோன்ற ஆடம்பர விழாக்கள் நடத்துவதென்பதே மிகவும் வக்கிரமானது. இந்த விழாவின் பெயரில் அதிகாரிகள் பொறுக்கித் தின்பதற்கு டெல்லிவாழ் ஏழை உழைக்கும் மக்களும், பல மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும் தமது வாழ்வைப் பறிகொடுத்துள்ளதுதான், இதை விட வக்கிரமானது. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியை அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் களமிறங்கிய முதலமைச்சர் ஷீலா தீட்சித், டெல்லியிலுள்ள 60,000 பிச்சைக்காரர்களை விரட்டியடித்தார். சேரிகளை இடித்துத் தரை மட்டமாக்கி இலட்சக்கணக்கான ஏழை மக்களை வீடற்ற அனாதைகளாக, கடுங்குளிரில் அல்லாடவிட்டார். இனி, டெல்லியில் திருடர்களும் ஊழல் பேர்வழிகளுமான முதலாளிகளும் ஓட்டுப் பொறுக்கிகளும் இருக்கலாம். ஆனால் பிச்சைக்காரர்களும் ஏழைகளும் இருக்க முடியாது என்றாகிவிட்டது.

காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகளை ஒப்பந்தமெடுத்து ஊழல் செய்தவர்கள், இன்னொரு பக்கம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அற்ப கூலிக்கு வரவழைத்து, கொத்தடிமைகளாகக் கசக்கி பிழிந்து வேலை வாங்கியுள்ளனர். சந்தை விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுத்தவர்கள், தொழிலாளர்கள் தங்குவதற்கு வீடுகள் கூடக் கொடுக்காமல் பிளாஸ்டிக் தார்பாயிலும் தகரக் கொட்டைகளிலும் மொத்தமாக அடைத்ததால், தொற்று நோ தாக்கி இதுவரை நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். கட்டுமானப் பணிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படாத நிலையில் ஏற்பட்ட விபத்துகளிலும், தரக்குறைவான பொருட்களால் கட்டப்பட்ட பாலங்கள், கட்டுமானங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களிலும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கேள்வி கேட்க நாதியின்றி கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்ற விபத்துகளின் காரணமாக மெட்ரோ ரயில் திட்டப் பணியில் மட்டும் 90-க்கும் மேலான தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டில் கரைபுரண்டோடும் ஊழலைப் பற்றிப் பேசினாலே, விளையாட்டுப் போட்டியால் இந்தியாவின் பெருமிதம் உயரும்போது, “ஊழலைப் பற்றிப் பேசி தேசத்தின் கவுரவத்தைக் குலைக்காதீர்கள்” என்று ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாகத் ‘தேசபக்தி’ கூச்சல் போடுகின்றனர். காங்கிரசு முன்னாள் அமைச்சரான மணிசங்கர் அயர் இந்த ஊழல்களைப் பற்றி வாய்திறந்தவுடனேயே, இதை காங்கிரசும் பா.ஜ.க.வும் ஊடகங்களும் கண்டிக்கின்றன. மேட்டுக்குடி இந்தியாவின் பிரச்சினை என்று வரும்போது இங்கே கட்சி வேறுபாடுகள் கூட மறைந்து போகின்றன. பொதுவில் காமன்வெல்த், ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்றாலே ஊழலும் முறைகேடுகளும் நடப்பது சகஜம்தான் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். நல்லபடியாக போட்டி நடக்கட்டும், ஊழலை பிறகு விசாரித்து முடிவு செய்வோம் என ஊழலுடன் ஒத்துப்போக வைக்கும் கண்ணோட்டம்தான் ஆளும் வர்க்கங்களாலும் ஊடகங்களாலும் பரப்பப்பட்டு வருகிறது.

‘தேசியப் பெருமித’ போதையில் இந்த அயோக்கியத்தனத்தை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா? கூச்சநாச்சமின்றி சில்லறைத்தனமாக நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகளையும், குடிசைவாழ் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்கும் அட்டூழியத்தையும், கூலித் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் கொத்தடிமைத்தனத்தையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் போகிறோமா?

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்


பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் - சுஷ்மா சுவராஜ்

இந்தியாவின் மத்திய-கிழக்கு மாநிலங்களில் நடத்தி வரும் போரான காட்டு வேட்டையின் (Operation Greenhunt) அவசியம், நோக்கம் குறித்து, சோனியா – மன்மோகன் சிங் கும்பலின் ஊதுகுழலான சிதம்பரம் சோல்லி வருவதை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பாருங்கள். “நாட்டின் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் அப்பிரதேசத்தை முன்னேற்றவும் அங்கு வளர்ச்சித் திட்டங்களை அமலாக்கத் தடையாகவும் உள்ள மாவோயிச நக்சல்பாரிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்கிறார் சிதம்பரம்.

“என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள்? யார் யாருக்கான வளர்ச்சித் திட்டங்கள்?” என்று கேட்கிறார்கள், முற்போக்குப் பொருளாதார நிபுணர்கள், நாட்டுப்பற்றுடைய அறிவியல்-சுற்றுச்சூழல் அறிஞர்கள், உண்மையான மனித உரிமைப் போராளிகள், ஜனநாயக அறிவுஜீவிகள், நியாயமான பத்திரிக்கை – வானொளி செய்தியாளர்கள்.

ஒவ்வொரு நாளும் நிறையவே சண்டப்பிரசண்டம் செய்யும் சிதம்பரம் இந்தக் கேள்விகளுக்கு ஒருபோதும் பதில் சோல்வதில்லை. ஆனால், அவற்றுக்கான பதில்களை, நடைமுறை எடுத்துக்காட்டு மூலம் கர்நாடகா – ஆந்திரா எல்லையில் செய்து காட்டி வருகிறார்கள், இப்போது நாடு முழுவதும் பிரபலமாக அறியப்பட்டுவரும் “பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்.”

யார் இந்த ரெட்டி சகோதரர்கள்? வெங்காய விளைச்சலில் பிரபலமான பெல்லாரி மாவட்டத்தின் தலைநகர் பெல்லாரி நகரின் போலீசு நிலையத் தலைமைக் காவலர் கெங்கா ரெட்டியின் மூன்று மகன்கள்தாம் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி. அவர்கள் வளர்ந்த போலீசுக் காலனியில் கற்றுக் கொண்ட இரண்டு பாடங்கள்: அதிகாரத்தைப் பிடிப்பதற்கு மிக முக்கிய கருவியாகிய பணம் பாதாளம் வரை பாயும்; சட்டத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, அதை ஓய்வின்றி அலைக்கழியச் செய்து விட்டு நீ உன் வேலையைப் பார்; இந்த இரண்டு பாடங்களையும் வைத்து சிட்பண்டு, ஓட்டல், வாரப்பத்திரிகை ஆகிய தொழில்களை நடத்தி, எல்லாவற்றையும் விட முக்கியமாக இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் வெறித்தனமாக இறங்கி, பணத்தைக் குவிப்பதற்காக பல சட்டவிரோத – மோசடி வேலைகளில் ஈடுபட்டு, ஒரு பத்தாண்டுக்குள் கர்நாடகா மாநில அரசியலிலும், பொருளாதாரத்திலும் அசைக்க முடியாத பெரும் புள்ளிகளாகி விட்டார்கள்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் மூத்தவர் கருணாகர ரெட்டி, கர்நாடகா மாநில வருவாத் துறை அமைச்சர். அடுத்தவர் ஜனார்த்தன ரெட்டி – மூவரில் வில்லத்தனமான நாயகன், மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர். மூன்றாமவர், கர்நாடகா மாநில பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவராக உள்ள சோமசேகர ரெட்டி. மாநில மருத்துவ அமைச்சர் பி.சீறீராமுலு – இவர்களின் உடன்பிறவா சகோதரர். கர்நாடகாவின் கடந்த மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு வேண்டி “ஆப்பரேசன் கமல்” (தாமரை நடவடிக்கை) என்ற பெயரில் பணபலமும் ஆள்பலமும் கொடுத்து, பா.ஜ.க.வெற்றியின் சூத்திரதாரர்களாக இருந்தவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள்தாம்.

எப்போதும் பல கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ரெட்டி சகோதரர்களின் சட்டைப் பையில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, பெல்லாரி மாவட்ட நிர்வாகத்தில் சில அதிகாரிகளை முதலமைச்சர் எடியூரப்பா மாற்றம் செய்ய முயன்றபோது, 40 எம்.எல்.ஏ.களை ஐதராபாத்துக்குக் கடத்திக் கொண்டு போனார்கள், ரெட்டி சகோதரர்கள். எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுத் தமது விசுவாசியை முதலமைச்சராக்கி விடப் போவதாக மிரட்டினர். சுஷ்மா, அத்வானி போன்ற பா.ஜ.க. தலைவர்கள் பேரம் பேசி எடியூரப்பாவை அடக்கி வைத்தனர். பல் பிடுங்கப்பட்ட எடியூரப்பா தன் நிலைக்காக தொலைக்காட்சியிலேயே பகிரங்கமாக கதறி அழுது விட்டார்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் கர்நாடக அரசியலில் மட்டுமல்ல, ஆந்திராவிலும், பா.ஜ.க. தலைவர்களைவிட காங்கிரசின் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் நெருக்கமானவர்கள். ராஜசேகர ரெட்டியின் மருமகனுடன் இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் நெருங்கிய கூட்டு வைத்திருப்பவர்கள். சோனியாவுக்கு எதிராக சுஷ்மாவை நிறுத்தி பிரதமராக்க முயன்ற ரெட்டி சகோரர்கள், இப்போதும் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர முதல்வராக்குவதற்குப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

ரெட்டி சகோதரர்களின் துரித வளர்ச்சி!

இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு, அரசு அனுமதியுடன் இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், இலாபம் சம்பாதிப்பதும், அதேபோல அரசியலில் ஈடுபட்டு அமைச்சர்களாவதும் செல்வாக்குப் பெறுவதும் குற்றமா? இதைத்தானே ரெட்டி சகோதரர்கள் செய்தார்கள் என்று பா.ஜ.க. வாதிடுகிறது. “அப்பாவி”கள் பலரும் அவ்வாறே எண்ணலாம்.

ஆனால், “2003-2004-ஆம் ஆண்டு விவரப்படி பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் வருமான வரி செலுத்தவேண்டிய அளவுக்குக்கூட வருமானம் இல்லாதவர்கள். அதன்பிறகு அவர்கள் 50,000 கோடி ரூபா மதிப்புடைய சோத்துக்களைக் குவித்துள்ளார்கள். இந்த செல்வத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்?” என்று கேட்கும் கர்நாடகா மேலவை உறுப்பினர் கொண்டையா, அரசு சோத்துக்களைப் பயன்படுத்தி சோத்துச் சேர்த்த குற்றத்துக்காக, ஜனார்த்தன மற்றும் கருணாகர ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களின் உடன்பிறவா சகோதரர் சிறீராமுலு ஆகியோரின் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் மூலம் தேர்தல் ஆணையாளரிடம் மனுக் கொடுத்துள்ளார்.

ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோதச் செயல்கள் குறித்து மத்திய புலனாவு பிரிவின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப் போவதாக மாநில ஆளுநர் மிரட்டியிருக்கிறார். “காங்கிரசின் எடுபிடியாகச் செயல்படும் சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது, மாநில லோகாயுதா விசாரணை நடத்தும்” என்று மாநில பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது. மாநில ஊழல் அதிகார முறைகேடுகளை தனிச் சிறப்பாக விசாரிப்பதற்காக உள்ள சிறப்பு ஆணையம் லோகாயுதா. தற்போது அப்பதவியில் உள்ள சந்தோஷ் ஹெக்டே, ரெட்டி சகோதரர்களின் ஊழல்-அதிகார முறைகேடுகளுக்கு எதிராகத் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறாக மாநில அரசு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஜூனில் பதவி விலகல் கடிதம் கொடுத்தார். இதனால் மாநில ஆட்சியாளர்களின் குட்டு வெளிப்பட்டுப் போனதால் பதறிப்போன பா.ஜ.க. தலைமை அத்வானி மூலம் ஹெக்டேயை அணுகியது. “மாநில அரசின் தவறுகள் திருத்தப்படும், லோகாயுதாவுக்குக் கூடுதல் அதிகாரம் தரப்படும்” என்ற வாக்குறுதி கொடுக்கவே, ஹெக்டே பதவி விலகலை நிறுத்தி வைத்துள்ளார்.

ஆனால், “தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக காங்கிரசின் சதி” என்ற தயார்நிலை பதிலை பா.ஜ.க. எல்லாவற்றுக்கும் தீர்வாக வைத்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல், குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான இசுலாமியர் படுகொலைகள் ஆகியவற்றிலிருந்து குற்றவாளிகளைத் தப்புவிப்பதில் அக்கட்சி எவ்வளவு அக்கறை கொண்டுள்ளதோ, அதேபோல பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் விவகாரத்திலும் கடமைப்பட்டுள்ளது. ரெட்டி சகோதரர்களின் பணபலத்தைக் கொண்டு நடத்தப்பட்ட “தாமரை நடவடிக்கை”யால் தான் பா.ஜ.க. கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தது. அக்கட்சி ஆட்சியில் நீடிப்பதும் வீழ்வதும் ரெட்டி சகோதரர்களின் கை அசைவில் இருக்கிறது.

ரெட்டி சகோதரர்களின் ஊழல்-அதிகார முறைகேடுகள் அத்வானி – சுஷ்மா முதல் அனைவருக்கும் தெரியும். பெல்லாரியில் இருந்து 71 இலட்சம் டன்கள், அதாவது 60,000 கோடி ரூபா மதிப்புடைய இரும்பு, கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இதை கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவே மாநில சட்டப்பேரவையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு இன்னமும் தனக்கு மேல் பொறுப்பில் இருப்பவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரெட்டி சகோதரர்கள். ஆறு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய இமாலய சாதனையை அவர்களால் எப்படிச் சாதிக்க முடிந்தது?

இரும்புக் கனிமச் சுரங்கங்களா?
தங்கக் கனிமச் சுரங்கங்களா?

வட கர்நாடகாவின் ஆந்திர எல்லையில் உள்ள பின்தங்கிய சிறிய மாவட்டம் பெல்லாரி. அதன் பாதிக்கும் மேலான பகுதிகள் இரும்புக் கனிமச் சுரங்கங்களைக் கொண்டது. 2008-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நூறு கோடி டன்கள் இரும்புக் கனிமங்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பூமிக்கடியில் சுரங்கங்கள் வெட்டி, தோண்டி எடுக்க வேண்டிய சிரமம் கூட கிடையாது. பூமியின் மேல் பரப்பில் திறந்தவெளி “சுரங்கம்” வெட்டினால் போதும் என்கிறவாறு சிறு சிறு குன்றுகளாகக் குவிந்து கிடக்கின்றன. அதில் 60 சதவீதமானவை இரும்பு மாவைப் போன்ற உயர் ரகத்தைச் சேர்ந்தவை. சீனாவில் 2008-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கான கட்டுமானத் தேவைகளின் காரணமாக எஃகு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. பெல்லாரி உயர்ரக இரும்புக் கனிமத்தில் 65% இரும்பு உலோகம் கிடைப்பதால் சீனத்தில் கூடுதலான விலையும் கிடைத்தது.

இப்போதைய கணக்கின்படி, ஒரு டன்னுக்கு இரும்புக் கனிமத்துக்கு வெறும் 27 ரூபா மட்டும் அரசுக்குச் செலுத்திவிட்டு, ஒரு டன் இரும்பை 7000 ரூபாக்கு விற்று நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபா வீதம் பெல்லாரி சகோதரர்கள் குவித்தார்கள். இந்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிமத் துறையின் கணக்கின்படி, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு பெல்லாரி இரும்புக் கனிம வளத்தை 30 ஆண்டுகளில் வெட்டி எடுக்கவேண்டும். ஆனால், ஆறே ஆண்டுகளில் எல்லாவற்றையும் சூறையாடிவிடும் வேகத்தில் ரெட்டி சகோதரர்கள் அக்கனிமத்தை வெட்டியெடுத்து நாடு கடத்தி வருகிறார்கள். இவர்களின் இலாபவெறியில் பெல்லாரியில் இரும்புக் கனிமக் குன்றுகள் கரைந்து போகின்றன. ரெட்டி சகோதரர்களிடம் பணக் குன்றுகள் உயர்ந்து கொண்டே போகின்றன.

இதைப் பார்த்து, இரும்புக் கனிமங்கள் எங்கே கிடைக்கின்றன, எப்படி, எங்கே ஏற்றுமதி செய்வது என்று கூட அறியாத திடீர் பணக்காரக் கொள்ளைக் கூட்டம் குத்தகை கேட்டு அரசிடம் சாரிசாரியாகப் படையெடுத்தது. பெல்லாரி மாவட்டத்தின் ஹோஸ்பட் அல்லது சந்தூர் வட்டத்தின் ஏதாவது வரைபடத்தையும் ஒரு கிராமத்தின் பெயரையும் கொடுத்து, ஏதாவது ஒரு எல்லையைக் குறிப்பிட்டு குத்தகைக்கு அரசிடம் விண்ணப்பித்தார்கள். அதைச் சோதித்தறியும் தகுதியுடைய அதிகாரிகள் மத்திய, மாநில அரசிடம் கிடையாது. இலஞ்சம் வாங்கிக் கொண்டு மானாவாரியாக குத்தகை உரிமம் கொடுத்தார்கள். இப்படி ஒரு குறுகிய காலத்தில் 158 குத்தகை உரிமைகள் வழங்கப்பட்டு விட்டன.
தடைகளைத் தகர்த்தது

ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கக் கொடி

கனிமங்கள் வைத்துள்ள முதலாளிகள் யாராவது சில தொழிலாளர்களை வைத்துக் கொண்டு ‘மானாங்கானி’யாக கனிமங்களை வெட்டி, விருப்பப்படி லாரியில், கப்பலில் ஏற்றிக் கொண்டு போ விற்றுவிட முடியாது. அப்படிச் செய்தால் நாட்டுவளம் அராஜகமாகச் சூறையாடப்பட்டு சுற்றுச்சூழல் கேடுகள் விளையும் என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே சுரங்கங்கள் வெட்டுவதற்கும் தொழில் நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளும், வரம்பீடுகளும், விதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. சுரங்க நிர்வாகிகளுக்கான சான்றிதழ் பெற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் கனிமம் வெட்டி எடுக்கப்பட வேண்டும். வெடிபொருட்களைப் பயன்படுத்துவதாலும், பணியாற்றுபவர்களின் சுவாசம் பாதிக்கப்படுவதும் விபத்துக்கான வாப்புகள் அதிகமாக உள்ளதாலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுரங்கத்திலும் குறிப்பிட்ட அளவுதான் (மண் சரிவும் விபத்தும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆறு மீட்டர் ஆழம் வரைதான்) வெட்டியெடுக்க வேண்டும். ஒரு சுரங்கத்துக்கும் மற்றதுக்கும் குறிப்பிட்ட இடைவெளி விடவேண்டும். வனங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் காடு சாராத நடவடிக்கைகளில் ஈடுபடவும் கூடாது. வெட்டியெடுக்கப்படும் கனிமத்தை ஒதுக்கப்பட்ட குத்தகைப் பகுதிக்கு வெளியேயோ, ஏற்றுமதிக்காக துறைமுகங்களிலோ இருப்பு வைக்கும்போது அரசு புறம்போக்கு இடங்களில் குவித்து வைக்கக் கூடாது. லாரிகளில் குறிப்பிட்ட அளவுக்குத்தான் கனிமச் சுமையேற்றலாம். அதையும் தார்பா போட்டு மூடித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

இத்தனையையும் மேற்பார்வையிட்டு, சோதித்தறிந்து, அமலாக்க வேண்டிய பொறுப்புடையது மைய அதிகார அமைப்புக்குழு (சி.ஈ.சி). ஆனால், அதற்கென்று உள்ளூரில் அதிகாரிகள் கிடையாது. கனிம மற்றும் தாதுப் பொருட்கள் துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை, மத்திய வருவா மற்றும் தீர்வுத்துறை, துறைமுகத்துறை மற்றும் போலீசு ஆகிய அரசுத் துறைகளின் அதிகாரிகளைக் கொண்டுதான் அப்பணிகள் செயல்படுத்தப்பட வேண்டிய நிலையே உள்ளது. அரசுத்துறை அதிகாரிகளைத்தான் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் விலைக்கு வாங்கிவிட முடியும். இந்த உண்மையை அறியாத சுரங்க முதலாளிகளே கிடையாது. அதிலும் குறிப்பாக பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் ஆள்பலம் – குண்டர்படை, பணபலம், அதிகாரபலம்மிக்கவர்கள். அவர்கள் தமது நரித்தனமான மூளையைப் பயன்படுத்தி கர்நாடகாவின் கனிம வளங்களைச் சூறையாடுவதில் வேறு எவரும் எட்டமுடியாத உச்சத்துக்கு போவிட்டார்கள். விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், வரம்புகள், சட்டவிதிகள் எல்லாவற்றையும் தகர்த்து, பல பத்தாயிரம் கோடி ரூபா மதிப்புடைய இரும்புக் கனிமத்தை ஒரு சில ஆண்டுகளில் கடத்தி விற்றுள்ளார்கள், பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்.

இத்தனைக்கும் ரெட்டி சகோதரர்களுக்கு பெல்லாரியில் இரும்புக் கனிமம் எடுப்பதற்கு ஒரு துண்டு நிலம் கூட குத்தகை உரிமை கிடையாது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஆசியோடு “ஓபுலாபுரம் சுரங்கக் கம்பெனி”யை ரெட்டி சகோதரர்கள் தொடங்கியது ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில்தான். அனந்தபுரத்தில் சுமார் 107 ஹெக்டேர் நிலத்தை அவர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தாலும், அங்குள்ள இரும்புக் கனிமம் ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரமானதில்லை. பெல்லாரி இரும்புக் கனிமத்துக்கு சீனத்தில் பெரும் கிராக்கி இருப்பதைக் கண்டு கொண்டு அவர்கள் தம் பார்வையை அங்கு திருப்பியபோது, அவர்கள் கால் வைப்பதற்கு கூட பெல்லாரியில் இடம் கிடையாது. ஒருமுறை குத்தகைக்கு விடப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு அதை இரத்து செய்ய முடியாது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிப்பதற்காக வரும்போதுதான் ரத்து செய்யலாம். இவ்வாறு பெல்லாரியில் மட்டும் 100 குத்தகைகளும், அருகிலுள்ள சித்திர துர்க்கா மற்றும் தும்கூர் மாவட்டங்களில் 60 குத்தகைகளும் ஏற்கெனவே தரப்பட்டிருந்தன.

பெல்லாரியில் குத்தகை எடுப்பதற்கு இன்னமும் 20 ஆண்டுகளுக்கு ரெட்டி சகோதரர்கள் காத்திருக்க வேண்டும். என்ன செய்வது? பணத்தை வீசி எறிந்தால் ரெட்டி சகோதரர்களுக்குச் சேவை செய்ய ஒரு சதிகார வழக்கறிஞர்கள் கூட்டம் ஆந்திராவில் காத்திருந்தது. அவர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். பெல்லாரியில் ஏற்கெனவே குத்தகை எடுத்துவிட்டு, இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான இயந்திர மற்றும் போக்குவரத்து வசதியில்லாதவர்கள் பலர் இருந்தனர். குத்தகைக்கு எடுத்து இரண்டு ஆண்டுகளில் வேலை தொடங்காவிட்டால் குத்தகை இரத்து செய்யப்படும். அப்படிப்பட்டவர்களைப் பிடித்து கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களின் பெயரில் உள்ள உரிமத்தைப் பயன்படுத்திக் கொள்வது; குத்தகைதாரர்களுக்கிடையேயான தகராறுகளைப் பயன்படுத்தியும், பணியாத குத்தகைதாரர்களை குண்டர்படையை வைத்து தாக்கியும் மிரட்டியும் வெளியேற்றிவிட்டு சுரங்கங்களை ஆக்கிரமித்துக் கொள்வது; போலி உரிமத்தைக் காட்டியும் இலஞ்சம் கொடுத்தும், அண்டை ஆந்திராவின் அனந்தபுரத்து சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கனிமம் என்று கணக்குக் காட்டியும் துறைமுகங்களுக்குக் கடத்திக் கொண்டு போ ஏற்றுமதி செய்துவிடுவது – இவைதான் சதிகார வழக்கறிஞர்களின் ஆலோசனை. இனி என்ன! களத்தில் குதித்த ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கக் கொடி ஏற்றப்பட்டது!

ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் சாதனை!

“குருவி” திரைப்படத்தில் காட்டப்படும் கடப்பா ரெட்டிகளின் கனிம சுரங்கத் தொழில் கொடூரத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமானது பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் கொடூரம். அந்தப் படத்தில் காட்டப்படுவதைவிடப் பிரம்மாண்டமான பல ஏக்கர் நிலத்தில் ரெட்டி சகோதரர்கள் நவீன மாளிகையை அரண்மனையைப் போல கட்டிவருகிறார்கள். அரை கி.மீட்டருக்கு நீண்ட நெடிய மதில் சுவர்களைக் கொண்ட பாதையில் கண்காணிப்பு காமிராக்களைக் கடந்துதான் அந்த மாளிகையை அடைய முடியும். ஒரு ஏக்கர் பரப்பில் 60-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட புதுக்கட்டிடம் எழுப்பப்படுகிறது. குண்டு துளைக்க முடியாத பாதுகாப்பு அறைகள், இரவுப் பார்வை உடைய அவர்களது ஹெலிகாப்டர்கள் இறங்கக் கூடிய மேடை, நீச்சல் குளம், நவீன உடற்பயிற்சிக் கூடம், சாரிசாரியான கார்களில் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்புப் படையினர் என சினிமாவை விஞ்சுகிறது அந்த மாளிகை. அந்த மாளிகையை ஒட்டி, அதைபோலவே எல்லா வசதிகளும் நிரப்பிய மற்றொரு மாளிகை அவர்களின் நெருங்கிய சகாவும் கர்நாடகா மருத்துவ அமைச்சருமான சீறீராமுலுவுக்கும் உள்ளது.

இவ்வளவு பணத்தையும் சோத்துக்களையும் ஒரு குறுகிய காலத்தில் ரெட்டி சகோதரர்களால் எப்படிக் குவிக்க முடிந்தது?. பெல்லாரியில் உள்ள 68 கனிம வயல் குத்தகைகாரர்களின் 48 பேர்களுடன் மேல் குத்தகை ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். பணியாத குத்தகைதாரர்களின் கனிம வயல்கள் மீது குண்டர் படையை ஏவி ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

பெல்லாரியில் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கனிமத்தை காட்டுவழியே லாரிகளில் கடத்திக் கொண்டு வந்து இந்த ஏ.ஜி.கே.சுரங்கப் பகுதியில் குவித்து வைத்து விடுவார்கள். பிறகு, இக்கனிமம் முழுவதும் ஆந்திராவில் வெட்டியெடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டுவார்கள். கர்நாடகாவில் கள்ளத்தனமாக இரும்புக் கனிமத்தை வெட்டியெடுப்பதற்காக ஆந்திரா-கர்நாடகாவின் எல்லையையே அராஜகமாக மாற்றி அமைத்துக் கொண்டார்கள். எல்லைக் கற்களை அவ்வப்போது ரெட்டியின் ஆட்களே பிடுங்கி நட்டுக் கொள்வார்கள். ஆண்டுக்கு 2,3 முறை இப்படி நடக்கும். யாராவது புகார் கொடுத்து மேற்பார்வையிட அதிகாரிகள் வந்தால் இலஞ்சம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஒருபாறைக் கோயிலின் அருகே ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையைக் குறிக்கும் கல்வெட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே செய்துக்கப்பட்டிருந்தது. கோவிலோடு அதை வெடிவைத்துத் தகர்த்து வீசிவிட்டார்கள். அதன்மூலம் ஆந்திராவின் எல்லையை கர்நாடகாவுக்குள் தள்ளிப் போட்டுக் கொண்டு இரும்புக் கனிமத்தை வெட்டி எடுத்துக் கொண்டார்கள். சட்டவிரோதமாகக் காடுகளை அழித்து, இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்ததோடு, அவற்றைச் சேர்த்து வைக்கவும் கடத்திச் செல்ல பாதை அமைக்கவும் காடுகளை அழித்தார்கள்.

வெட்டியெடுக்கப்பட்ட கனிமத்தை அருகிலுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு ஒவ்வொரு லாரிக்கும் கனிம மற்றும் தாதுப் பொருட்கள் துறை மற்றும் வனத்துறை ஆகியவற்றின் “பர்மிட்கள்” வேண்டும். ஒவ்வொரு லாரியும் குறிப்பிட்ட அளவுதான் சுமை ஏற்றிச் சேல்ல வேண்டும். இவற்றைச் சோதித்தறிவதற்கு வழியில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன. ஆனால், ஸ்வத்திக் அல்லது வேறு சின்னம் பொறித்த அட்டைகளை சோதனைச் சாவடிகளில் விசிறிக் காட்டிவிட்டு அந்த லாரிகள் பறக்கின்றன. துறைமுகத்தில் ஏற்றுமதியின் போதும் சோதித்தறியப்படும். ஆனால், போலி “பர்மிட்”டுக்களை தயாரித்தும், இவை எல்லாவற்றையும் மீறி இலஞ்சம் கொடுத்தும் மிரட்டியும் ஏமாற்றியும் இரும்புக் கனிமத்தைக் கடத்திக் கொண்டு போனார்கள்.

துரிதப் பணம் சம்பாதிப்பதற்காக ஒவ்வொரு லாரியிலும் ஒன்றரை அல்லது இரண்டு மடங்கு மிகை சுமை ஏற்றினார்கள். 10,000 லாரிகள் ஓட்டப்பட்டன. ஒவ்வொன்றும் நாளுக்கு 600 கி.மீ. தூரத்துக்குப் போ வந்தன. இவ்வளவு லாரிகளையும் ஓட்டுவதற்கு ஓட்டுநர்கள் கிடைக்காததால், கிளீனர்களே ஓட்டி பல விபத்துகள் நடந்தன. இவ்வளவு சுமை வாகனங்களைத் தாங்க முடியாத சாலைகள் நாசமாகின. தார்ப்பா போட்டு மூடி எடுத்துச் செல்லாததால் (அப்படிச் செய்ய கூடுதல் செலவும் தாமதமும் ஆகும்) வழியெல்லாம் இரும்புக் கனிமத் துகள் பறந்து, எங்கும் செம்மண் புழுதியாகி சுற்றுச் சூழல் நாசமாகின.

ஒருமுறை கர்நாடகா ஊழல் தடுப்பு லோகாயுதா அதிகாரிகள் சோதனையிட்டபோது எந்த லாரிக்கும் உரிம ஆவணங்கள் “பர்மிட்டுகள்” கிடையாது. இரண்டு கோணிப் பைகள் நிறைய போலி ஆவணங்கள் பிடிபட்டன. 200 கோடி ரூபா மதிப்புடைய இரும்புக் கனிமங்கள் கைப்பற்றப்பட்டு துறைமுகத்தில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது. அவற்றை ஒரே வாரத்தில் திருடி விற்று விட்டுக் காணவில்லை என்று அறிவித்து விட்டார்கள். சோதனையிட்ட அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். சி.பி.ஐ. ரெய்டு வருகிறது என்று அறிந்து, பெல்லாரி அருகே உள்ள தனது சுரங்கக் கம்பெனி அலுவலக ஆவணங்களை இரவோடு இரவாக அள்ளிக் கொண்டுபோன ரெட்டி சகோதரர்கள், அந்த அலுவலகத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

இப்போது 5,6 ஆண்டுகளில் 60,000 கோடி ரூபா மதிப்புடைய 71 இலட்சம் டன்கள் இரும்புக் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக ஒப்புக் கொள்ளும் மாநில, மத்திய அரசுகளும் ஆளும் கட்சிகளும் முறையே மாநில லோகாயுதா விசாரிப்பதா, சி.பி.ஐ. விசாரிப்பதா என்று இலாவணிக் கச்சேரி நடத்துகிறார்கள். கொஞ்சநாள் இது நடக்கும், பிறகு எவ்வித பாதிப்புமில்லாமல் பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் தமது “ராஜ்ஜியத்தைத்” தொடர்வார்கள். ஏனெனில் ஆந்திராவில் காங்கிரசும், கர்நாடகாவில் பா.ஜ.க.வும் அவர்களின் சட்டைப் பைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

சிதம்பரம் கூறுவதைப் போல அரசாங்கத்தின் சட்டத்திற்குச் சவாலா விளங்கும் காரணத்திற்காக காட்டு வேட்டை நடத்துவது என்றால் முதலில் ரெட்டி சகோதரர்களுக்கெதிராக நடத்த வேண்டும். ஆனால், கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் ரெட்டி சகோதரர்கள் என்ன செய்கிறார்களோ அதை மத்திய-கிழக்கு இந்திய காடுகளில் டாடா, எஸ்ஸார், வேதாந்தா, போஸ்கோ போன்ற உள்நாட்டு-வெளிநாட்டு ஏகபோக, பன்னாட்டு, தரகு முதலாளிகள் நடத்துவதற்கு வசதியாக பழங்குடி மக்கள் மற்றும் மாவோயிச நக்சல்பாரிகளை அகற்ற வேண்டியுள்ளது. அதற்காக ஏவிவிடப்பட்டுள்ளதுதான் சோனியா – மன்மோகன் – சிதம்பரம் நடத்தும் காட்டுவேட்டை.