அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நின்று நிலவட்டுமாக‚ அஸ்ஸலாமு அலைக்கும்
.தமிழக அரசால் விடுதலை மறுக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள் பல.தொடர்ந்து வருகின்ற 15.09.2009 அண்ணா நூற்றாண்டு நிறைவு நாள் பிறந்த நாளில் விடுதலை மறுக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் ஆயுள் தண்டன
சிறைவாசிகளுக்கும் விடுதலை பெற்றுத் தர வேண்டுகிறோம்.
தங்களின் பார்வைக்காக சிறைவாசிகள் தொடர்பான தகவல்களை முன்வைக்கின்றோம்.கடந்த வருட அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளின் போது 'முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளை' விடுதலை செய்திட குரல் கொடுத்த மனித நேயம் கொண்ட நல் உள்ளங்களுக்கு எங்கள் நன்றிகள்
பல.ஒட்டு மொத்த சமுதாய அமைப்புகளின் கோரிக்கையையும் அரசு நிராகரித்த நிலையில் நடந்து முடிந்த 15-வது மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இக்கோரிக்கையை சமுதாய இயக்கங்கள் அரசிடம் முன் வைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். பனிரெண்டு ஆண்டுகளாக தொடர் சிறைவாசத்தில் வைத்து, விடுதலை மறுப்பை அதிகார வர்க்கம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கையில் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை மூடி மறைத்து பேச வேண்டிய விஷயம் அல்ல.
பயங்கரவாத ஆதரவுப்பேச்சுகள் பகிங்கரமாகப் பேசப்படும் தமிழகத்தில் . . . . சமநீதி மறுக்கப்பட்டு, பாரபட்சம் காட்டப்பட்டு அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்காக உரத்து குரல் கொடுப்பதும், கோரிக்கையை வென்றெடுப்பதும் சமநீதி மற்றும் மனித நேயம் விரும்பும் அனைவரின் மீதும் கடமையும் பொறுப்புமாகும்.முதலில் . . . . 'அநீதியிழைக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை செவிமடுப்பதும்; புரிந்து கொள்வதும் அவர்கள் அவ் அநீதியிலிருந்து பாதிவிடுபட்டதற்கான அறிகுறியாகும்'எனவே, பின்வரும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பான நியாயங்களை கூர்ந்து (படிக்க) கவனிக்க வேண்டுகிறோம்.
1. பொதுவாக ஒரு மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தை கொண்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சிறைவாசிகளின் தண்டனையை குறைக்கவும், ரத்து செய்திடவும், தண்டனையை நிறுத்தி வைத்திடவும், மற்றும் விடுதலை செய்திடவும், அதிகாரம் பெற்றுள்ளது. மாநில அரசின் அதிகாரத்தை நடைமுறையில் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள . . . நீதிமன்றத்தால் மனித சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளைக் கூட இதே தி.மு.க. அரசு 1975 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தோழர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் கலைஞரை நேரடியாக சந்தித்து முன்வைத்த வேண்டுகோளை ஏற்று தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை அளிக்கப்படுகிறது. (காண்க : முரசொலி – 2008 ஜூன் நாளிதழில்)இவ்வாறான தமக்குள்ள அதிகாரத்தைக் கொண்டே தமிழக அரசு வளமையாக 10 பத்து வருடம் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை செப்டம்பர் 15-ல் விடுதலை செய்து வந்தது; இவ்வருடம், அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் என காரணம் கூறி 10 வருடத்தை 7 வருடமாக குறைத்து 1405 கைதிகளை செப்டம்பர் 15, 2008-ல் விடுதலை செய்தது.
2. இவ்வாறு வளமையாக அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்து வந்த மாநில அரசு ‘All India Committees On Prison Reforms” குழுவின் பரிந்துரைப்படி அரசாணை எண். 1762 – dated: : July1987 ஆம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டது. அவ்வரசாணைப்படி குறிப்பிட்ட Indian Penal Code குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட கைதிகளை அண்ணா பிறந்தநாள் முன்கூட்டிய விடுதலையில் ; (Premature Release) விடுதலை செய்வதில்லை.அந்த 1762ஃ1987 அரசாணையில் முன்கூட்டிய விடுதiயில் தகுதி அற்ற எந்த IPCபிரிவின் கீழும் நாம் கோரிக்கை எழுப்பிவிடும் முஸ்லிம் சிறைவாசிகள் தண்டிக்கப்படவில்லை. ஆகவே, முஸ்லிம் சிறைவாசிகள் அனைவருமே அரசாணை 1762ஃ87ன் படி செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விடுதலைக்கு தகுதி பெற்றவர்கள் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
3. குறிப்பாக ஒன்றை கவனிக்கவும் :- அரசாணை 1762ஃ87இன் படி முன்கூட்டிய விடுதலையில் தகுதி அற்ற IPC224 பிரிவின் கீழ், தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளைக் கூட தமிழக அரசு 50-வது சுதந்திர பொன் விழா (1997ம் ஆண்டு) மற்றும் கலைஞர் சட்டப்பேரவை பொன்விழா (2007ம் ஆண்டு) ஆகிய தினங்களில் தனி அரசாணை வெளியிட்டு விடுதலை செய்கிறது.ஆனால் அரசாணை 1762ஃ87இன்படி விடுதலைக்கு தகுதி பெற்றிருந்த முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தனி வழிமுறையைக் கையாண்டு தடை செய்தார்கள். (அதனை தொடர்ந்து காண்போம்.
4. வளமையாக தமிழக அரசு அரசாணை 1762ஃ87ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மட்டுமே அண்ணா பிறந்த நாள் விடுதலையை மறுத்து வந்ததையும், அந்த அரசாணை 1762ஃ87 முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தடை செய்யாது என்பதனையும் முன்னர் பார்த்தோம்.புதிய விதியின் பெயரால் செய்யப்பட்ட சதியை இங்கு காண்போம்:அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளுக்கு முன்பாக அதாவது 99-வது அண்ணா பிறந்த நாளில் (2007ம் ஆண்டு) 10 வருடம் பூர்த்தியாகி விடுதலைக்கு தகுதி பெற்றிருந்த திரு. ஜாகீர் உசேன், தண்டனை எண். 10431 மற்றும் திரு. அபுத்தாஹீர் தண்டனை எண். 10429 ஆகிய திருச்சி மத்திய சிறையிலிருந்த இரு முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தடைசெய்யும் நோக்கில் அப்போதைய சிறைத்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) R. சேகர் அவர்கள் விடுத்த வேண்டுகோள் கடிதத்தின் படி (கடித எண். 39712/PSI/2007 dated: 10.09.2007 ) உள்துறை செயலாளர் ளு. மாலதி அவர்கள் அளித்த ஒப்புதல் பதில் கடிதத்தின்படி (கடித எண். 84962/Pri IV/2007 – 2 Dated: 12.09.2007) மேற்குறிப்பிடப்பட்ட இரு முஸ்லிம்களும் ‘Communal”வழக்கில் உள்ளவர்கள் எனக்கூறி விடுதலை மறுக்கப்படுகிறது. 99 ஆவது அண்ணா பிறந்த நாள் விடுதலை உத்திரவு மாலதி அவர்கள் அளித்த ஒப்புதல் கடித தேதியில் தான் வெளியிடப்படுகிறது என்பதனை கவனிக்கவும். (காண் : அரசாணை Dated: : 12.09.2007 இவ்வுத்தரவில் எங்கும் Communalவழக்கு விடுதலைக்கு தகுதி அற்றது என குறிப்பு இல்லை)
5. இவ்வாறு 2007 ஆம் வருடம் இரு முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை மறுக்கப்பட்ட நிலையில் . . . 2008 அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் 69 முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலைக்கு தகுதி பெறுவதால் . . ; அவர்களின் விடுதலையையும், எப்படியும் தடைசெய்தே தீர வேண்டும் என்ற நோக்கில் முதலில் உள்துறை செயலாளர் மாலதி அவர்கள் சிறைத்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) அவர்களுக்கு ‘ARMS AND EXPLOSIVE ACT” வழக்குளை முன்கூட்டி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை' என்று 2008 ஏப்ரல் மாதம் ஒரு Circular அனுப்பி வைக்கிறார். இதன்படி ARMS AND EXPLOSIVE வழக்கில் தண்டிக்கப்பட்ட வெறும் 42 முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் ; மொத்தம் உள்ள 69 முஸ்லிம்களின் விடுதலைiயும் தடைசெய்யும் நோக்கில் மற்றொரு வழிமுறை கையாளப்படுகிறது. தொடர்ந்து அதனை (6)ல் காண்க. . . . (அதற்கு முன்பாக ஒரு ஒப்பு நோக்கல்: - இதே அரசு ARMS AND EXPLOSIVE ACT- இல் பதியப்பட்ட தென்மாவட்ட ஜாதிய வழக்குளை வாபஸ் பெற அதிகாரம் பெற்றிருந்தது. ஆனால், இன்று நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் தண்டனைக்கு மேல் தண்டனை பெற்று அரசு விடுதலை அளிக்க வேண்டிய சூழலில் அதிகாரம் இல்லை என சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது)6. மொத்த முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையையும் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் 15.07.2008 தடை செய்திடும் நோக்கில் சிறைத்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) அலுவலகத்திலிருந்து அனைத்து மத்தியசிறை கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதில் 'அண்ணா பிறந்த நாள் போன்ற முன்கூட்டிய விடுதலையில் Communalவழக்குகளை விடுதலைக்கு பரிந்துரை (கூட) செய்திடக்கூடாது' என்று உள்ளது. (காண்க : No. 27761/PSI/ 2008 Dated: 06.08.2008)இந்த சுற்றறிக்கையின்படி நாம் விடுதலை கோரிக்கை எழுப்பிய அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளும் Communalஎன குறிப்பிடப்பட்டு விடுதலை மறுக்கப்படுகிறது. Communalவழக்கில் இல்லாத பல முஸ்லிம் வழக்குகளும் Communalஎனக் குறிப்பிட்டு விடுதலை மறுக்கப்;படுகிறது.
அதே வேளையில் தி.க. (நாத்திக) பிரமுகர்களை கொன்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்துத்துவவாதிகளான கிருஷ்ணன் தஃபெ. ராமசாமி, தண்டனை எண். 75515, சக்திவேல் மற்றும் முருகேஷ் ஆகியோர் எவ்வித Communalதடையும் இன்றி கோவை மத்திய சிறையிலிருந்து அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டனர்.இங்கு குறிப்பாக கவனித்திட வேண்டியது, இந்த புதிய Communalஎன்ற விதிமுறையின் பெயரால் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் விடுதலை மறுக்கப்பட்டவர்கள் முஸ்லிம் சிறைவாசிகள் மட்டுமே. எனவே, இச்சுற்றறிக்கை முழுக்க, முழுக்க முஸ்லிம்களின் விடுதலையை தடைசெய்திடவே அனுப்பப் பட்டிருக்கிறது. சுற்றறிக்கையின் விபரீதத்தை உணர்ந்த நாம் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் தலைமையில் கோவையில் 25.08.2008 அன்று சுற்றறிக்கையை திரும்பப் பெறக்கோரி
ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மேற்கொண்டு இதன் விபரீதத்தை இஸ்லாமிய இயக்கங்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.
7. இவ்வாறு 11 ஆண்டுகளாக சிறையிலிருந்த முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை பரிசீலனைக்கு கூட எடுக்கப்படாமல் விடுதலை மறுக்கப்பட்ட நிலையில் . . . தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலிருந்தும் 7வருடம் மட்டுமே பூர்த்தி செய்திருந்த 1405 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 15.09.2008 அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுகின்றனர்.மிகக் குறைந்த வருடம், தி.மு.க. கட்சியினர் விடுதலை, லீலாவதி கொலையாளிகள் உள்பட பெரும் அளவில் ஆயுள் கைதிகள் விடுதலை என பல்வேறு வகையில் விமர்சனங்களை கம்யூனிஸ்ட், அ.தி.மு.க. மற்றும் பிற கட்சியினர் வெளியிட்ட போது தமிழக முதல்வர் வெளியிட்ட பதில் அறிக்கைகள் நம் கவனத்திற்குரியவைஅறிக்கையின் சாராம்சம் : 'நான் கட்சி பாகுபாடு எதையும் பார்த்திடவில்லை. லீலாவதி வழக்கில் உள்ளோர் தி.மு.க.வினர் என்பதற்காக உள்ளேயே வைத்திட முடியாது. விடுதலைக்கு தகுதி பெற்ற அனைத்து கட்சிக்காரர்களையும் விடுதலை செய்திருக்கின்றேன். லீலாவதி கொலையாளிகளை அரசாணை 1762ஃ87-இன் படியும் கருணையின் அடிப்படையிலும் விடுதலை செய்திருக்கின்றேன்' (காண்க: 17.09.2008 அனைத்து நாளிதழ்களிலும்)கட்சிப் பாகுபாடின்றி அரசாணை 1762ஃ87-இன்படி தகுதி பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகச் சொல்லும் கருணாநிதி அவர்கள், அதே அரசாணைப்படி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு தகுதி பெற்றிருந்தும் Communalஎன்ற பாகுபாடு காட்டப்பட்டது ஏன்? 7வருட சிறைவாசிகள் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட போது, கோவை மத்திய சிறையில் 11 வருடங்களாக உள்ள ஆயுள்தண்டனை கைதி (எண். 1748) அபுத்தாஹீர் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து படுத்த படுக்கையாக இருந்தபோதும் விடுதலை மறுக்கப்பட்டது ஏன்? மனநோயாளியாக இருந்து வரும் ஹைதர் அலி 14 வருடங்களை கடந்தும் விடுதலை செய்யப்படாமல் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பது ஏன். . . ?மேலும் 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை தொடர்பாக 2008 அக்டோபர் மாத நாளிதழ்களின் விமர்ச்சனம் செய்த ஜெயலலிதாவுக்கு கலைஞர் அளித்த பதில் அறிக்கை . . . .'கைதிகளை விடுதலை செய்வது என்பது பல்வேறு மாநில அரசிலும் நடைபெற்று வரும் ஒரு நடைமுறை. மேற்கு வங்க அரசு பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுளை விடுதலை செய்துள்ளது. மராட்டிய மாநில காங்கிரஸ் அரசு மகாத்மா காந்தி படுகொலைகாரன் கோபால் கோட்சேவை விடுதலை செய்துள்ளது. நானும் தூக்கு தண்டனை கைதிகளான நக்ஸலைட்டுகளை 1975ம் ஆண்டு விடுதலை செய்துள்ளேன்'. இவ்வாறு மாநில அரசின் அதிகாரத்தை ஆதாரத்துடன் பட்டியலிடும் கலைஞர் அரசு; அதே அதிகாரத்தை முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தடைசெய்திட பயன்படுத்தியது ஏன் . . ? இப்படி பல ஏன்? என்ற கேள்விகளை நாம் அரசை நோக்கி எழுப்பினாலும் . . . இந்த பிரச்சனையை எந்த அளவிற்கு இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் கையாண்டிருக்கிறது? இனி எவ்வாறு கையாளப் போகிறது என்பதில் தான் முஸ்லிம் சிறைவாசிகள் மீது ஆட்சியாளர்களின் அநீதி தொடரப்போகிறதா? அல்லது முற்று பெறப் போகிறதா? என்பதன் பதில் தங்கியிருக்கிறது.
8. தனது கூட்டணி அரசியலுக்கு பா.ம.க. தேவை இல்லை எனும்போது குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்கிறது. அதனை அறிவுரை கழகம் (நீதிபதிகள் குழு) உறுதி செய்து, பின்னர் உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில்; அதே பா.ம.க.வை தம் பக்கம் இழுக்க தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து குருவை விடுதலை செய்கிறது கலைஞர் அரசு.கலைஞர் அரசே கதி என காலமெல்லாம் கிடந்த போதும் ஒட்டு மொத்த முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளின் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விடுதலை கோரிக்கை ரத்து செய்யப்படுகிறது.கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 'மகாலிங்க நாடார்' என்ற தனிநபருக்காக நாடார் சமூகமே திரண்டெழுந்ததால் 1989-இல் கோவை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.இன்னும் மாநில அரசுகள் இது போன்று கைதிகளை விடுதலை செய்திடும் விஷயத்தில் 'பாரபட்சம் காட்டிடக் கூடாது' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் : S. B. சின்ஹா, ஹர்ஜித் சிங் பேடி ஆகியோர் 02.11.2007இல் அரியானா அரசு தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்தது. நாம் உதாரணத்திற்காக சில ஆதாரத் தகவல்களையே முன்வைத்துள்ளோம். எல்லா வகையிலும் முஸ்லிம் சிறைவாசிகள் அநீதியிழைக்கப்பட்டுள்ளனர்.எனவே, வருகின்ற அண்ணா பிறந்த நூற்றாண்டு நிறைவு நாளில் (15.09.2009) COMMUNALஎன்ற காரணம் கூறியும், ARMS And EXPLOSIVE என்ற காரணம் கூறியும் விடுதலையை தடை செய்திடாமல் இருக்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலை பெற்றுத் தர வேண்டுகிறோம்
.9. இன்னொரு தந்திரமாக அதிகாரவர்க்கம் மேற்கொள்ளும் சிக்கலையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.முஸ்லிம் சிறைவாசிகளை எந்த வகையிலும் விடுதலை செய்திடக் கூடாது என முழு முனைப்பை காட்டி வருவது காவல்துறை தான். இது வரை ஏற்பட்டுள்ள தடைகளுக்கும் அவர்களே முழு முதற்காரணம்.பொதுவாக விடுதலைக்குரிய கைதிகள் குறித்த அறிக்கை அந்தந்த சிறைகளிலிருந்தும், சிறைவாசிகள் குடியிருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தாரிடமும் மற்றும் Professional Officer – நன்னடத்தை அலுவலரிடமும் கோரப்படும். இவ் அறிக்கைகள் பாதகமாக இருப்பின் விடுதலையை தடைசெய்யலாம். ஆனால் அரசு விடுதலையை நிர்ணயித்து விட்டால் அதற்கு ஏதுவாகவே மேற்குறிப்பிட்ட அறிக்கைகள் அனுப்பிட அனைத்து துறையும் ஒத்துழைக்கும்.ஆனால் முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் ஒரு புறம் அரசு COMMUNAL, ARMS And EXPLOSIVE என விடுதலையை மறுக்க் மறுபுறம் காவல்துறை, சிறைத்துறை மற்றும் Professional Officers ஆகியவற்றிலிருந்து பாதகமான அறிக்கைகளே முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் வழங்கப்பட்டது. 2008 செப்டம்பர் 15-ல் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை மறுக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்த தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரிடம் 'காவல்துறை, சிறைத்துறை அறிக்கைகள் பாதகமாக வந்துள்ளதால் அரசு ஒன்றும் செய்திட இயலாது' என்ற பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயம் அதிகார வர்க்கம் ஏற்படுத்தியுள்ள COMMUNAL, ARMS And EXPLOSIVE என்ற தடைகளை அரசு நீக்கினாலும் மேற்குறிப்பிட்ட பாதகமான அறிக்கைளால் விடுதலை செய்திட இயலவில்லை என காரணம் கூறிடலாம்.எனவே, எவ்வித நிபந்தனையுமின்றி 2007 மற்றும் 2008 அண்ணா பிறந்த நாளில் விடுதலை மறுக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் ஆயள் தண்டனை சிறைவாசிகளுக்கும் வருகின்ற அண்ணா நூற்றாண்டு பிறந்த நிறைவு நாளில்
15.09.2009 விடுதலை அளிக்க தமிழக முதல்வரை வலியுறுத்திட வேண்டுகிறோம்.
தமிழக சிறைகளில் உள்ள
விடுதலை மறுக்கப்பட்ட முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் : -(குண்டு வெடிப்பு வழக்கு சிறைவாசிகள்)
வ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை1. ஹைதர் அலி(மனநிலை பாதிக்கப்பட்ட 14 வருடங்களாக சிறையில் இருக்கிறார்) 6358 மதுரை
2. எஸ்.ஏ. பாஷா 3244 கோவை
3. முஹம்மது அன்சாரி 10661 கோ
வை4. நவாப்கான் 10663 கோவை
5. தாஜுதீன் 10662 கோவை
6. பாஷித் 10664 கோவை
7. ஒஜீர் 10665 கோவை
8. சித்திக் அலி 10667 கோ
வை9. முஹம்மது அலிகான் குட்டி 10666 கோவை
10. ஊம்பாபு (எ) மஜீத் 3239 கோ
வை11. அப்துல் சலாம் 10672 கோவை
12. அஸ்லம் 1485 கோவை
13. சிராஜ் 10673 கோவை
14. அப்பாஸ் 10674 கோவை
15. சையது ஜபீர் அஹமத் 1484 கோவை
16. இஸ்மாயில் 10675 கோவை
17. ஜாபர் 10676 கோவை
18. அம்ஜத் அலி 10677 கோவை
19. அமானுல்லா 6580
20. ஜஹாங்கீர் 10678 கோவை
21. முஹம்மது முத்து 10679 கோவை
22. ஷர்புதீன் 6583 கோவை
23. ஹக்கீம் டு.ஆ. 10680 கோவை
24. அபுதாஹீர் 10681 கோவை
25. முஹம்மது ரபி 10682 கோவை
26. நூர் முஹம்மது 10683 கோவை
27.ஒஜீர் பாஷா 10684 கோவை
28. இப்ராஹிம் பாபு 10685 கோவை
29. ஹக்கீம் 10686 கோவை
30. ஹக்கீம் 10687 கோவைவ.
எண். பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை
31. மோனப்பா (எ) அசன் 10711 கோவை
32. அப்துல் ரஸாக் 10710 கோவை
33. முஹம்மது ஆஜம் 10709 கோவை
34. சாந்து முஹம்மது 10708 கோவை
35. ர்pயாஸ் அஹமது 10707 கோவை
36. சலீம் 10701 கோவை
37. ஜுபைர் 3243 கோவை
38. சையது முஹம்மது புகாரி 10717 கோவை
39. முஜிபுர் ரஹ்மான் 10725 கோவை
40. முஹம்மது அலி 10727 கோவை
41. முஜிபுர் ரஹ்மான் 10728
42. ஜாகீர் உசேன் 1770 சென்னை புழல்
43. அபூபக்கர் சித்தீக் 832 சென்னை புழல்
44. காஜா நிஜாமுதீன் 843 சென்னை புழல்
45. மூஸா 9400 பாளையங்கோட்டை(5) தாஜுதீன், (19) அமானுல்லாஹ், (45) மூஸா மூவரும் குண்டு வெடிப்பு வழக்கில் எவ்வித ஆயுத வெடிபொருள் சட்டத்தின் கீழும் தண்டிக்கப்படவில்லை
வ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண்.
மத்திய சிறை
46. யாசுதீன் 3287 கோவை
47. இப்ராஹிம் 10900 கோவை
48. ஆரூண் 10852 கோவை
49. சம்சுதீன் 6582 கோவை
50. ஹக்கீம் 6581 கோவை
51. சலாவுதீன் 76888 கோவை
52. அபுதாகீர் (இரு சிறுநீரகங்களும் செயலிழந்துடன் தொடர் சிகிச்சையில் உள்ளார்)
நுNசு 1478 கோவை
53. ரஹ்மத்துல்லாஹ் 7369 பாளையங்கோட்டை
54. சித்தீக் 7368 பாளையங்கோட்டை
55. சேக் ஜிந்தா மதார் 7370 பாளையங்கோட்டை
56. ஷாஜஹான் 7367 பாளையங்கோட்டை
57. இப்ராஹிம் சேலம்
58. ரிஸ்வான் சேலம்
59. அபுதாஹிர் 10429 திருச்சி
60. ஜாகீர் உசேன் 10431 திருச்சி
வ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண்.
மத்திய சிறை
61. அப்துல் காதர் (எ) உமர் பாரூக் 11997 திருச்சி
62. ஆசிக் 4110 மதுரை
63. முஹம்மது கான் 4429 மது
ரை64. சாகுல் அமீது ழுது
29 சென்னை புழல்
65. அப்துல் அஜீஸ் 841 சென்னை புழல்
7 வருடங்களுக்கு குறைவான ஆயுள் தண்டனை சிறைவாசிகள்வ. எண்.
பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை
1. அபுதாஹீர் 4346 கோவை
2. சிராஜீதீன் 4348 கோவை
3. ஷாஜஹான் 4349 கோவை
4. மீரான் மொய்தீன் 4430 மதுரை
5. இப்ராஹிம் ஷா 4056 மதுரை
6. அஜீஸ் 4883 மதுரை
ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மொத்தம்
: 71 பேர்விடுதலைக் கோரப்படும் மொத்த சிறைவாசிகள்
: 65 பேர்