அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 24, 2011

ஜன் லோக்பாலை முழுவதுமாக ஏற்க முடியாது - பாஜக!

அண்ணா ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன் லோக்பாலை முழுவதுமாக ஏற்க முடியாது என்றும் அதிலும் குறைபாடுகள் உள்ளதாகவும் பாஜகவின் மாநிலங்களைவை துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநிலங்களைவை துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா  மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள லோக்பால் மசோதா பலவீனமானது என்றும் அதே நேரத்தில் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பாலையும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 30 க்குள் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப் பட வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையும் ஏற்கப் படக் கூடியது அல்ல என்றும் இந்த விவகாரத்தில் பாஜக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு அளிக்காது என்றும் எஸ்.எஸ்.அலுவாலியா மேலும் தெரிவித்துள்ளார்.

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் கர்ணல் கடாஃபியின் வளாகத்துக்குள் கிளர்ச்சிக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்துள்ளனர்..

.
திரிபோலி வீதியில் கிளர்ச்சிக்காரர் வாகனம்
அந்த வளாகத்தில் இருந்தபடி கிளர்ச்சிக்காரர்கள் வெற்றி ஆரவாரம் செய்ததோடு வானை நோக்கி சுட்டனர் என்றும் அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அந்த வளாகத்தில் இருந்து பெருமளவில் கரும்புகை கிளம்புவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.
நெடுநேர கடும் சண்டைக்குப் பிறகு கிளர்ச்சிக்காரர்களால் கடாஃபியின் வளாகத்துக்குள் நுழைய முடிந்திருந்தது.
கர்ணல் கடாஃபியோ அவர் குடும்ப உறுப்பினர்களோ அந்த வளாகத்தில்தான் இருக்கிறார்களா என்பது இன்னும் தெரியவரவில்லை.
நேட்டோ விமானங்கள் திரிபோலிக்கு மேலே பறந்தன என்று நேட்டோ ஒப்புக்கொண்டுள்ளது என்றாலும், கடாஃபியின் தலைமையகம் மீது இவ்விமானங்கள் தாக்குதல் நடத்தின என்று கூறப்படும் தகவலை நேட்டோ உறுதிசெய்யவில்லை.
இதற்கிடையே, லிபியாவில் சண்டை அதிகரித்துள்ளதால், அங்கு அவசரமாக மருந்துகளும், பணியாளர்களும் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

5.30 இலட்சம் கள்ள நோட்டுக்கள் சிக்கியது! 5 பேர் கைது

சென்னை:  பெரியமேட்டில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சுமார் ரூ.5.30 லட்சம் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயற்சி செய்ததாக சென்னை காவல்துறையினர் 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பெரியமேட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கள்ளநோட்டு மாற்றுப்படுவதாக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு  ரகசியத் தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் முகம்மது அஸ்லம், ஆய்வாளர் ஹரிதாஸ் மற்றும் காவலர்கள் அந்த ஹோட்டலின் குறிப்பிட்ட அறையை செவ்வாய்க்கிழமை மாலை திடீர் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையில் அங்கு இருந்த ரூ.5.30 லட்சம் கள்ளநோட்டு, ரூ.90 ஆயிரம் ஓரிஜினல் நோட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக அங்கிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் (25), ஷாஜஹான் (42), சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகம்மது பரூக் (26), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமணன் (33), மேற்கு வங்களாத்தைச் சேர்ந்த மசூத்சேக் (20) ஆகிய 5 பேரை கையும் களவுமாக பிடித்து பிறகு அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேற்கு வங்காளத்தில் இருந்து கள்ளநோட்டு கடத்தி இங்கு கொண்டு வரப்பட்டு மாற்றப்படுவது தெரியவந்தது.இந்த வழக்குத் தொடர்பாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

சங்கர்ராமன் கொலை வழக்கு! நீதிபதியிடம் ஜெயேந்திரர் பண பேரம்!!

காஞ்சி சங்கர மட மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காஞ்சி பீடாதிபதி சங்கராச்சார்யா மீதான விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார்.
இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில்,   ஜெயேந்திரர், அவரது பெண் உதவியாளர் 2 இடைத்தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் குறித்து சி.டி. வெளியாகி உள்ளது. அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று அந்த உரையாடல் உள்ளது.

இது குறித்து பேசிய வழக்கறிஞர் சுந்தர்ராஜ் இந்த உரையாடல் சி.டி. உண்மைதானா? அவ்வாறு உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளரிடம் புகார் மனு கொடுத்தேன்.

அந்த மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதுவரை புதுச்சேரியில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தடைவிதிக்க வேண்டும்’’என்றும் அதில் கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஷீலா மசூத் படுகொலை! ஐ.பி எஸ் அதிகாரிக்குத் தொடர்பா?

மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த ஷீலா மசூத் என்னும் சமூக ஆர்வலர் நேற்று தன் கார் இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
மசூத் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் சுட்டுக் கொல்லப் பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் கட்டியார் தெயவித்துள்ளார். இந்தப் படுகொலை தொடர்பாக 5 தனிப் படைகள் அமைக்கப் பட்டுள்ள நிலையில் கொலையாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப் படவில்லை.
ஷீலா மசூத் இதுவரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 40 மனுக்கள் விண்ணப்பித்து வனத் துறை மற்றும் காவல் துறை சம்பந்தமான தகவல்களைப் பெற்று இருப்பதாக தெரிகிறது.
மேலும் ஷீலா மசூத் கடந்த 2010 ஜனவரி மாதம் மத்தியப் பிரதேச மாநில டி ஜி பி க்கு எழுதிய கடிதத்தில் இரண்டு வருடமாக பவான் ஸ்ரீவத்சவா என்னும் காவல் துறை உயர் அதிகாரி  தமக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்து வருவதாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.
தமது உயிருக்கு ஸ்ரீ வத்சவா என்பவரால் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார் ஷீலா மசூத்.

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு நிதி ஒதுக்க முடிவு

திருப்பூர்: இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டம், கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல் படுத்தப்பட்டது. டெண்டர் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பித்து, இத்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, அரசிடம் ஒப்பந்தம் செய்தன. இத்திட்டத்தால் ஏழைகள் பயன்பெற முடியவில்லை. சில குறிப்பிட்ட சிகிச்சைகளை, சிபாரிசு அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனைகள் மேற்கொண்டன என புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக, அத்திட்டம் கைவிடப்பட்டு, குறைகளை களைந்து, எம்.ஜி.ஆர்., பெயரில் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமல் படுத்தப்படும் என தற்போதைய அ.தி.மு.க., அரசு அறிவித்தது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மருத்துவத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நோயாளிகளுக்கு கூடுதல் வ சதி களுடன் புதிய காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்து கிறது. முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த திட்டத்தில் பயன் பெற்றவர்கள் விவரம்; எந்தெந்த மருத்துவமனை டெண்டர் பெற்றது; எவ்வளவு பணம் காப்பீடாக மக்களுக்கு வழங்கப்பட்டது; சிகிச்சையின் தரம் எப்படி இருந்தது உள்ளிட்ட விவரங் கள் அந்தந்த மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனரிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்விவரத்தை அளித்த பின், முதல்கட்டமாக 20 டாக்டர்கள், 30 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் அறிவுரைக்கேற்ப, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை மேற்கொள்ள முடியும். நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை சரிபார்ப்பது; காப்பீடு தொகையை எளிதில் பெற உதவுவது உள்ளிட்ட பணிகளிலும் இப்பணியாளர்கள் ஈடுபடுவர். இப்போதைக்கு 618 மருத்துவமனைகளின் பெயர்களுடன் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்., மாதம் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது, என்றார்.

ரேஷன் கடத்தல்,பதுக்கல் பற்றி தகவல் கொடுத்தால் சன்மானம்!

சென்னை: : தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் ரேஷன் பொருட்கள் கடத்தல் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அமைச்சர் புத்தி சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று பேரவையில் நடைபெற்ற உணவுத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பதிலளித்து பேசிய உணவுப்பொருள் வழங்கு துறை அமைச்சர் புத்திசந்திரன் அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்துக்குள் 181 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 41 ஆயிரத்து 442 புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது  4,286 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 90 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 469 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 45 ஆயிரத்து 45 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் எதிர் வரும் 2011&12ம் ஆண்டில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், கடத்தல் ஆகியவை தொடர்பாக தகவல் தருபவருக்கு வழங்கப்படும் சன்மானம் 500 ரூபாயாக உயர்த்தப்படும். போலி குடும்ப அட்டை குறித்து தகவல் தருபவர்களுக்கு 200 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக சன்மானம் வழங்கப்படும் என்றவர் மேலும் சைதாப்பேட்டை மண்டல உதவி ஆணையர் அலுவலகத்துக்கு 53 லட்ச ரூபாயில் சொந்த கட்டிடம் கட்டப்படும். வில்லிவாக்கம், சைதாப்பேட்டை,  தர்மபுரி, அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகங்களுக்கு ஐந்து வாகன்ங்கள் வழங்கப்படும்.
தண்டையார்பேட்டை வட்டத்தில் தங்கசாலையில் 60 லட்ச ரூபாய் செலவில் 1250 டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு அமைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு ரூ.50 லட்சத்தில் அமைக்கப்படும். 50 கோடி செலவில், 65 கிடங்குகள் கூடுதலாக கட்டப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.1.7 கோடி செலவில், 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும். என்று அமைச்சர் புத்தி சந்திரன் கூறினார்.

கலைஞர் "டிவி' சொத்து பறிமுதல் : அமலாக்கத்துறை தீவிரம்..

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர் "டிவி'யுடன் நடந்த பணப் பரிமாற்றத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு, அமலாக்கத் துறை விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற, டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளரான ஷாகித் பல்வாவும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதற்கு கைமாறாக, டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனம், குசிகான் பழ நிறுவனம் வழியாக, கலைஞர் "டிவி' க்கு 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலைஞர் "டிவி' நிறுவனத்தில் சோதனை நடத்தியது.
வரி ஏய்ப்பு செய்து, சட்ட விரோத பண மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் முதல், கலைஞர் "டிவி' வரையில் நடந்த பண பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில், இது தொடர்பான உத்தரவை, அமலாக்கத்துறை பிறப்பிக்க உள்ளது. இதையடுத்து, டி.பி.ரியாலிட்டி, சினியுக், குசிகான், கலைஞர் "டிவி', சொத்துக்களை பறிமுதல் செய்ய, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday, August 23, 2011

மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை ., ஹசாரேவுடன் பேச்சு நடத்த குழு அமைப்பு ?

புதுடில்லி: ஹசாரே உண்ணாவிரதம் இன்றுடன் 8 வது நாளை தொட்டிருக்கிறது. அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என பிரதமர் மன்மோகன்சிங், மூத்த அமைச்சர்களான பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ. கே., அந்தோணி ஆகியோருடன் இன்று காலை முதல் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார். 
நாளை மாலை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று எதிர்கட்சிகள் ஹசாரே விவகாரத்தை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது .கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ஹசாரே விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என பா.ஜ., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பார்லி., இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
விலாஸ்ராவ் தேஷ் முக் தூதுவர் ? : மகாராஷ்ட்டிர முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ் முக் ஹசாரேயிடம் பேசும் தூதுவராக நியமிக்கலாமா என்பது குறித்து பிரதமர் இன்று மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பார் என்று என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தும் பிரதமரை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து எடுத்துரைத்தார். ஹசாரேயை கைது செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் காங்., எம்,பி., கூறியிருக்கிறார். இத்துடன் பிரதமர் இந்த விஷயத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில் இன்று உண்ணாவிரத மேடையில் பேசிய ஹசாரே நான் எனது போராட்டத்ததை முடித்துக்கொள்ள மாட்டேன். நான் நலமாகத்தான் இருக்கின்றேன். எனது டாக்டர் குழுவினர் என்ன சாக விட்டு விட மாட்டார்கள் என்றார். மார்க்., கம்யூ பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்த நிருபர்களிடம் பேசுகையில்; ஹசாரே விவகாரத்தில் உரிய முயற்சி எடுத்து போராட்டத்தை நிறுத்த வழி செய்ய வேண்டும் என்றார்.

பேசணுமா ? ராகுல் அல்லது பிரதமர் பேச்சுக்கு வரட்டும்: "லோக்பால் என்பது, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேசிய பிரச்னை. இது தொடர்பாக, எங்களுடன் பேச வேண்டும் என, அரசு தரப்பு விரும்பினால், பிரதமர் மன்மோகன் சிங் அல்லது ராகுல் உள்ளிட்டோர் தான், பேச்சு நடத்த வர வேண்டும்' என, மத்திய அரசுக்கு, அன்னா ஹசாரே குழு, கெடு விதித்துள்ளது. ஊழலுக்கு எதிராக, காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம், நேற்றும் தொடர்ந்தது. ஹசாரே குழுவினருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு, மகாராஷ்டிர மாநில அதிகாரி உமேஸ் சந்திரா சாரங்கி, ஆன்மிக தலைவர் பையூஜி மகாராஜ் ஆகியோரை, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதிநிதிகளாக, மத்திய அரசு அனுப்பி வைத்தது. இவர்கள், ஹசாரே குழுவினருடன், திரைமறைவில் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள பிரதிநிதிகள் குறித்து, ஹசாரே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான கிரண் பேடி, இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,"அரசு தரப்புடன், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, வதந்திகள் பரப்பி விடப்படுகிறது. பிரச்னையை தீர்க்க வேண்டும் என பிரதமர் விரும்பினால், பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதியை, அவர் அனுப்பி வைக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

கெடு: இதுகுறித்து ஹசாரே ஆதரவாளர்கள் கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் மீது, எங்களுக்கு திருப்தி இல்லை. லோக்பால் என்பது, ஒட்டுமொத்த நாட்டு மக்களும், பெரிதும் எதிர்பார்க்கும் தேசிய பிரச்னை. எனவே, இது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு, முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் தான், பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மாநில அளவிலான அதிகாரிகளை, பேச்சுவார்த்தைக்கு அனுப்புவது நியாயம் அல்ல. பிரதமர் மன்மோகன் சிங், காங்., எம்.பி., ராகுல் அல்லது மத்திய அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் தான், பிரதிநிதிகளாக இடம் பெற வேண்டும். பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வந்தால் தான், பேச்சு நடத்துவோம். இவ்வாறு, ஹசாரே ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹசாரே குழுவின் இந்த புதிய கெடுவால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹசாரே தரப்புடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டிய சூழ்நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆலோசிப்பதற்கு, மூத்த அமைச்சர்களின் கூட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூட்டினார்.

தலைவர்கள் வீடுகள் முற்றுகை: "பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் முன், போராட்டம் நடத்த வேண்டும்' என, ஹசாரே குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்., எம்.பி.,க்கள், கமல் நாத், சுபோத்காந்த் சகாய், அகர்வால், ப்ரியா தத், பா.ஜ., கட்சியை சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி, அசோக் அர்கால் ஆகியோரது வீடுகளின் முன், ஹசாரே ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "ரகுபதி ராகவ ராஜா ராம்' என்ற பாடலை இசைத்தனர்.

8 வது நாள் : ஹசாரேயின் உண்ணாவிரத அறப்போராட்டம், இன்றுடன் 8 வது நாளாக தொடர்கிறது.
நேற்று விடுமுறை நாள் என்பதால், ராம்லீலா மைதானத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
ஹசாரே வாழ்த்து கோஷங்கள், அரசு எதிர்ப்பு கோஷங்கள் என, மைதானத்தில் திரண்டவர்கள், உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர்.
ஏழு நாட்களாக சாப்பிடாமல் இருப்பதால், ஹசாரே நேற்று மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
பெரும்பாலான நேரங்கள், படுக்கையிலேயே இருந்தார்.
ஹசாரேயை, டாக்டர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.
உண்ணாவிரதத்துக்கு முன், 72 கிலோவாக இருந்த ஹசாரேயின் எடை, தற்போது ஐந்து கிலோ குறைந்து, 67 கிலோவாகி விட்டது.
தொடர்ந்து உணவு உட்கொள்ளாமல் இருப்பதால், கொழுப்புச் சத்தை சிதைக்கும் "கீடோன்'என்ற பொருள், ஹசாரேயின் சிறுநீர், ரத்தம் ஆகியவற்றில் அதிகரித்துள்ளது. 

அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமா?

தென்னிந்திய அளவிலான லாரிகள் ஸ்டிரைக், நேற்று நான்காவது நாளாக தொடர்ந்த நிலையில், மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதால், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், அத்தியாவசியப் பொருட்களுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்ததை அடுத்து, லாரி ஸ்டிரைக் நீடிக்கிறது. இன்சூரன்ஸ், டீசல், டயர், உதிரிபாகங்கள் மீது ஏற்றப்பட்ட விலை உயர்வைக் குறைக்க வேண்டும். 2010 டிச., 4ல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக.,18ம் தேதி நள்ளிரவு முதல், லாரி ஸ்டிரைக் துவங்கி, நடந்து வருகிறது. தென்னிந்திய அளவிலான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், ஆக.,18ம் தேதி நள்ளிரவில் துவங்கிய லாரி ஸ்டிரைக், நேற்று நான்காவது நாளாக நீடித்தது. போராட்டத்திற்கான முன் நடவடிக்கையாக, ஆகஸ்ட் 14 முதல், வட மாநிலங்களுக்கான சரக்கு புக்கிங் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் நேற்று வரை, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.
வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த, பெரிய வெங்காயம், பூண்டு, மளிகைப் பொருட்கள், கோதுமை, சர்க்கரை, உரம் ஆகியவற்றின் வரத்து, முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், பெரிய வெங்காயம், பூண்டு, பருப்பு ஆகியவற்றின் விலையில், நேற்று முதல் ஏறுமுகம் ஏற்பட்டுள்ளது.
லாரி ஸ்டிரைக் தொடரும் பட்சத்தில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை பல மடங்கு உயர, வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மத்திய தரை வழிப் போக்குவரத்து கமிஷனர் உபாத்யாயா தலைமையில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோபால் நாயுடு, தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி ஆகியோருடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. "இந்தப் பேச்சுவார்த்தையில், உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதன் காரணமாக, லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெறும்' என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும், தற்போது பண்டிகை சீஸன் என்பதால், ஜவுளி, அத்தியாவசியப் பொருட்கள், சர்க்கரை, உரம் உள்ளிட்ட பொருட்கள், தேக்கம் அடைந்துள்ளதால், இவற்றின் விலையும் அதிகரிக்கும் என தெரிகிறது.

தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் சென்னகேசவன் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமின்றி, தென் மாநிலங்கள் அனைத்திலும், 95 சதவீத லாரிகள் இயங்கவில்லை. நான்கு நாளில், சேலத்தில் மட்டும், 1,000 கோடி, தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள், குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.
மத்திய அரசு, பொதுமக்களின் நலன் கருதி, இந்த ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, எங்களின் சங்க நிர்வாகிகள், டெல்லியில் முகாமிட்டு, மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் வரை, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்பட வில்லை. பொதுவாக, லாரி ஸ்டிரைக் துவங்கும் முதல் இரண்டு நாட்களிலேயே, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஸ்டிரைக் முடிவுக்கு வரும். ஆனால், மத்திய அரசு இந்த முறை மெத்தனமாக இருப்பதுடன், மவுனம் சாதித்து வருவதால், நான்காவது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்க முயற்சி!!!

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 இந்தத் திருத்தங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே முடக்கக் கூடும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று போற்றப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் துறைகள் தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை அறிய இந்த சட்டம் பேருதவியாக உள்ளது. மேலும், அரசுத் துறைகளில் நடைபெறும் பல ஊழல்களையும் இந்த சட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
 இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை டிசம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது.
 இந்தத் திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை  டிசம்பர் 27-ம் தேதிக்குள்  usrti-​dopt​@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய திருத்தங்கள்: தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும். தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.
 விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதற்காக ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிட்டால், அதற்கான செலவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும்.
 தபால் செலவு ரூ.10-க்கு அதிகமானால், கூடுதல் செலவுத் தொகையை விண்ணப்பதாரர்தான் செலுத்த வேண்டும்.
 மேல் முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என்பது தகுதியுடைய நபர்களால் சான்றளிக்கப்பட வேண்டும்.
 மேல் முறையீட்டு மனு ஏற்க தகுதியில்லாத நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட ஆணையம் கருதினால், மனுதாரரை மட்டும் அழைத்து விசாரித்து, மனுவை நிராகரிக்கலாம்.
 முதல் மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவு தெரிந்த 45 நாள்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டாக வேண்டும்.
முடக்க முயற்சி: இந்தத் திருத்தங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிதைத்து, சட்டத்தையே முடக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 குறிப்பிட்ட ஒரு நிகழ்வு தொடர்பான தகவல்களைப் பெற ஒரு கேள்வி மட்டும் கேட்டால், போதுமான தகவல்கள் கிடைக்காது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. அவ்வாறு பல கேள்விகளை உள்ளடக்கிய விண்ணப்பங்களை, பல பொருள்கள் குறித்து கேள்வி கேட்பதாகக் கூறி, நிராகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
 மேலும், 250 வார்த்தைகளுக்குள் தகவல்களைக் கோர வேண்டும் என்பதும் பொருத்தமில்லாதது என்றும், பெரும்பாலான தகவல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகியும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான எஸ். சம்பத் கூறியது:
 தகவல் சேகரிக்க செலவான தொகையைச் செலுத்த வேண்டும்; கூடுதல் தபால் செலவை செலுத்த வேண்டும் என்ற காரணங்களைக் கூறி மனுதாரர்களை அலைக்கழிக்கவே இந்தத் திருத்தங்கள் உதவும்.
 மனுதாரர் மிரட்டப்பட்டு, விசாரணையில் ஆஜராகாவிட்டாலும் கூட, அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரித்து, முடிவை அறிவிக்கும் நடைமுறை இப்போது உள்ளது.
 மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றால், விசாரணை நடைபெறத் தேவையில்லை என்று இப்போது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆதிக்க சக்திகளால் மனுதாரர்கள் மிரட்டப்பட்டு, மனுக்களை வாபஸ் பெறச் செய்யும் சம்பவங்கள் இனி நிறைய நடைபெறலாம்.
 முதல் மேல்முறையீட்டு மனு மீதான முடிவு தெரிந்து, இரண்டாவது மேல் முறையீடு செய்ய இப்போது 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை 45 நாள்களாக குறைப்பதன் மூலம் மேல் முறையீட்டுக்கான வாய்ப்புகளை அரசு குறைக்கிறது.
 எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில்தான் இப்போதைய திருத்தங்கள் உள்ளன என்றார் சம்பத்.
  மக்கள் சக்தி கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான சிவ. இளங்கோ கூறியது:
 நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துள்ளது. அவர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு குறைவான மக்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் நிலையிலேயே, பல அரசுத் துறைகளின் மிக மோசமான செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன.
 எனவே, இப்போது பயன்படுத்தும் மிகக் குறைவான மக்கள் கூட இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாத வகையில், மத்திய அரசு சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.
 மத்திய அரசின் இந்த முயற்சியை தொடக்க நிலையிலேயே தடுத்தாக வேண்டும். எனவே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, இந்தத் திருத்தங்களை தடுப்பதற்கான போராட்டங்களை நடத்த எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது என்றார் சிவ. இளங்கோ.

2ஜி ஏலம் வேண்டாம் என முடிவு செய்ததே பிரதமரும் சிதம்பரமும் தான்: கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கீடு செய்வதற்கு ஏலம் விட வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தான் முடிவு செய்தனர் என்று டெல்லி நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.


ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம்:

"2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து பிரதமர், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஆகிய மூவரும் ஆலோசித்து முடிவு செய்தனர்.

அந்த ஆலோசனையின்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்பனை செய்யவோ, ஏலம் விடவோ வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் விடப்படும் முறையில் நடக்காததால், வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்படவில்லை என்று பிரதமர், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் கூறியுள்ளனர்.

எனக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என்பதனால், என்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்," என்று அந்த வாதத்தில் கனிமொழி கேட்டுக்கொண்டார்.

பிரதமர், ப.சிதம்பரம், ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தின் விவாதம் குறித்து பதிவு செய்யப்பட்ட தகவல்களும் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, தனக்கு முந்தைய அரசு கடைபிடித்த நடைமுறைகளையே தாமும் பின்பற்றியதாகவும், இதில் எவ்வித தவறும் இழைக்கப்படவில்லை என்றும் ஆ.ராசா வாதிட்டுள்ளார்

Qur"an Verses

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மைபலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டுஅவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்.5:119
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும்உறவினர்களுக்கும்அநாதைகளுக்கும்மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.2:83
கனிவாகப் பேசுக!
உறவினர்களோஅநாதைகளோஏழைகளோ வந்து விடுவார்களானால்அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவானவார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம்தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும்,வழிப்போக்கர்களுக்கும்உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம்செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராகவீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால்அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும்வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல்இது ஹலாலானதுஇது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யைஇட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாகஎவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றிஅல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வதுஅல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும்வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ளபேதை பெண்கள் மீது அவதூறுசெய்கிறார்களோஅவர்கள் நிச்சயமாக இம்மையிலும்மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

உயர்கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT நுழைவு தேர்வு


 இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்பு IIM-ல் உள்ளMBA படிப்பு தான்அதிக பட்சமாக ஒரு வருடத்திற்க்கு ஒரு கோடி (மாதம் 8லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது.   இப்படி அதிக சம்பளம் தரும் இந்த படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்சி பெற வேண்டும்.  இதில் முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்டவகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.   

மேலாண்மை படிப்புகள் படிக்க (MBA) மத்திய அரசால் உறுவாக்கப்பட கல்விநிறுவனம்தான் IIM (Indian Institute of Management ). தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் 13 இடங்களில் IIM-கள் உள்ளன. உலக அளவில் பொருளாதாரம்மற்றும் மேலாண்மை துறையில் மிக பெரிய பொருப்புகள் வகிப்பவர்கள் இந்த IIM-ல் படித்தவர்கள்.   மிக பெரிய நிறுவங்களை நிர்வகிக்ககூடிய அளவிற்க்கு உலகதரத்தில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதுவே உலகின் முன்னனிநிறுவங்களை இங்கு ஈர்க்க காரணமாகின்றது. CAT நுழைவு தேர்வில் எடுக்கும்மதிப்பெண் IIM மட்டுமல்லாமல் பிற அரசு மறும் தனியார் மேலாண்மை கல்விநிறுவனங்களிலும் MBA சேர்வதற்க்கு பயன்படுகின்றது.

CAT-2011 நுழைவு தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பிகும் முறை :  குறிபிட்ட Axis வங்கி கிளைகளில் CAT-2011 வவுச்சரை வாங்கிஇந்த www.catiim.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.  வவுச்சர் கிடைக்கும் Axis வங்கி கிளைகளின் முகவரி இந்த இணையதளத்தில்www.catiim.in/axisbank_branch.html  உள்ளது.

விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி தேதி : செப்டம்பர் 28

விண்ணப்பத்தின் விலை : ரூ.1,600 

தேர்வு நடைபெறும் தேதி : இந்த தேர்வு அக்டோபர் 22 முதல் நவம்பர் 18 வரை தொடர்ந்து நடைபெறும்விண்ணப்பிக்கும் நபர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.


இட ஒதுக்கீடு : முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27%இட ஒதுக்கீடு உள்ளது.

தேர்வு நடைபெறும் இடங்கள் :  சென்னை மற்றும் கோவை உட்பட இந்தியாவில் 36 நகரங்களில் தேர்வு நடைபெறும்

இந்த தேர்வை பற்றி : இது கணினியில் எழுதும் தேர்வாகும்.  CAT தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது.  முதல் பகுதி Quantitative Ability & Data Interpretation.  இரண்டாம் பகுதி Verbal Ability & Logical Reasoning.  ஓவ்வொரு தேர்வு எழுத 70நிமிடங்கள் ஒதுக்கப்படும்மொத்தம் 140 நிமிடங்கள். தேர்வு எழுதும் முன் 15நிமிடம் தேர்வை பற்றி விளக்கப்படும்.

இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?

இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் பொதுவாக எப்படி பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள்புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும்.   இதற்க்காக பல்வேறு பயிற்சி மைய்யங்கள் தமிழகத்தில் உள்ளது,அங்கு சேர்ந்தும் பயிற்சி பெறலாம்.

  இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு,காரணம்இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும்அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான்உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்குஇத்த தேர்வுகள் கடினமில்லை.  மாணவர்களே!  தேர்வுகள் கடினம் என்ற தவறானசிந்தனையை குப்பையில் போடுங்கள்எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்கநம்மோடு அல்லாஹ் இருகின்றான்அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள்கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.


ராக்கிங் கொடுமையை தடுக்க 9 தனிப்படை..

நெல்லை மாவட்டத்தின் கல்லூரிகளில் ஏற்படும் ராக்கிங் கொடுமையை தடுக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்திலுள்ள கலைக்கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் புதிய மாணவ, மாணவிகளை (ஜூனியர்கள்) அங்குள்ள சில மாணவ, மாணவிகள் ராக்கிங் செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த ராக்கிங்கால் மாணவ, மாணவிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதில் அவமானம் அடைந்த ஓரிரு மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவுக்கும் சென்று விடுகின்றனர். இதனை தடுக்க நெல்லை மாவட்டத்தில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி கூறியதாவது:

நெல்லை மாவட்ட காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு அலுவலகத்தில் டெலிபோன் 0462 - 2568025ல் இயங்கி வருகிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள எல்லா வகையான கல்லூரிகளிலும் நடக்கும் ராக்கிங் கொடுமை பற்றி தகவல் பெறுவதற்காக இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி, அவர்கள் படிக்கும் கலை கல்லூரிகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் புதிதாக வந்த அல்லது ஜூனியர் மாணவ, மாணவிகளுக்கு நேரிடும் ராக்கிங் கொடுமை பற்றி தகவல் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ராக்கிங் கொடுமையை தடுப்பதற்காகவும், இதன் மீது தகுந்த நடவடிக்கையை உடனுக்குடன் எடுக்கவும் நெல்லை மாவட்டத்தில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் பெறப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"கிராமங்களுக்கு ஒளி கொடுக்க ஆசைப்பட்டேன்!'



சூரிய ஒளி மூலம் கிராமங்களில் மின்சார புரட்சி ஏற்படுத்திய ஹரிஷ் ஹண்டே: என் தந்தை பொறியாளர். நானும் ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படித்து, அமெரிக்காவில், பி.எச்டி., முடித்தேன். ஆராய்ச்சி படிப்பின்போது, உலகின் பல பகுதிகளில் இன்னும் மின்சார வசதியில்லை என்ற விஷயம் மனதை மிகவும் பாதித்தது. மாற்று சக்தியான சூரிய ஒளி மின்சாரம் பரவலாக மக்களை அடையவில்லை. அப்போது எழுந்த எண்ணம், சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பை ஏன் தொழிலாக செய்ய கூடாது என்பது தான். இந்தியா திரும்பியதும் தொழில் துவங்கும் யோசனையை கேட்டு, அமெரிக்காவில் படித்து பெரிய வேலைக்கு போவேன் என நினைத்த குடும்பத்தினர் அதிர்ந்தனர். பின், 1995ல், மின்சாரமே இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஒளியில் மின் சாதனங்கள் இயங்க பயன்படும், "சோலார் பேனல்'கள் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கினேன். இன்று எங்கள் நிறுவனம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் இல்லங்களில் விளக்கு ஏற்றியிருக்கிறது. கர்நாடகத்திலும், குஜராத்திலும், 170 பேர் வேலை செய்கின்றனர். இதுவரை விற்பனை செய்திருக்கும், "சோலார் பேனல்'களின் எண்ணிக்கை ஒரு லட்சம். இந்த வெற்றியை அடைய நான் கடந்து வந்த பாதை மிக கடினமானது. இன்று, அரிக்கேன் விளக்கில் படித்த கிராமப்புற மாணவர்கள், "ட்யூப் லைட்'டில் படிக்கின்றனர். பீடி சுற்றுதல், தையல் போன்ற தொழில்களை பெண்கள் இரவில் செய்கின்றனர். என் வெற்றியை பாராட்டி, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகள் வழங்கி கவுரவித்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்ந்தெடுத்து சந்தித்த, 20 பேரில் நானும் ஒருவன். சென்ற மாதம் எனக்கு, ஆசிய நோபல் பரிசாக கருதப்படும், "மகசேசே விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு மாத போர் முடிவுக்கு வந்தது :கடாபியை காணோம்..

 டிரிபோலி: லிபியத் தலைநகர் டிரிபோலியை நேற்று எதிர்ப்பாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியதை அடுத்து, கடந்த ஏழு மாத காலமாக நடந்த உள்நாட்டுப் போர் அங்கு முடிவுக்கு வந்தது. எனினும், லிபியத் தலைவர் மும்மர் கடாபி, 69, எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. "அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்' என உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. கடாபியின் மூன்று மகன்களை எதிர்ப்பாளர்கள் கைது செய்துள்ளனர். டுனீஷியா, எகிப்து நாடுகளை அடுத்து லிபியாவில் அதன் தலைவர் மும்மர் கடாபியை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஓரிரு நாட்களில் அந்த ஆர்ப்பாட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தன.

டிரிபோலி விழுந்தது: கடந்த சில நாட்களாக, கடாபி ராணுவத்தின் வசம் இருந்த நகரங்கள் படிப்படியாக, எதிர்ப்பாளர்கள் வசம் வந்தன. இதையடுத்து நேற்று முன்தினம், தலைநகர் டிரிபோலியை நான்கு திசைகளிலும் அவர்கள் முற்றுகையிட்டனர். நேற்று டிரிபோலிக்குள் நுழைந்த எதிர்ப்பாளர்கள், எதிர்ப்பட்ட கடாபி ராணுவத்துடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். எனினும் இந்த எதிர்ப்பு மிகச் சிறிதளவே இருந்தது. நேற்று முன்தினம் வானொலி மூலம் பேசிய கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம், தங்கள் வசம் 65 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் எதிர்ப்பாளர்கள் டிரிபோலி நகருக்குள் நுழைந்த போது அவர்களில் பெரும்பாலோர், சரணடைந்ததால் எதிர்ப்பு பெருமளவின்றி, அந்நகர் விழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட கடாபியின் மகன் கமீஸ் கடாபி, நேற்று நடந்த தாக்குதலின் போது ராணுவத்தை முன்னின்று நடத்தினார் என செய்திகள் வெளியாயின. நகரின் 90 சதவீதம் தங்கள் வசம் வந்து விட்டதாகத் தெரிவித்த இடைக்கால அரசின் செய்தித் தொடர்பாளர், மீதமுள்ள 10 சதவீதம் பகுதிகள் மட்டும் கடாபி ராணுவம் வசம் இருப்பதாகத் தெரிவித்தார்.

கடாபி மகன்கள் கைது: கடாபியின் குடியிருப்பான பாப் அல் அஜீசியாவை எதிர்ப் படைகள் முற்றுகையிட்டபோது, குடியிருப்பு வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பீரங்கிப் படைகள் வெளிவந்து தாக்குதல் நடத்தின.
அதேபோல், டிரிபோலி துறைமுகத்திலும் கடாபி ராணுவம், பதில் தாக்குதல் நடத்தியது. டிரிபோலியின் பிரதான சதுக்கமான "கிரீன்' சதுக்கத்தில் நேற்று முன்தினம் இரவு வரை கடாபி ஆதரவாளர்கள், பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். ஆனால், நேற்று எதிர்ப்பாளர்கள் அங்கு சென்ற போது, அங்கிருந்தோர் அவர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து கொண்டனர். பாப் அல் அஜீசியாவிற்குள் புகுந்த எதிர்ப்பாளர்கள் அங்கு ஒரு வீட்டில் இருந்த, கடாபியின் மகன்கள், சயீப் அல் இஸ்லாம், அல் சாடி மற்றும் முகமது ஆகிய மூவரை கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம், சர்வதேச கிரிமினல் கோர்ட் விடுத்த வாரன்ட் பட்டியலில், சயீப் அல் இஸ்லாமும் சேர்க்கப்பட்டிருந்தார் என்பதால், அவரை கோர்ட்டிடம் ஒப்படைப்பது குறித்து லிபிய தேசிய இடைக்கால அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடாபி எங்கே? : கடந்த மே மாதத்திற்கு பின் பொதுமக்கள் மத்தியில் நேரிலும், "டிவி'யிலும் தோன்றாத கடாபி, பாப் அல் அஜீசியா வளாகத்தில் இருக்கிறாரா அல்லது வேறு எங்கும் தப்பி ஓடிவிட்டாரா என்பது தெரியவில்லை.
நேற்று முன்தினம் அவர் வானொலியில் பேசிய போது, "நான் எங்கும் போய்விடவில்லை. கடைசி வரை உங்களுடன் இருப்பேன்' என்று தெரிவித்தார். அவர் டிரிபோலியில் உள்ள தஜூரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக "அல் ஜசீரா' தொலைக்காட்சி தெரிவித்தது. ஆனால் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரம் பாப் அல் அஜீசியாவில் கடாபி பல பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருப்பதாகவும், அவற்றில் ஏதேனும் ஒன்றில் பதுங்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
கடாபி தப்பியோட, தென் ஆப்ரிக்கா விமானம் அளித்ததாக வெளியான செய்தியை அந்நாடு மறுத்துள்ளது.

அடுத்து என்ன? : கடந்த ஏழு மாத கால உள்நாட்டுப் போரில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், கடந்த இரு நாட்களில் மட்டும் டிரிபோலியில் 1,500க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், லிபியாவில் அடுத்து அரசு அமைப்பது குறித்து, தேசிய இடைக்கால கவுன்சில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அதிகார மாற்றம் ஜனநாயக ரீதியில் தேர்தல் வழிமுறையில் அமைதியான முறையில் நிகழும் எனவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்: தேசிய இடைக்கால அரசின் தலைநகரான பெங்காசியில் உள்ள பிரதான சதுக்கத்தில், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடி எதிர்ப்பாளர்களின் வெற்றியைக் கொண்டாடினர். டிரிபோலி வீழ்ந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் எதிர்ப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, விரைவில் லிபியாவில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுவரை நடந்தது என்ன? : எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், பதவி விலகிய மூன்றாம் நாள், பிப்ரவரி 14ம் தேதி லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசியில் லிபியத் தலைவர் மும்மர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் துவங்கின. துவங்கிய ஓரிரு நாட்களிலேயே ஆர்ப்பாட்டங்கள் கலவரங்களாகவும் மோதல்களாகவும் மாறின.
மிஸ்ரட்டா, பெங்காசி உள்ளிட்ட கிழக்குப் பகுதி நகரங்கள் படிப்படியாக, எதிர்ப்பாளர்கள் வசம் வந்தன.
எதிர்ப்பாளர்களை அடக்க லிபிய அரசு வன்முறையைக் கையாளத் துவங்கியது.
அமெரிக்கா, ஐ.நா., மற்றும் ஐரோப்பிய யூனியன், லிபிய அரசு மற்றும் கடாபி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.
கிழக்குப் பகுதியை நிர்வகிக்க, தேசிய இடைக்கால கவுன்சில் மார்ச் 5ம் தேதி உருவானது.
அமெரிக்கா தலைமையில், மார்ச் 7ம் தேதி முதல், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் இணைந்து வான்வெளிக் கண்காணிப்பில் ஈடுபட்டன. "நேட்டோ' படைகளும் அதில் இணைந்தன.
அமெரிக்காவில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக லிபிய கண்காணிப்புக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து அந்நாடு விலகியது. மார்ச் 24ம் தேதி "நேட்டோ' பொறுப்பேற்றது.
கடாபி குடியிருப்பு வளாகம் மீது "நேட்டோ' நடத்திய தாக்குதலில் அவரது கடைசி மகன் சயீப் அல் அரப் மற்றும் பேரப் பிள்ளைகள் பலியாயினர்.
கடாபி, அவரது மகன் சயீப் அல் இஸ்லாம், லிபிய உளவுத் துறைத் தலைவரும் கடாபியின் மருமகனுமான அப்துல்லா அல் சனுஸ்ஸி ஆகியோருக்கு ஜூன் 27ம் தேதி சர்வதேச கிரிமினல் கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்தது.
இம்மாதத் துவக்கத்தில் இருந்து எதிர்ப்பாளர்கள், கடாபி ராணுவம் வசம் இருந்த நகரங்களைப் படிப்படியாகக் கைப்பற்றி வந்தனர்.
நேற்று முன்தினம் ( 21ம் தேதி), டிரிபோலியை மூன்று திசைகளிலும் முற்றுகையிட்டனர். வடக்கில் உள்ள கடற்பகுதியை "நேட்டோ' முற்றுகையிட்டது.
நேற்று தலைநகர் டிரிபோலிக்குள் எதிர்ப்பாளர்கள் நுழைந்து, கடாபியின் மூன்று மகன்களைக் கைது செய்தனர். நகரின் பெரும்பான்மையான பகுதிகள் எதிர்ப்பாளர்கள் வசம் வந்தன.

லிபியாவின் "புரட்சி வழிகாட்டி' : 1942, ஜூன் 7ம் தேதி லிபியாவின் சிர்ட் நகர் அருகில் உள்ள பாலைவனத்தில் ஒரு கூடாரத்தில் பிறந்தார். லிபியாவில் உள்ள சிறுபான்மை இனக் குழுவான "கடாப்டா' என்ற இனக் குழுவைச் சேர்ந்தவர் கடாபி.
லிபிய ராணுவ அகடமியில் 1965ல் பட்டம் பெற்றார். அக்காலகட்டத்தில் அரபு நாடுகளின் விடிவெள்ளியாகப் போற்றப்பட்ட எகிப்தின் கமால் அப்துல் நாசர் தான் கடாபியின் ஆதர்ச பிம்பமாக இருந்தார். அதனால், லிபியாவின் மன்னராட்சியைக் கவிழ்க்க படிக்கும் போதே திட்டமிட்டார்.
லிபியாவின் அப்போதைய மன்னர் இத்ரிஸ், சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த போது, 1969, செப்டம்பர் 1ம் தேதி தனது 27 வயதில் ரத்தம் சிந்தாத புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
ஆட்சிக்கு வந்த உடன், வெளிநாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு விரட்டியடித்தார்.
1969, டிசம்பர் மாதம், லிபிய ராணுவ உயர் அதிகாரிகள் கடாபியைக் கவிழ்க்க முயன்றதை எகிப்து உளவு அமைப்பு தடுத்து நிறுத்தியது.
இதையடுத்து, ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனக்கும் தனது குடும்பத்துக்குமாக மாற்றி அமைத்தார்.
தொடர்ந்து யாரும் செய்யாத "புதுமையாக' லிபியாவில் முதலாளித்துவம், கம்யூனிசம் இரண்டுக்கும் மாற்றாக,"நேரடி ஜனநாயகம்' என்ற பெயரில் மக்களின் ஆட்சியைக் கொண்டு வரப் போவதாக அறிவித்தார்.
அதன்படி தனது கொள்கைகளை வகுத்து "பச்சைப் புத்தகம்' என்ற பெயரில் வெளியிட்டார். அதன் அடிப்படையில் லிபியாவில் நிர்வாகம் அமைக்கப்பட்டது.
பெயருக்கு பிரதமர் என்பவர் நியமிக்கப்பட்டார். தன்னை நாட்டின் நிரந்தர "சகோதரத் தலைவர் மற்றும் புரட்சி வழிகாட்டி' என்று அழைத்துக் கொண்டார்.
பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத அமைப்புகளை பணம் கொடுத்து ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
சபலபுத்திக்குப் புகழ்பெற்றவர் கடாபி. இவரது மெய்க்காவல் படைகளில் உள்ளோர் அனைவரும் பெண்களே. சமீபத்தில் "விக்கிலீக்ஸ்' மூலம் இவரது பெண் சபலம் பற்றிய தகவல்கள் வெளியாயின.

கடாபிக்கு எதிர்ப்பு ஏன்? : ஜனநாயக ஆட்சி நடப்பதாகக் கூறப்படும் லிபியாவில் கடாபி தான் எல்லாமே.
மாணவர்கள் அவரது "பச்சைப் புத்தகத்தில்' உள்ள அரசியல் கொள்கைகளைப் படிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன.
கடாபியின் கடந்த 41 ஆண்டுக் கால ஆட்சியில் லிபியா எவ்விதப் பொருளாதார முன்னேற்றத்தையும் காணவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வந்தது.
அண்டை நாடுகளான எகிப்து மற்றும் டுனீஷியாவில் நிகழ்ந்த புரட்சிகள் தான் லிபிய மக்களுக்கும் தூண்டுதலாக அமைந்தன.

அடுத்து என்ன? : முதலில் கடாபியைக் கண்டுபிடிக்க வேண்டும். பின் அவர் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அவர் பிடிபடும் வரை, அவரது ஆதரவாளர்கள், கொரில்லாத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும். அதனால் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
லிபியாவில் விரைவில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்தப்படும் என தேசிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அதில், பல்வேறு இனக்குழுக்கள், கடாபியின் முன்னாள் ஆதரவாளர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனப் பலரும் உள்ளனர். அவர்களுக்கிடையில் ஒரு கருத்தொற்றுமை ஏற்படும் வரை லிபியாவின் அரசியல் ஸ்திரத் தன்மை சந்தேகத்திற்கிடமாகவே இருக்கும்.

உலகத் தலைவர்கள் கருத்து :

"கடாபியும் அவரது ஆட்சியாளர்களும் தங்களது ஆதிக்கம் முடிவுக்கு வந்து விட்டதை உணர வேண்டும். அதுதான் ரத்தம் சிந்தும் இப்பிரச்னைக்குத் தீர்வு. தான் எப்போதுமே ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கடாபி கைவிட வேண்டும். லிபியாவின் எதிர்காலம் இனி அந்நாட்டு மக்கள் கையில்'
- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

"லிபிய மக்களின் விருப்பத்தை சீனா அங்கீகரிக்கிறது. விரைவில் அங்கு நிலவரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்புகிறோம்'
- சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மா ஷாவோஷூ.

"டிரிபோலியில் நடக்கும் சம்பவங்கள், கடாபிக்கு இறுதிக் காலம் வந்து விட்டதைக் காட்டுகின்றன. தன் மக்கள் இனிமேலும் பாதிக்கப்படாமல் இருக்க அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். லிபிய மக்களைக் கொன்ற குற்றச் செயல்களை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்'
- பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.

"கடாபி தன் மீதான சர்வதேச கிரிமினல் கோர்ட் சுமத்தியுள்ள குற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். பயமில்லாத விடுதலையான, சர்வாதிகாரமில்லாத ஜனநாயகமான புதிய லிபியாவை இனி உருவாக்க வேண்டும். அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடக்க வேண்டும்'
- ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு.

"ஜனநாயக நாடுகள் எனத் தங்களைக் கூறிக் கொள்ளும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள், குண்டு வீச்சின் மூலம் டிரிபோலியைக் கைப்பற்றியுள்ளன. பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள், தொழிற்சாலைகள் என, அனைத்தின் மீதும் அவர்கள் குண்டு மழை பொழிந்தனர். லிபிய மக்கள் மீதும் உலக மக்கள் மீதும் அமைதி நிலவட்டும்'
- வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ்

எண்ணெய் வளமிக்க லிபியா : ஆப்ரிக்க கண்டத்தின், வடபகுதியில், எகிப்தின் அருகில் அமைந்துள்ள மிகப் பெரிய நாடு.
கி.மு., 8000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
லிபியாவின் கிழக்கில் எகிப்து, தெற்கில் சூடான், சாட், நைஜர், மேற்கில், அல்ஜீரியா, டுனீஷியா நாடுகள் உள்ளன. வடக்கில் மத்திய தரைக் கடல் உள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான பகுதி பாலைவனம்.
65 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு. அவர்களில் 82 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். 97 சதவீதம் பேர் "சன்னி' முஸ்லிம்கள்.
பொருளாதாரத்தில் எண்ணெய் வளம் 95 சதவீத பங்கு வகிக்கிறது.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 30 சதவீதம்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உள்ளனர்.

கடைசியில் அசைந்தார் கடாபி : வட ஆப்ரிக்க நாடான லிபியா, எண்ணெய் வளமிக்க நாடு. 1951 டிச., 24ல் இத்தாலி, பிரிட்டன் - பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிடியில் இருந்து சுதந்திரம் பெற்றது. முதலாம் இத்ரிஸ் என்பவர் சுதந்திர லிபியாவின் மன்னராக பதவியேற்றார். லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கடாபியின் முழு பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி. 1942, ஜூன் 7ல், பிறந்தார். 1956ல் லிபியா சார்பில் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்றார். ஏதென்சின் ஹெலனிக் ராணுவ அகடமியில் பயிற்சி பெற்றார். 1969, செப்.,1ல், லிபிய மன்னர் இத்ரிஸூக்கு எதிராக ராணுவ புரட்சி செய்து ஆட்சியை பிடித்தார். அன்று முதல் நேற்றுவரை இந்த பதவியை தொடர்ந்தார். இவருக்கு ஏழு குழந்தைகள்.
ஆறு மாதங்களாக, இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பலியாகினர். இருப்பினும் உறுதியுடன் போராடிய கிளர்ச்சியாளர்கள் கடாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டினர்.

போரட்டத்தின் முக்கிய சம்பவங்கள்: 2011, பிப்.,15: அதிபர் கடாபி பதவி விலகக்கோரி லிபியா புரட்சியாளர்கள் பெங்காசி நகரில் போரட்டத்தில் குதித்தனர். இது நாட்டின் மற்ற நகரங்களுக்கு பரவியது. ஆயிரம் பேர் பலியாகினர்.
பிப்.,21: லிபிய அரசு, போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என, பிரிட்டன் பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கண்டனம்.
பிப்., 22: எனது உயிரின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என அதிபர் கடாபி சவால்.
பிப்., 25: புரட்சியாளர்கள் மிசுரடா, ஜாவியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றினர்.
மார்ச் 17: புரட்சியாளர்கள் மீது லிபிய ராணுவம் தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்.
ஏப்.,30: கடாபியின் இளைய மகன் சயீப் அல் அராப், நேட்டோ படையினரின் வெடிகுண்டு தாக்குதலில் பலி.
ஜூன் 27: கடாபி மற்றும் மகன் சயீப் அல் இஸ்லாம் ஆகியோரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் பிடிவாரன்ட்.
ஆக., 21: புரட்சியாளர்கள் கிரீன் சதுக்கம் உள்ளிட்ட தலைநகர் டிரிபோலி முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர். கடாபியின் மகன்கள் சயீப் மற்றும் முகமது ஆகியோரை கைது செய்தனர்.
ஆக., 22: உச்சக்கட்ட போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேலானோர் திரண்டு, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.