Thursday, July 30, 2009
First group of 'rioters' to be tried in Iran
Iran's Judiciary has announced that the trial of the first group of 'rioters' who had provoked post-election unrest in the country will begin on Saturday.
Tehran's Public Prosecutor Office declared in a statement on Wednesday that the first court session to prosecute the suspects will be held on August 1, 2009, IRNA reported.
The statement also blasted the U.S. and Britain over their stance towards Iran's presidential election and “their interference in Iran's internal affairs which was aimed at plunging the country in post-election chaos.”
The office also hailed efforts made by Iran's security forces and the Basij volunteers who managed to "arrest the rioters and end the unrest”.
The statement said that a number of suspects were identified by their photos taken during street unrests, and thanked the Iranian nation for help in identifying them. “People's help will lead to identification of more rioters in the near future," it promised.
Ten charges were listed, including attacking military centers with weapons and fire-bombs and attacking security forces; damaging public and private properties, distributing pamphlets against the system of the Islamic Republic; relations with anti-Iranian terrorist groups such as the Mujahedeen Khalq Organization (MKO); and preparing reports for the foreign media and the enemies.
Following Iran's 10th presidential election on June 12, supporters of opposition candidates took to the streets in protest against what they described as massive "ballot rigging" and the officially-announced results that gave the incumbent Iranian President Mahmoud Ahmadinejad another term in office.
சொர்கத்தை கடமையாக்கும் செயல்கள் (உளுவிற்க்கு பின்)
|
ஒரு முஸ்லீம் அழகிய முறையில் உளுச் செய்து அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தித் தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை. என்று நபிகள் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் - உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் (முஸ்லீம் 397 )
இதே பழகத்தை இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து கடைபிடித்து வந்த பிலால் (ரலி) அவர்கள் சொர்கத்துக்குறியவர் என்று இவ்வுலகத்துலேயே நபிகளார் சுபச் செய்தி கூறியுள்ளார்கள்.
ஒரு பஜ்ருத் தொழுகையின் போது பிலால் ( ரலி) யிடம், பிலாலே! இஸ்லாத்தில் இனைந்தபின் நீர் செய்த சிறந்த அமல்
பற்றிக் கூறுவிராக. ஏனெனில் உமது செருப்போசையை சொர்கத்தில் நான் கேட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு பிலால் (ரலி), இரவிலோ பகலிலோ நான் உளுச்செய்தால் அவ்வுளுவின் மூலம் நான் தொழ வேண்டும்மென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் எனது செயல்களில் சிறந்த செயல். என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் அபுஹுரைரா (ரலி)
நூல் (புஹாரி 1149)
மேலும் இறைவனை வணங்குவதற்காக ஒருவர் ஒளுச் செய்யும் போது அவர் உறுப்புகள் செய்த பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன.
ஒரு முஸ்லீமான அல்லது முஃமினான அடியார் உளுச் செய்யும் போது முகத்தைக் கழுவினால், கண்கலால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் ( முகத்தைக் கழுவிய ) நீருடன் அல்லது நீரின் கடைசித்துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்த பாவங்கள் அனைத்தும் ( கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித்துளியுடன் வெளியேருகின்றன.
அவர் கால்களைக் கழுவும்போது கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய ) நீறோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன.இறுதியில் அவர் பாவங்களில்லிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபுஹூரைரா (ரலி)
நூல்(முஸ்லீம் 412)
ஒரு மனிதன் ஒவ்வொரு உளுவின் போதும் தொழுகையைக் கடைபிடித்து வந்தால் அவரிடம நற்செயல்கள் குடிகொள்வதுடன் தீய செயல்களும் அவறைவிட்டு அகன்றுவிடும். இது தொழுகையைப் பின்பற்றுவதால் ஏற்படும் கிடைக்கும் நன்மை என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
தொழுகையை நிலைநாட்டுவிராக !. தொழுகை வெட்கக் கேடான காரியங்களைவிட்டும் தீமையைவிட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29.45)
ஒவ்வொரு ஒளுவின்போது இரண்டு ரகாத் தொழுவது கடுமையான காரியம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் முயற்ச்சி செய்தால் சாதாரணமாக செய்து விடலாம்.
இதை அற்பமான காரியமாக நினைத்து விட்டுவிடாமல் ஒவ்வொரு உளுவின்போதும் குறைந்த பட்ச்சம் இரண்டு ரகாத்துகளாவது தொழும் பழகத்தை தொடர்ந்து கடைப்பிடித்து சொர்கத்துக்கு செல்லும் வழிகளை இலகுவாக்குவோம். இன்ஷாஅல்லாஹ்.
கருஞ்சீரகம் நோய் நிவாரணி
ஐயம்:
கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா?
வஸ்ஸலாம்.
மின்னஞ்சல் வழியாக சகோதரர் Bishrullah
தெளிவு:
கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
''கருஞ்சீரகத்தில் 'சாமை'த் தவிர அதாவது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)
பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.
- குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
- கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
- கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
- கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
- கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
- தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
- 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
- கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
- காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
- கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
- கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
- நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது
இலங்கை, 25.07.2009 சனிக்கிழமை இலங்கையின் கல் (Diamond) வர்த்தகத்தில் சிறந்து விளங்குவது பேருவலை நகரம்.
இங்குள்ள மஹகோட பகுதியில் உள்ள மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளி பிரசித்தி பெற்றதாகும். நேற்று 24.07.2009 இரவு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் திரண்டு வந்து மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியை தாக்கி சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்களை ஓடஓட விரட்டியடித்து ஆயதங்களால் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் சகோ.மாஹின் உள்ளிட்ட இருவர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். மேலுர் ஐவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும் காடையர்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை தீ வைத்து எரித்ததோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் இவர்கள் தீவைத்த காரணத்தினால் அங்கிருந்த புனித திருமறைகளும் (குர்ஆன்) மார்க்க விளக்க புத்தகங்களும் பெரும் எண்ணிக்கையில் எரிந்து சாம்பலாகி உள்ளன.
பள்ளிக்கு எதிரில் இருந்த மருந்தகம் (Pharmacy) ஒன்றும் கூட இவ்வன்முறையாளர்களால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தர்ஹா டவுன் என்று அழைக்கப்படும் இங்கு, நேற்று புஹாரி கந்தூரி வைபவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வன்முறையைத் தொடர்ந்து நாளை 26.07.2009 இப்பள்ளியில் நடைபெற இருந்த மார்க்க நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை நடைபெற இருந்த நிகழ்ச்சிகளில் மௌலவி முபாரக் மதனி, மௌலவி இஸ்மாயில் ஸலபி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் கோவை ஐயூப் ஆகியோர் உரையாற்ற இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது செய்தியாளர்
பேருவலையிலிருந்து இம்தியாஸ்
நன்றி : இஸ்லாமிய தஃவா டாட் காம்
பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க
கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது
என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
விடுகிறார்கள்.
சென்னையில் இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில்
விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை
தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து... தயங்கி தயங்கி பேசி
சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து... காதல் வளர்த்த காலம் போயே போச்சு.
நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று
கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன்
நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு... 3 மாதம் கழித்து அந்த பையனுடன்
ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர்
முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.
செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய
தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு
டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில்
ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து
மூச்சை சூடாக்குகிறது.
காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து
பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு
வீட்டிலிருந்து ரன்...
கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னையில் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக
50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வட சென்னை
மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு
குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி
பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.
அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள்
பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு... என்ற
சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து... வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு
மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம்
வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின்
எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.
இது குறித்து வட சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது.
இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க
வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால்
சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
சுற்றும் நிலை ஏற்படுகிறது.
டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க
என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும்
உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை
காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய
காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து
மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது..
பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில்
காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில்
வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம்
நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு!
வட சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு வாரம் 5 புகார்களும்,
புளியந்தோப்புக்கு 4 புகார்களும், எம்.கே.பி.நகர் போலீசுக்கு 3
புகார்களும், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் முறையே 4 புகார்களும், வருகிறது.
குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.
இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும்
கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ
தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது
ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும்
செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு,
பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.
வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல்
நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு
செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம்
செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி
போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு
ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.
ரமலானின் மூன்று பகுதிகள்
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.