குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்து சிக்கிய விவகாரத்தில் தடய அறிவியல் துறை சம்பந்தப்பட்டவர்களின் கைக்கணினியில் ஆபாசபடம் ஏதுமில்லை என்று கூறியதன் எதிர்வினையாக ஆபாச படம் பார்த்ததற்கான புதிய ஒளிப்பட ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவை தொடர்ந்து குஜராத் சட்டமன்றத்திலும் ஆளும் பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை வெடித்தது. சட்டசபை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, 2 பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தங்களது கைக்கணினி - ஐபேடில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்னையை எழுப்பி சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இந்த புகார் குறித்து உரிமைக் குழு விசாரணைக்கு அவைத்தலைவர் உத்தரவிட்டார்.