இந்துக்கள் வழிபடும் கடவுளர்களின் பட்டியலில் பசுவும் ஒன்று. அதை நாம் குறைகாண முடியாது. அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஒருவர் தனக்கு சொந்தமான எந்த ஒரு பொருளையும் விற்கும் உரிமை படைத்தவர். அந்த அடிப்படையில் மாடு வளர்க்கும் ஒருவர், அந்த மாட்டின் மூலம் பலனில்லை என்றால் அதை விற்பதற்கு அவருக்கு அனுமதியுண்டு. அதே போல் அவர் விற்கும் மாட்டை விலைக்கு வாங்கிச்செல்லும் ஒரு வர் அதை இறைச்சியாக்கி விற்பதற்கும் உரிமையுண்டு. இதில் அடுத்தவர் தலையிட எந்தவித நியாயமுமில்லை. ஆனால், ஒரு நேரத்தில் பசுவதை என்று பசுவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிய 'அவாள்கள்' இப்போது காளை மாட்டிற்கும் ஆதரவுக் கரம் நீட்டத் தொடங்கியுள்ளார்கள். இதுபற்றி ''தடை விதத்தால் தான் என்ன?'' என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ள தினமணி நாளிதழ் தலைகால் புரியாமல் உளறியுள்ளது.
Thursday, November 10, 2011
வெள்ளம் நின்றும், தொடரும் சோகம் : நம்பிக்கையூட்டிய குட்டி யானை!
தாய்லாந்து : கடந்த ஒரு வாரமாக பேசப்பட்டுவரும் தாய்லாந்து வெள்ளத்தின் சீற்றம், தற்போது குறைந்த போதிலும், அம்மக்களின் வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிறந்தது ஒரு யானைக் குட்டி.
விலங்குகளையும் விட்டுவைக்காத வெள்ளம்:
விலங்குகளையும் விட்டுவைக்காத வெள்ளம்:
நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு கடுங்கண்டனம்..!
இந்த ஊடகத்துறையினர் எல்லோரும் இப்படி ஒட்டுமொத்தமாக வாயிலும் வயிற்றிலும் 'லபோ திபோ' என்று அடித்து அலறிக்கொண்டு... எதற்கு இதுபோல காட்டமாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்..? ஊடகத்தினர் பற்றி அவர் அப்படி என்னதான் சொன்னார்..?
காரணம் இருக்கின்றது சகோ..! "ஊடகம்" என்ற இந்த காட்டுப்பூனைக்கு, இதுவரை சரியான ஒரு மணியை கட்ட முக்கிய உயர்ந்த அரசுப்பணியில் இருந்தவர்கள் எவரும் ஒரு சிறு முயற்சி எடுத்ததாகக்கூட எனக்கு நியாபகம் இல்லை. ஆனால், இவரோ... செய்தியாளர் திரு.கரன் தாப்பர்க்கு சென்ற வாரம் அளித்த CNN-IBN தன் பேட்டியில், பொதுவாக ஊடகங்களை சவுக்கை எடுத்து அடித்து விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார், தன்னுடைய காட்டமான உண்மை வார்த்தைகள் மூலம்..!
.
.
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்கள் தொடர்பாக, டிசம்பர் 1-ம் தேதி பதிலளிக்குமாறு சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் ஷரத்குமார், குசேகான் நிறுவன இயக்குநர்கள் ஆஸிப் பால்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் ஹிந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் கரீ்ம் மொரானி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி வி.கே. ஷாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 3-ம் தேதி, கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.
இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்கிடையேயான பிரச்சினைகள் மிகுந்த உறவுகளை பின்னுக்கு தள்ளி ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்று இரு நாட்டின் பிரதமர்களும் கூறியுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இந்திய பாகிஸ்தான் உறவுகள் அதளபாதாளத்துக்கு சென்றன.
மாலத்தீவுகளில் நடைபெற்று வரும் தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது இந்த இரு நாட்டுப் பிரதமர்கள் மற்றும் இதர அமைச்சர்கள் சந்தித்து உரையாடிய போதே இந்தக் கருத்துக்களை வெளியாகியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருநாட்டு வர்த்தக உறவுகள் பற்றியே முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக இந்தியப் பிரதமருடன் மாலத்தீவுகள் சென்றுள்ள பி.டி.ஐ. செய்தியாளர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
பரஸ்பர பாராட்டுகள்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தானியப் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானியும் இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது பல விடயங்களை விவாதித்ததாகவும் கூறி ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாக பாராட்டிக் கொண்டனர்.
கீலானி அவர்கள் சமாதானத்தை விரும்பும் ஒரு மனிதர் எனும் எண்ணம் அவருடனான சந்திப்புக்கு பிறகு வலுவடைந்துள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் ஒரு வெளிப்படையானவர் என்றும், தீவிரவாதம், காஷ்மீர் பிரச்சினை, நதிநீர் மற்றும் வர்த்தகம் தொடர்பான அனைத்து விடயங்களிலுள்ள பிரச்சினைகளை புரிந்து கொண்டு விவாதிக்கத் தயாராக இருக்கிறார் என்று பாகிஸ்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கவராதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரு நாட்டு உறவுகள் மிகவும் மோசமடைந்தது.
ஆனாலும் இது போன்ற பல பேச்சுவார்த்தைகள் சீர்கெட்டுபோன உறவுகளை முன்னேற்ற உதவின.
அண்மையில் பாகிஸ்தானிய பரப்புக்குள் நுழைந்த ஒரு இந்திய ஹெலிகாப்டரையும், அதன் பணியாளர்களையும் பாகிஸ்தான் உடனைடியாக விடுவித்தது போன்ற சம்பவங்கள் நம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்துள்ளன.
பேச்சுவார்த்தைகளின் மூலம் உறுதியான முடிவுகளை எடுக்க இதுதான் சரியான நேரம் என இருநாட்டுப் பிரதமர்களும் கூறியுள்ளனர்.
"கஸாபை தூக்கிலட வேண்டும்"
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மும்பை தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தானியர் அஜ்மல் கசாப் ஒரு தீவிரவாதி என்று தான் நம்புவதாகவும் அவரை தூக்கிலட வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.
இந்திய நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை எதிர்த்து அஜ்மல் கசாப் தற்போது மேல்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.
ஒசாமா பின் லாடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கவில்லையா என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அதை முற்றாக மறுத்த ரஹ்மான் மாலிக் அது மிக மிக கற்பனையான ஒரு குற்றச்சாட்டு என்றும் கூறுகிறார்.
பாகிஸ்தானின் உளவுத்துறை உட்பட பாகிஸ்தானின் நிர்வாகத்தில் யாருக்கும் பின் லாடன் கொல்லப்படுவதற்கு முன்னர் தமது நாட்டில் தங்கியிருந்தார் என்பது தெரியாது எனவும் ரஹ்மான் மாலிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் தீவிரவாதத்தை எதிர்த்து போராட பொதுவாத ஒரு உத்தி தேவை என்பதையும் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு அருகில் வந்து சென்றது அபூர்வ கிரகம்..
வாஷிங்டன் : விண்வெளியில் இருந்து கீழிறங்கிய கிரகம் ஒன்று, 8ம் தேதி இரவு பூமியை நெருங்கி வந்து சென்றதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ தெரிவித்துள்ளது. 2005 ஒய்.யூ.55 என்ற அந்த கிரகம், பூமியில் இருந்து 3.24 லட்சம் கி.மீ. வரை நெருங்கி வந்தது. 8ம் தேதி இரவு வேகமாக இது நடந்தது.
சந்திரனில் இருந்து பூமிக்கு இடையே உள்ள தூரத்தில் 0.85 பங்கு அளவுக்கு கிரகம் அருகே வந்தது.
சந்திரனில் இருந்து பூமிக்கு இடையே உள்ள தூரத்தில் 0.85 பங்கு அளவுக்கு கிரகம் அருகே வந்தது.
18 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூட்டர் 2029ல் ஓவர்டேக் செய்யும்!
வாஷிங்டன்: இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கம்ப்யூட்டர் உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் ‘பியூச்சராலஜி’ (எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன. கம்ப்யூட்டர் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
Sunday, November 6, 2011
அரசுத் துறை, போலீஸ் மின் கட்டண பாக்கி ரூ.300 கோடி: நோட்டீஸ் அனுப்ப மின் வாரியம் முடிவு
மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள், மின் கட்டணம் செலுத்தாமல், தமிழக மின் வாரியத்திற்கு 300 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. தெரு விளக்குக்காக, ஊராட்சிகள் மட்டும் 70 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பி வசூலிக்க, வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனிலும், 38 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பிலும் சிக்கித் தவிக்கிறது. மின்சாரப் பற்றாக்குறையால், அதிக விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கி, குறைந்த விலைக்கு மின் வாரியம் வினியோகம் செய்கிறது. இதனால், நஷ்டத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
மாணவன் மர்ம மரணம்மருத்துவமனை முற்றுகை
காங்கேயம்: படியூர் தனியார் ஐ.டி.ஐ.,யில் மாணவன் மர்மமாக மரணமடைந்தார்.காங்கேயத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில், காளிபாளையம் முத்துசாமி மகன் ரமேஷ்குமார் (21), படித்தார். நேற்று முன்தினம் மாலை ஐ.டி.ஐ.,யில் ரமேஷ்குமார் மயக்கமடைந்ததாக கூறி, காங்கேயம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாலை 4.30க்கு ரமேஷ்குமார் இறந்து போனார்.மாணவரின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பெட்ரோல் விலையை குறைக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம் : மம்தா மிரட்டலுக்கு "பெப்பே!'
புதுடில்லி:"பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் பெறப்படாது. அதற்கான வாய்ப்பே இல்லை' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதே நேரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மிரட்டலுக்கும் "பெப்பே' காட்டி விட்டது.
பெட்ரோல் விலை கடந்த வியாழனன்று, லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகளும், மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை வாபஸ் பெறப்படாது என, மத்திய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
தமிழகம் முழுவதும் சாலைகள், பயிர்கள் நாசம் தொடர் மழைக்கு 40 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் தொடர் மழைக்கு இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சுமார் ஸி500 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் கால்வாயில் விழுந்து பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் இதுவரை 4 முறை காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தொடர் மழை பெய்து வருகிறது. ஓரிரு நாள் மட்டுமே ஓய்ந்திருந்த மழை, இப் போது பகல், இரவு பாராமல் தொடர்ந்து கொட்டி வருகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகள் எல்லாம் தண்ணீரில் மிதக்கின்றன. தி.நகர் உஸ்மான் சாலையில் தரையில் இருந்து 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், நடந்து சென்ற பள்ளி ஆசிரியை மூடாமல் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் இதுவரை 4 முறை காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தொடர் மழை பெய்து வருகிறது. ஓரிரு நாள் மட்டுமே ஓய்ந்திருந்த மழை, இப் போது பகல், இரவு பாராமல் தொடர்ந்து கொட்டி வருகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகள் எல்லாம் தண்ணீரில் மிதக்கின்றன. தி.நகர் உஸ்மான் சாலையில் தரையில் இருந்து 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், நடந்து சென்ற பள்ளி ஆசிரியை மூடாமல் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Subscribe to:
Posts (Atom)